நின்றவாறே படகு வலிக்கும் போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நின்றவாறு ஒரே துடுப்பால் படகு வலித்தல்
Lake Annecy (15279372385).jpg
உலகப் போட்டி, 2009
நின்றவாறே படகு வலிக்கும் போட்டி,2018

நின்றவாறே படகு வலிக்கும் போட்டி (Standup paddle boarding (SUP) அலைச்சறுக்கு விளையாட்டுப் போட்டியிலிருந்து தோன்றிய ஒரு நீர் விளையாட்டு ஆகும். முன்னரே இவ்விளையாட்டு தோன்றினாலும், முதன் முதலில் ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய் நகரக் கடற்கரைப்பகுதிகளில் 2013-ஆம் ஆண்டில் ஆவணப்படுத்தப்பட்டது. [1] இப்போட்டியானது, சிறு படகு போன்ற பலகையின் மீது நின்றவாறு ஒரு துடுப்பை மட்டும் கைகளால் வேகமாக படகை வலிப்பதாகும். இந்த விளையாட்டில் பல பிரிவுகள் உள்ளது. 2028-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இவ்விளையாட்டு அறிமுகம் ஆகிறது.

போட்டிகள்[தொகு]

பன்னாட்டு அலைச்சறுக்கு சங்கம், நீர் விளையாட்டுப் போட்டிகளில், பன்னாட்டு நின்றவாறு படகு வலிக்கும் போட்டிகளை பெரு (2012, 2013), நிக்கராகுவா (2014), மெக்சிகோ (2015), பிஜி (2016), டென்மார்க் (2017), சீனா (2018) மற்றும் எல் சால்வடோர் (2019) ஆகிய நாடுகளில் நடைபெற்றது. பெரிய பிரித்தானியாவில் நின்றவாறு படகு வலிக்கும் போட்டிகளை 2020-ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.[2]

ஆகஸ்டு 2020 இல், விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் (CAS), சர்வதேச அலைச்சறுக்குச் சங்கம் (ISA) மற்றும் சர்வதேச படகுப்போட்டிகள் கூட்டமைப்பு (ICF) ஆகிய அமைப்புகள், அதிகாரப்பூர்வமாக நின்றவாறு படகு வலிக்கும் போட்டிகளை நடத்தலாம் என்று தீர்மானித்தது. 2028 ஒலிம்பிக் போட்டிகளில் படகு விளையாட்டுப் போட்டிகளில் நின்றவாறே படகு வலிக்கும் போட்டி சேர்க்கப்படும் என தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.[3][4] [5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Research – Outdoor Participation – Outdoor Recreation Participation Report 2013 – Outdoor Industry Association". outdoorindustry.org. 19 திசம்பர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 ஜனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "World Record Attempt to SUP Around Great Britain". Paddling Life (ஆங்கிலம்). 2020-08-18. 2021-01-03 அன்று பார்க்கப்பட்டது.
  3. 2028 ஒலிம்பிக்கில் இணையும் புதிய விளையாட்டு
  4. "CAS rules both ISA and ICF can hold stand-up paddling events". www.insidethegames.biz. 6 August 2020. 2020-09-16 அன்று பார்க்கப்பட்டது.
  5. "CAS rules both ISA and ICF can hold stand-up paddling events". www.insidethegames.biz. 6 August 2020. 2020-09-16 அன்று பார்க்கப்பட்டது.