நித்திய கல்யாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பட்டி பூ
Catharanthus roseus white CC-BY-SA.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு மக்னோலியோப்சிடா
வரிசை: Gentianales
குடும்பம்: Apocynaceae
பேரினம்: Catharanthus
இனம்: C. roseus
இருசொற்பெயர்
Catharanthus roseus
L.
Catharanthus roseus

நித்தியக கல்யாணி அல்லது பட்டிப்பூ என்றும் சுடுகாட்டுப்பூ (பூச்செடி) என்று அழைக்கப்படும் செடி, மடகாசுக்கரில் மட்டுமே காணப்பட்ட ஒருவகைச் செடியாக இருந்தது. பின்னர் இது வெப்பமண்டலப் பகுதிகளுக்கும், மென்வெப்பமண்டலப் படுதிகளுக்கும் பரவியது. இச்செடியின் பூ வெள்ளை நிறத்திலோ, இளஞ்சிவப்பு நிறத்திலோ காணப்படும். பூவிதழ்கள் கூடும் நடுப்பகுதியில் அடர்ந்த சிவப்பு நிறமாகக் காணப்படும். இதன் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் காத்தராந்தசு ரோசியசு (Catharanthus roseus) என்பதாகும். இப்பூச்செடியில் இருந்து இரத்தப் புற்றுநோய் (இலூக்கேமியா) போன்ற நோய்களுக்கான மருந்துகள் படைக்கப்படுவதால்.[1] அதிகம் அறியப்படுகின்றது. குறிப்பாக வின்பிளாசிட்டீன், வின்க்கிரிசுட்டீன் போன்ற உயிர்வேதிப் பொருள்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

மடகாசுக்கரில் இயற்கையில் காணப்படும் வகையான இச்செடி இன்றசியற்கைச் சூழலில் அருகிவருகின்றது. இதற்கான காரணம் காடுகளை வெட்டியும் எரித்தும் வேளாண்மை செய்யும் முறையால் இயற்கைச் சூழிடங்கள் அழிகின்றன[1]

இம்மருந்துச்செடி ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வளரும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் 2.5 – 9 செ.மீ நீளமும் 1 – 3.5 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். அகலமான இந்த இலைகளின் மேற்பரப்பு பளபளப்பாகவும், நுண்மயிர்கள் இல்லாமலும் இருக்கும். இலைகள் எதிரெதிராக அமைந்திருக்கும். இலைக்காம்பு 1 - 1.8 செ.மீ நீளம் இருக்கும். இலையின் நடு நரம்பு வெளிறிய பச்சை நிறத்தில் இருக்கும். இலைக்காம்பு [2][3][4][5]


மருத்துவப் பயன்கள்[தொகு]

நீரிழிவு, சிறுநீர்த்தாரை, வெள்ளை இரத்தப்புற்று நோய்.

அடிக்குறுப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. 1.0 1.1 DrugDigest: Catharanthus roseus
  2. Flora of China: Catharanthus roseus
  3. College of Micronesia: Catharanthus roseus
  4. Huxley, A., ed. (1992). New RHS Dictionary of Gardening. Macmillan ISBN 0-333-47494-5.
  5. Jepson Flora: Catharanthus roseus
"http://ta.wikipedia.org/w/index.php?title=நித்திய_கல்யாணி&oldid=1512857" இருந்து மீள்விக்கப்பட்டது