நிட்சேப நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிட்சேப நதி[தொகு]

நிட்சேபம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு பொதிந்து வைக்கப்பட்டுள்ள செல்வம் என்று பொருள். இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தி ஆகி ,பிற துணை ஆறுகளுடன் கலந்து வைப்பாறு எனப்பெயர் பெற்று திருநெல்வேலி ,விருதுநகர் , தூத்துக்குடி மாவட்டங்களைக் கடந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. கேரளத்தின் பம்பை ஆற்றில் இருந்து நீரைத் திருப்பிவிட்டால் வைப்பாற்றின் நீர்வளம் அதிகரிக்கும் எனும் கருத்து முன்வைக்கப் படுகிறது. பம்பை ஆற்றின் நீர்வளம் குறைவு எனவே இந்த ஆறுகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று கேரள அரசு நடுவணரசிடம் தெரிவித்து விட்டது. நிட்சேப நதியில் காந்தியின் அஸ்தி கரிவலம் வந்த நல்லூரில் கரைக்கப்பட்டது. அதன் நினைவாக ஆண்டுதோறும் சர்வோதய மேளா நடைபெறுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிட்சேப_நதி&oldid=1491497" இருந்து மீள்விக்கப்பட்டது