நிதுமோலு சுமதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிதுமோலு சுமதி
பிற பெயர்கள்தண்டமுடி சுமதி ராம் மோகன் ராவ்
பிறப்புஏலூரு, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
தொழில்(கள்)இசைக்கலைஞர்
இசைக்கருவி(கள்)மிருதங்கம்

தண்டமுடி சுமதி ராம் மோகன் ராவ் என்றும் அழைக்கப்படும் நிதுமோலு சுமதி (Nidumolu Sumathi) ஒரு இந்திய தாளவாதியாவார். இவர், முதன்மையாக மிருதங்கத்தில் திறமையானவராக இருக்கிறார். [1] இவர் "மிருதங்கம் மேதை" தண்டமுடி ராம் மோகன் ராவின் மனைவியாவார். இவர் இந்தியாவின் முதல் பெண் மிருதங்கக் கலைஞர்களில் ஒருவர். மேலும், முதல் பெண் லய வின்யாசக் கலைஞரும் ஆவார். இந்தியாவின் முதல் ஏ-உயர்தர பெண் மிருதங்கக் கலைஞராக இருக்கிறார். 2021ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருதினைப் பெற்றார் . [2]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

சுமதி 1950 அக்டோபர் 16 ஆம் தேதி ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலுருவில் நிதுமோலு இராகவையா என்பவருக்கும், வெங்கடரத்னம்மா என்பவருக்கும் மகளாகப் பிறந்தார். 6 வயதில், மிருதங்க வித்வானாக இருந்த தனது தந்தையிடமிருந்து மிருதங்கம் கற்கத் தொடங்கினார். அவரும் இவரை இசை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று தாளத்தில் ஆர்வம் காட்டினார். இவர் தனது 10 வயதில் தனது முதல் நிகழ்ச்சியை வழங்கினார். 1964 ஆம் ஆண்டில், மிருதங்கத்தில் சான்றிதழ் படிப்பை முடித்த பின்னர், புகழ்பெற்ற மிருதங்க வித்வான் தண்டமுடி ராம் மோகன் ராவின் கீழ் பயிற்சி பெற்றார். அவர் "புதுக்கோட்டை சம்பிரதாயத்தில்" சிறந்து விளங்கிய மிருதங்க வித்வானாக சர்வதேச பாராட்டைப் பெற்றவர். "அனைத்திந்திய வானொலியின் தரக் கலைஞராகவும் இருந்தர். சுமதி தனது குருவிடமிருந்து பல சிக்கலான நுட்பங்களைக் கற்றுக் கொண்டா. மேலும், இந்தியாவின் பல மதிப்புமிக்க சபாக்களில் நிகழ்ச்சிகளை வழங்கத் தொடங்கினார்.

தொழில்[தொகு]

பின்னர் இவர் தனது குரு தண்டமுடி ராம மோகன் ராவை மணந்தார். 2003 ஆம் ஆண்டில், இவர் அனைத்திந்திய வானொலியின் "ஏ-தரக்" கலைஞரானார். இந்த தரத்தை அடைந்த முதல் பெண் மிருதங்க வித்வான் ஆவார். இதனால் இவர்கள் இந்தியாவின் ஒரே "ஏ-தரக்" மிருதங்க இரட்டையர் ஆனார்கள். மேலும் அவர்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தனித்துவமான அடையாளத்துடன் மேடையில் லயவின்யாசம் இசை நிகழ்ச்சிகளை வழங்கத் தொடங்கினர்.

ம. ச. சுப்புலட்சுமி, சித்தூர் சுப்பிரமணியம் பிள்ளை, வோலெட்டி வெங்கடேசுவரலு, டாக்டர் எம்.பாலமுரளி கிருஷ்ணா, பண்டிட் பீம்சென் ஜோஷி, எம்.சந்திரசேகரன், ஈ.சங்கர சாஸ்திரி, சிட்டி பாபு, என். ரமணி, சிட்டிபாபு, மாண்டலின் உ. ஸ்ரீநிவாஸ் போன்ற பல புகழ் பெற்ற கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

லய வேதிகா[தொகு]

2000 ஆம் ஆண்டில், இவர் தாள வாத்தியமான மிருதங்கத்தை ஊக்குவிப்பதற்காக "லய வேதிகா" என்ற ஒரு அமைப்பை நிறுவினார். இதன் மூலம் மாணவர்களுக்கான போட்டிகளை நடத்தவும் செய்தார். பல புகழ்பெற்ற வித்வான்களை "லய பிரவீனா" என்ற தலைப்பில் வழங்கவும் பயன்படுத்தினார். [3]

விருதுகள்[தொகு]

இவர் பல விருதுகளைப் பெற்றார். மேலும் பல மதிப்புமிக்க சபாக்களில் பாராட்டப்பட்டார். 2010 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவைரிடமிருந்து சங்கீத நாடக அகாதமி விருதினைப் பெற்றார். இதனால் இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற ஒரே பெண் மிருதங்கம் கலைஞர் என்ற பெருமையைப் பெற்றார். 2015 ஆம் ஆண்டில் ஆந்திர மாநில அரசிடம் இருந்து "உகாதி புரஸ்காரம்" என கௌரவிக்கப்பட்டார்.

இசைத் துறையில் இவர் செய்த சிறந்த பங்களிப்புகளுக்காக, இந்திய அரசு 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் 4 வது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதுமோலு_சுமதி&oldid=3107412" இருந்து மீள்விக்கப்பட்டது