நிபேதிதா சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிபேதிதா சென்
பிறப்புகொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தொழில்எழுத்தாளர்
வகைஊகப்புனைவு
இணையதளம்
www.nibeditasen.com

நிபேதிதா சென் (Nibedita Sen) வங்காள புதின எழுத்தாளர் ஆவார். [1] இவர் ஆஸ்டவுண்டிங், நெபுலா மற்றும் ஹ்யூகோ விருதுகளுக்கான இறுதிப் போட்டியாளராக இருந்துள்ளார்.

வாழ்க்கை[தொகு]

சென் கல்கத்தாவில் பிறந்தார். [2] அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பாக இவர் "இந்தியாவில் பல ஆங்கில பட்டங்களைப் பெற்றுள்ளார்". இவர் தற்போது நியூயார்க் நகரில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் ஒரு விளையாட்டாளர் மற்றும் கலைஞர் ஆவார். [1]

தொழில் வாழ்க்கை[தொகு]

சென் கிளாரியன் வெஸ்ட்டில் 2015 ஆம் ஆண்டில் [1] பட்டம் பெற்றார். மேலும் ,2017 முதல் ஊக புனைகதைத் துறையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். [3]

நூலியல்[தொகு]

குறுகிய புனைகதை[தொகு]

  • "நெவர் யான் அன் எ பன்யன் ட்ரீ" ( அனதேமா, ஆகஸ்ட் 2017)
  • "லெவியதன் எசிங்ஸ் டூ மீ பியூடிஃபுல்லி " ( நைட்மேர் இதழ், ஜூன். 2018)
  • "பீஜியன்ஸ்" ( ஃபயர்சைட் காலாண்டு, ஜூலை. 2018)
  • "ஸ்பெக்சா, ஸ்டார்ட் டைனோசர்" ( ராபர்ட் டைனோசர் புனைகதை!, ஆகஸ்ட் 3, 2018)
  • "வீ சேங் யூ அஸ் இவர்ஸ்" ( தி டார்க் # 49, ஜூன். 2019)
  • "அட்வைஸ் ஃபார் யுவர் ஃபர்ஸ்ட் டைம் அட் தெ ஃபேரி மார்க்கெட்" ( ஃபயர்சைட் இதழ், ஜூலை 2019)

ஆந்தாலஜீஸ்[தொகு]

  • நெபுலா இவார்ட்ஸ் ஷோகேஸ் 54 (2020)

விருதுகள்[தொகு]

சிறந்த புதிய எழுத்தாளருக்கான 2020 ஆஸ்டவுண்டிங் விருதுக்கான இறுதிப் போட்டியாளராக சென் இருந்தார். "தெ எக்செர்ப்ட்ஸ் ஃபிரம் அன் அன்னோடட் பிப்லியோகிராபி ஆன் தெ விமன் ஆஃப் ரட்னபார் ஐலேண்ட்" நூலிற்காக 2020 சிறந்த சிறுகதைக்கான நெபுலா விருது மற்றும் சிறந்த சிறுகதைக்கான 2020 ஹ்யூகோ விருது ஆகிய இரண்டிற்கும் இறுதிப் போட்டியாளருக்கான பிரிவில் இடம்பெற்றார்.[4]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Sen, Nibedita. Website biography.
  2. Nibedita Sen at the Internet Speculative Fiction Database
  3. Nibedita Sen at the Internet Speculative Fiction Database
  4. Nibedita Sen at the Internet Speculative Fiction Database
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிபேதிதா_சென்&oldid=3305069" இலிருந்து மீள்விக்கப்பட்டது