உள்ளடக்கத்துக்குச் செல்

நிதின் நபின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிதின் நபின் சின்கா
नितिन नबीन सिन्हा
தேசிய செயல் தலைவர்
பாரதிய ஜனதா கட்சி
பதவியில்
14 திசம்பர் 2025 – பதவியில்
முன்னையவர்புதிய பதவி
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
26 பெப்ரவரி 2025 term_end2 = நவம்பர் 2025 – பதவியில்
முன்னையவர்விஜய் குமார் சின்கா
பதவியில்
9 பெப்ரவரி 2021 – 9 ஆகத்து 2022
முன்னையவர்மங்கள் பாண்டே
பின்னவர்தேஜஸ்வி யாதவ்
அமைச்சர்-நகர்ப்புற மேம்பாடு & வீட்டுவசதி
பீகார் அரசு
பதவியில்
15 மார்ச் 2024 – 26 பெப்ரவரி 2025
முன்னையவர்தேஜஸ்வி யாதவ்
பின்னவர்ஜிபேசு குமார்
சட்டம், நீதித்துறை அமைச்சர்
பீகார் அரசு
பதவியில்
15 மார்ச் 2024 – 26 பெப்ரவரி 2025
முன்னையவர்சமிம் அகமது
பின்னவர்மங்கள் பாண்டே
உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை
பதவியில்
2006–2010
முன்னையவர்நவீன் கிசோன் சின்கா
பின்னவர்Constituency delimited
தொகுதிபட்னா மேற்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 மே 1980 (1980-05-23) (அகவை 45)[1]
பட்னா, பீகார், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்தீபமால சிவாத்துவா
பெற்றோர்
  • கிசோர் பிரசாத் சின்கா (தந்தை)
  • மீரா சின்கா (தாய்)
கல்விஇடைநிலை

நிதின் நபின் சின்கா (Nitin Nabin) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சமூக ஆர்வலரும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் நபின் கிசோர் சின்காவின் மகன் ஆவார். இவர் 4 முறை பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பீகார் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2020 பீகார் சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 84,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் சத்ருகன் சின்காவின் மகன் லவ் சின்காவை இவர் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். புட்பம் பிரியா சவுத்ரியும் இந்தத் தேர்தலில் இவரிடம் பெரும் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[2] இவர் பாட்னா மாவட்டத்தின் பாங்கிபூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பீகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் பிஜேஒய்எம்-ன் தேசிய பொதுச் செயலாளராகவும் இருந்தார்.[3]

மார்ச் 2,2017 அன்று, நபின் பீகார் இந்திய தேசிய காங்கிரசு தலைவர் அப்துல் ஜலீல் மசுதான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து அவரது குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பினார்.[4]

சின்கா 2025ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

தேசியச் செயல் தலைவராக

[தொகு]

14 டிசம்பர் 2025 அன்று நிதின் நபின் சின்கா பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். [5][6]

இருப்பினும் சனவரி 2026-ல் நிதின் நபின் முறைப்படி தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 2026ல் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் நிதின் நபினை தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முறைப்படி ஒப்புதல் வழங்கும்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "बिहार विधान सभा सचिवालय - सप्तदश बिहार विधान सभा मे माननीय सदस्यों की जन्म तिथि एवं टर्मवार सूची" (PDF). பீகார் Vidhan Sabha (in Hindi). Archived (PDF) from the original on 27 April 2023.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "BJP leader Navin Kishore dead". Times of India. 1 January 2006. Retrieved 14 September 2019.
  3. . 
  4. "MLA levels sedition charge against Bihar Cong minister". Hindustantimes.com. 2 March 2017. Retrieved 3 September 2017.
  5. BJP gets new chief: Bihar minister Nitin Nabin appointed national working president; to replace JP Nadda
  6. 45 வயது பீகார் அமைச்சர் பா.ஜ.க தேசிய செயல் தலைவராக நியமனம்: யார் இந்த நிதின் நபின்
  7. BJP appoints Nitin Nabin, 45, as new working president, signals generational shift in leadership
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதின்_நபின்&oldid=4424449" இலிருந்து மீள்விக்கப்பட்டது