நிமலன் சௌந்தரநாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிமலன் சௌந்தரநாயகம்
Nimalan Soundaranayagam


நாஉ
மட்டக்களப்பு மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2000–2000
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 6, 1950(1950-11-06)
இறப்பு 7 நவம்பர் 2000(2000-11-07) (அகவை 50)
கிரான், இலங்கை
அரசியல் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி
தொழில் ஆசிரியர்
இனம் இலங்கைத் தமிழர்

ஆசுலி நிமலன் சௌந்தரநாயகம் (Ashley Nimalan Soundaranayagam, 6 நவம்பர் 1950 - 7 நவம்பர் 2000) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், ஆசிரியரும் ஆவார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சௌந்தரநாயகம் பாடசாலை ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியவர்.[1][2]

சௌந்தரநாயகம் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டார். ஆனாலும் அவர் தெரிவு செய்யப்படவில்லை.[3][4] மீண்டும் இவர் 2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[5]

படுகொலை[தொகு]

சௌந்தரநாயகம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் 2000 நவம்பர் 7 இல் கிரான் என்ற ஊரில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[2][6] இவரது கொலைக்கு விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தலைவரும் இலங்கை அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனே காரணம் எனக் குற்றம் சாட்டப்படுகிறது.[7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Soundranayagam, Ashley Nimalanayagam". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. 2.0 2.1 "Batticaloa MP shot dead". தமிழ்நெட். 7 நவம்பர் 2000. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=5560. 
  3. தர்மரத்தினம் சிவராம் (16 யூன் 1996). "PA's new bank". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/960616/taraki.html. 
  4. "Result of Parliamentary General Election 1994". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  5. "General Election 2000 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  6. Subramanian, Nirupama (8 நவம்பர் 2000). "TULF MP shot". தி இந்து. http://hindu.com/2000/11/08/stories/0308000f.htm. 
  7. டி. பி. எஸ். ஜெயராஜ் (16 மார்ச் 2008). "Assassinating Tamil Parliamentarians: The unceasing waves". தெ நேஷன்]]. http://www.nation.lk/2008/03/16/newsfe1.htm. 
  8. "Special Report No 17 - Rewarding Tyranny: Undermining the Democratic Potential for Peace". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு (7 அக்டோபர் 2003).
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிமலன்_சௌந்தரநாயகம்&oldid=3083144" இருந்து மீள்விக்கப்பட்டது