நிதி அறிவுத்திறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிதி அறிவுத்திறன் என்பது நிதி பற்றி புரிந்துகொள்ள ஒருவருக்கு இருக்கும் ஆற்றலைக் குறிக்கிறது. குறிப்பாக நிதி பற்றி விழிப்புணர்வு மிக்க, சிறந்த முடிவுகளை எடுக்க ஒருவருக்கு உதவும் அறிவையும், திறன்களையும் இது குறிக்கிறது. உலகெங்கும் தனிநபர் கடன், அரசுகள் கடன் அதிகரித்து வருகின்றன. ஏமாற்றுதல், தெளிவற்ற முதலீட்டுச் சூழல், பொருளாதார நெருக்கடி ஆகியனவும் நிதி அறிவுத்திறன் நோக்கிய கவனத்தை ஈர்த்துள்ளன.

முக்கிய கூறுகள்[தொகு]

  • வரவு செலவு அட்டவணையைத் தயாரிப்பது எப்படி?
  • கடன்: கடன் பெறலாமா? எந்தக் கடன் நல்ல கடன் எந்தக் கடன் கெட்ட கடன்?
  • சேமிப்பு: ஒருவர் எவ்வளவு சேமிக்க வேண்டும்? குறிப்பிட்ட ஓய்வூதியம் பெற ஒருவர் எவ்வளவுகாலம் எவ்வளவு சேமிக்க வேண்டும்?
  • முதலீடு: முதலீடு செய்யலாமா? எது நல்ல முதலீடு?
  • நுகர்வு: வீடு வாடகைக்கு எடுப்பதா, வாங்குவதா நல்லது?
  • தொழில்வாய்ப்பு/தொழில்முனைவு
  • பொருளாதாரம்: பொருளாதார ஏற்றம் அல்லது இறக்கம் எப்படிபட்ட பாதிப்புகளை ஏற்படுத்தப்போகிறது?
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதி_அறிவுத்திறன்&oldid=1357655" இருந்து மீள்விக்கப்பட்டது