உள்ளடக்கத்துக்குச் செல்

நித்தியானந்த கோந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நித்தியானந்த கோந்த்
பள்ளி மற்றும் வெகுஜன கல்வி அமைச்சர்
ஒடிசா அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
12 சூன் 2024
முன்னையவர்சுதம் மார்ண்டி
பட்டியல் இனத்தவர் & பழங்குடியினர் மேம்பாடு, சிறுபான்மையினர் நலம் & பிற்படுத்தப்பட்டோர் மேம்பாடு-அமைச்சர்
ஒடிசா அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
12 சூன் 2024
முன்னையவர்ஜகந்நாத் சரகா
உறுப்பினர்-ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்சுபாசு கோந்த்
தொகுதிஉமர்கோட் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூன் 1978 (1978-06-01) (அகவை 48)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சைதி கோந்த்
பிள்ளைகள்1 மகன் & 1 மகள்
பெற்றோர்
  • சமரு கோந்த் (தந்தை)
கல்விமுதுகலை
இளங்கலைச் சட்டம்
தொழில்வழக்கறிஞர், அரசியல்வாதி
மூலம்: odishaassembly.nic.in

நித்தியானந்த கோந்த் (Nityananda Gond) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், ஒடிசா அரசின் பள்ளி மற்றும் பொதுக் கல்வி, பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தவர் மேம்பாடு, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும் ஆவார். இவர் நபரங்பூர் மாவட்டத்தின் உமர்கோட் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1]

2000ஆம் ஆண்டில் பெர்காம்பூர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டமும், 2003ஆம் ஆண்டில் ஜோப்ரெ சட்டக் கல்லூரியில் இளநிலைச் சட்டப் பட்டமும் பெற்றார்.[2]

சூன் 12, 2024 அன்று, புவனேசுவரத்தில் உள்ள ஜனதா மைதானத்தில் முதலமைச்சர் மோகன் சரண் மாச்சியுடன் இவர் அமைச்சராகப் பதவியேற்றார். ஆளுநர் ரகுபர் தாசு இவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் சா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக ஆளும் 10 மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.[3][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Election, 2019 to the Legislative Assembly of Odisha". Election Commission of India. Retrieved 2024-06-15.
  2. "Myneta Profile" (in en-IN). My Neta. 2024-06-13. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://myneta.info/Odisha2024/candidate.php?candidate_id=24.
  3. "Highlights: BJP Tribal Leader, 4-Time MLA Mohan Majhi Sworn In As Odisha Chief Minister". NDTV.com. Retrieved 2024-06-13.
  4. Barik, Satyasundar (2024-06-12). "Mohan Charan Majhi sworn in as Odisha's first BJP Chief Minister" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/odisha/mohan-charan-majhi-sworn-in-as-odishas-first-bjp-chief-minister/article68281205.ece.
  5. "Odisha Cabinet portfolios: CM Mohan Charan Majhi keeps Home" (in en-IN). India News. 2024-06-13. https://www.indiatvnews.com/news/india/odisha-cabinet-portfolios-cm-mohan-charan-majhi-keeps-home-ministry-kanak-vardhan-singh-agriculture-pravati-parida-women-child-development-finance-2024-06-15-937131.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நித்தியானந்த_கோந்த்&oldid=4490768" இலிருந்து மீள்விக்கப்பட்டது