நினைப்பதும் நடப்பதும் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நினைப்பதும் நடப்பதும்
நூல் பெயர்:நினைப்பதும் நடப்பதும்
ஆசிரியர்(கள்):சுகி. சிவம்
வகை:கட்டுரை
துறை:சமயச் சீர்திருத்தம்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:192
பதிப்பகர்:கற்பகம் புத்தகாலயம்,
4/2 சுந்தரம் தெரு
தியாகராயர் நகர்,
சென்னை 600 017.
பதிப்பு:மு.பதிப்பு ஆகத்து 2004
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

நினைப்பதும் நடப்பதும் என்னும் நூல் சுகி. சிவம் என்பவரால் சமயச்சீர்திருத்த நோக்கில் எழுதப்பட்ட 40 கட்டுரைகளின் தொகுப்பாகும். “மதத்தின் பெயரால் நடக்கும் மடத்தனத்தை எதிர்க்கிறேன். மதங்களின் பகைமையை எதிர்த்து முடிவுகட்ட நினைக்கிறேன். ‘தமிழ் தெய்வ மொழி அல்ல’ என்பவர்களின் மண்டையில் குட்டி இருக்கிறேன். சமயப் பிரச்சாரம் என்ற பெயரில் உளறுபவர்களை வாய்மூட வைத்திருக்கிறேன். வீட்டில் இருந்து வெளியேறி ஆசிரமங்களுக்குப் போய்விட்டால் ஆன்மிகவாதியாகி விடலாம் என்று ஏமாறுகிற (ஏமாற்றுகிற) அசடுகளை நன்றாக அடையாளம் காட்டி இருக்கிறேன். ‘மதம் வேறு, ஆன்மிகம் வேறு’ என்று ஓங்கி உரைத்திருக்கிறேன். சில நேரம் புரட்சி, சில நேரம் மலர்ச்சி, சில நேரம் வளர்ச்சி, சில நேரம் பயிற்சி என்று புத்தகம் முழுவதும் விதவிதமான விஷயங்களை விதைத்திருக்கிறேன். என் பேனா முனை, ஒரு சிற்பியின் உளிபோல மேலான தனிமனிதனைச் செதுக்கவும் புதியதோர் உலகம் புதுக்கவும் எழுதுகிறது என்பதனை என் எல்லாப் புத்தகங்களையும் போல இந்தப் புத்தகமும் நிரூபிக்கும். கருமலை மீது ஜொலிக்கும் கார்த்திகை தீபம் போல காகிதமலை மீது வைத்த கருத்து தீபமே இந்நூல்” என இந்நூலைப் பற்றி அதன் பின்னட்டையில் சுகி. சிவம் அறிமுகம் செய்கிறார்.

காணிக்கை[தொகு]

“காவியுடைக் காரல் மார்க்ஸ், திரும்பி வந்த திருவள்ளுவர். பட்டி மண்டபங்களைப் பதவி உயர்த்தி பல்கலைக் கழகப் பட்டறையாக்கிய பேச்சுலக பாரதி – என் சிந்தனைகளின் செவிலித்தாய் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தமிழ் சமூக அக்கறைக்கு இந்நூல் சமர்ப்பணம்” என்னும் உரையோடு இந்நூல் குன்றக்குடி ஆதினம் தெய்வசிகாமணி அடிகளாரின் தமிழ்ச் சமூக அக்கறைக்கு காணிக்கை ஆக்கப்பட்டு இருக்கிறது.

உள்ளடக்கம்[தொகு]

  1. என்னுரை
  2. நினைப்பதும் நடப்பதும்!
  3. உண்மையான ப்ரசாதம் எது?
  4. ஆதார தர்மம் என்ன?
  5. வார்த்தைகள் பலகீனமானவை
  6. உயர உயரப் போனாலும்
  7. பிரார்த்தனை என்றால்…?
  8. எந்தக் கல் … நல்ல கல்?
  9. கடவுளா? கட்சித் தலைவரா?
  10. வித்தியாசமான வேண்டுதல்கள்!
  11. பலசாலிகள் கொக்கரிப்பதில்லை!
  12. நமக்கு எப்போது ஞானம் வரும்?
  13. யாருமிக்க பயமேன்?
  14. மரணம் முற்றுப்புள்ளி அல்ல
  15. சர்வ லோகோ சுகினோ பவந்து
  16. அம்மையா? அப்பனா? அம்மையப்பனா?
  17. ஆன்மிக அசடுகள்
  18. எது பொய்? எது மெய்?
  19. கட்சி மாறாதே! கடவுளை மாற்றாதே!
  20. முன்னாள் முதல்வரா? எந்நாளும் முதல்வரா?
  21. வரலாமா? வேண்டாமா?
  22. நிஜமான தீபாவளி
  23. காலத்தைப் போற்றுவோம்
  24. காலமா? காலண்டரா?
  25. தமிழர் திருநாள்… இந்தியர் பெருநாள்!
  26. தீயே.. உனக்கு வணக்கம்!
  27. பிறருக்கு உதவலாமா?
  28. மனைவி அமைவதெல்லாம்
  29. புண்படுத்தாதே! பண்படுத்து!
  30. வேங்கடம் என்ன? வைகுந்தம் என்ன?
  31. உயர்வென்ன? தாழ்வென்ன?
  32. இரவல் ஆத்திகர்கள்
  33. அறிவு முக்கியமா? அன்பு முக்கியமா?
  34. இந்து – இஸ்லாம் சகோதரத்வம்!
  35. கடவுளும் கத்தரிக்காயும்
  36. வாழ்தல் ஒரு வழிபாடு
  37. மார்தட்டும் மடையர்கள்
  38. நான் ஒரு பாரத புத்ரன் (கிறித்துவ மதம் பற்றிய என் அனுபவங்கள்)
  39. இரண்டு பிச்சைக்காரர்கள்
  40. கொலை செய்யப்பட்ட கோயில்கள்
  41. சொப்பனம் தானோ!