நிதோ தானியா கொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிதோ தானியா அல்லது நிதோ தானியம், அருணாசலப் பிரதேசத்தின் சட்டமன்ற உறுப்பினர் நிதோ பவித்திராவின் மகன், ஜலந்தரில் லவ்லி புரொஃபெசனல் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார். 2014இல் ஜனவரி 29 அன்று, தில்லியின் லாஜ்பாட் நகர் பகுதியில், நிதோ தானியா மூன்று கடைக்காரர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். தில்லி காவல்துறை இந்த மூன்று நபர்களை கைது செய்தது.

இந்நிலையில், தில்லியில் வடகிழக்கு இந்தியர்கள் இனவெறியை பொறுத்துக்கொண்டு இருக்கின்றனர் என்று கண்டனம் காட்டியுள்ளனர். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தாமதித்ததாகவும் தில்லி காவல்துறை குற்றஞ்சாட்டப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதோ_தானியா_கொலை&oldid=2212274" இருந்து மீள்விக்கப்பட்டது