நித்தின் கோவர்தன் கூலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நித்தின் கூலி
Nitin Ghule
தனிநபர் தகவல்
இயற் பெயர்नितीन घुले
முழு பெயர்நித்தின் கோவர்தன் கூலி
தேசியம்இந்தியன்
பிறப்பு20 மே 1986 (1986-05-20) (அகவை 33)
பூனா
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுகபடி
நிகழ்வு(கள்)குவாங்சௌ 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்- தங்கம்
19 January 2016 இற்றைப்படுத்தியது.

நித்தின் கோவர்தன் கூலி (Nitin Govardhan Ghule) ஆண்கள் கபடி விளையாட்டில் இந்தியாவின் சார்பாக விளையாடக்கூடியவர் ஆவார். இவர் 1986 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் நாள் பிறந்தார். 2010 ஆம் ஆண்டு சீனாவின் குவாங்சௌ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற கபடி அணியில் நித்தின் கூலியும் ஓர் உறுப்பினராக இருந்தார்[1]. சிறுவயதிலிருந்தே இவர் பூனாவின் போப்கேல் கிராமத்தின் ஆதிநாத் விளையாட்டுக் கழகத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். ஆசியக் கடற்கரை கபடி உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான போட்டிகள், அனைத்துலகப் போட்டிகளில் இவர் கலந்து கொண்டு விளையாடினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "GHULE Nitin Govardhan - Biography". The Official Website of the 16th Asian Games. பார்த்த நாள் 1 December 2010.

புற இணைப்புகள்[தொகு]