நிமாரி மாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிமாரி காளை
நிமாரி பசு

நிமாரி மாடு (இந்தி:निमारि) என்பது இந்தியாவைச் சேர்ந்த மாட்டு இனமாகும், இது மத்திய பிரதேசத்தின் தென்மேற்கு பகுதியான நிமாரி பிரதேசத்தில் தோன்றியது ஆகும். இந்த மாடு கிர் மாடு மற்றும் கிலரி மாடுகளிடமிருந்து தோன்றியதாக கருதப்படுகின்றன. இந்த மாடுகள் மத்திய பிரதேசத்தின் நர்மதை ஆற்றுப்பள்ளத்தாக்குப் பகுதியிலும் மகாராட்டிரத்தின் ஜல்கான் மாவட்டத்திலும் வாழ்கின்றன.[1][2]

இந்த மாடுகள் உழைப்பு மாடுகளாகும், இவை மிதமான அளவு பால்தரக்கூடியன. இவை நடுத்தர அளவு முதல் பெரிய அளவுவரை உள்ளனவாகவும், ஆக்கிரமிப்பு குணம் கொண்டவையாகவும் இருக்கின்றன. [3][4] பொதுவாக இந்த மாடுகள் சிவப்பு நிறத்திலும், ஆங்காங்கே வெள்ளை நிற திட்டுக்களுடன் காணப்படும். இவற்றின் உடல் அமைப்பு நேரானதாகவும், நீண்டதாகவும் இருக்கும். காதுகள் தொங்காமல், தடிமனாக இருக்கும். இவற்றின் குளம்புகள் வலுவானதாகவும், நேரானதாகவும் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cattle Biodiversity of India". Vishwagou. Archived from the original on 12 மார்ச் 2008. பார்க்கப்பட்ட நாள் 15 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Conservation of Madhya Pradesh Native Breeds of Cattle". Archived from the original on 25 பிப்ரவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 15 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Breeds of Livestock - Nimari Cattle". Ansi.okstate.edu. Archived from the original on 2004-09-08. பார்க்கப்பட்ட நாள் 2009-12-11.
  4. "Cattle Biodiversity of India". Vishwagou. Archived from the original on 12 மார்ச் 2008. பார்க்கப்பட்ட நாள் 15 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிமாரி_மாடு&oldid=3605654" இலிருந்து மீள்விக்கப்பட்டது