நிஞ்சா ரோபோக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொடரின் பெயர் ஜப்பானிய எழுத்துக்களில்


நிஞ்சா ரோபோக்கள்(ஜப்:忍者戦士飛影) அல்லது நிஞ்சா சென்ஷி டொபிக்காகே என்பது மெக்கா வகையைச் சார்ந்த ஒரு ஜப்பானிய அனிமே தொடராகும். இந்தத் தொடர் 8 அக்டோபர் 1985இல் இருந்து 14 ஜூலை 1986 வரை நிப்போன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது.

இந்தத் தொடர் தென் - ஆசியா, தென்கிழக்காசிய மற்றும் ஆஸ்திரேலியாவில் கார்ட்டூன் நெட்வொர்க் தொலைக்காட்சியினால் ஒளிபரப்பப்பட்டது. இதேத் தொடல் பல்வேறு தொலைக்காட்சி நிறுவணங்களால் ரஷ்யா, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், சிலி, மெக்ஸிகோ முதலியா நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது.

கதைச்சுருக்கம்[தொகு]

கதை நடைபெறுவது 2200ஆம் ஆண்டில். இக்க்கதையின் நாயகன் 16 வயதான ஜோ மேயா.

செவ்வாய் கிரகத்தில் வசிக்கும் ஜோ, வேற்றுகிரகவாசிகளுக்குள் நடக்கும் போரை ஒரு நாள் பார்க்கிறான். அந்தப் போரில் ஸபூம் கிரகத்தில் இருந்து வந்தவர்கள் ராடுரியோ கிரகத்தின் இளவரசியான ரொமினாவை தாக்குகின்றனர். இளவரசி ரொமினா பிரபஞ்சத்த்தையே கைப்பற்ற நினைக்கும் ஸபூம் கிரக அரசனிடமிருந்து தப்பித்து செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியவள். 'ஐஸ் லாண்டர்' என்ற தளபதியும் அவளுடன் இருக்கின்றான். அவளை தொடர்ந்து ஸபூம் கிரகத்தினரும் செவ்வாயில் தரையிறங்கி ரொமினாவின் விண்கலத்தை தாக்கிய வண்ணம் இருக்கின்றனர்.

அவன் வயதை ஒத்த ரொமினாவை சந்தித்தவுடன் ஜோ அவளுக்கு உதவ முன் வந்து, அவளுடைய விண்கலத்தினுள் நுழைகிறான். அவனுடன் அவனது நன்பர்களான மைக், மற்றும் ரெனி கூடவே வருகின்றனர். அவர்கள் நுழைந்தவுடன் அந்த விண்கலத்தினுள்ள 3 நிஞ்சா ரோபோக்களிடம் வித்தியாசமான விளைவுககள் ஏற்படுகின்றன். பின்னரே அந்த ரோபோக்களை இயக்கக் கூடியவர்கள் இம்மூவரே எனத் தெரிய வருகிறது. இதை இவர்கள் அறிந்தவுடன், அந்த மூன்று ரோபோக்களை இயக்கி ஸபூம் படையுடன் போரிடுகின்றனர்.

இவ்வாறு ஸபூம் கிரகத்தினரை எதிர்த்து மோதி தோற்கும் நிலையில், எங்கிருந்தோ டொபிக்காகே(சைபர்டிரான்) என்ற நிஞ்சா ரோபோ இவர்களுக்கு உதவி செய்து இவர்களை காப்பாற்றுகிறது. இந்த சைபர்டிரான் அந்த மூன்று நிஞ்சா ரோபோக்களுடனும் இணையும் திறன் கொண்டது. சைபர்டிரான் மூன்று ரோபோக்களுடன் இணைந்து வெவ்வேறு விதமாக உருமாறி எதிரிகளை தொற்கடிக்கிறது. பிறகு பலவிதமான சம்பவங்கள் நிகழ்கின்றன. ஐஸ்லாண்டர் ரொமினாவுக்கு துரோகம் இழைத்து ஸபூம் கிரகத்தாருடன் சேர்ந்து விடுகிறான். ஜோவும் ஒரு சம்பவத்தினால் சைபர்டிரானுடன் இணைந்து அதை கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறுகிறான். ஜோவும் ஐஸ்லேண்டரும் பெரும் எதிரிகள் ஆகி இருவரும் அவ்வப்பொது சண்டையிடுகின்றனர்.

ஜோ சைபர்டிரானை கட்டுப்படுத்துவதுப் போலவே, ஒரு கட்டத்தில் ஐஸ் லாண்டரும் 'மான்டிஸ்' என்ற சக்தி வாய்ந்த ரோபோவைக் கட்டுப்படுத்திகிறான். இவ்விருவரும் தத்தம் ரோபோக்களை வைத்துக்கொண்டு ஒருவருக்கெதிராக ஒருவர் மோதிக்கொள்கின்றனர்.

இறுதியில் ஜோ எவ்வாறு பூமியையும் ரொமினாவின் கிரகமான ராடுரியோயும் காப்பாற்றுகிறான் என்பது தான் கதை.

கதா பாத்திரங்கள்[தொகு]

ஜோ மேயா[தொகு]

16 வயதான ஜொதான் இத்தொடரின் கதாநாயகன். தான் செயவதே சரி என நினைப்பது தான் இவனுடைய குணம். தன்னுடைய சிறு வயதிலேயே தன் தாயை இழந்துவிடுகிறான். தன்னுடைய எண்ணங்களை யாருக்கும் வெளிக்காட்டத குணமுடையவன் இவன். நிஞ்சா ரோபோக்களை இயக்குபவர்களில் இவனும் ஒருவன். முதலில் "குரோ-ஜிஷி' என்ற சிங்க மெக்கா ரோபோவையே இயக்கிறேன், பின்னர் சைபர்டிரானுடன் இணைந்து அதைக் கட்டுப்படுத்துகிறான். ரெனி மற்றும் மைக் இவனுடைய நண்பர்கள் ஆவர்.

ரேனி ஆஇ[தொகு]

ரேனி ஜோவின் தோழி. ரேனி ஜோவை மிகவும் விரும்புகிறாள். ஆனால் ஜோவோ அதை சிறிது சட்டை செய்யாமல் இருந்தான். ஜோவிற்காகவே ரேனி ரொமினாவின் சார்பாக போரிட்டாள். ரெனி "ஹோ-ராய்-ஓ" என்ற நிஞ்சா ரோபோவை இயக்குகிறாள். இளவரசி ரொமினாவை பார்த்து சிறிது பொறாமைப்படுபவள்

மைக் கோயிரு[தொகு]

மைக் ஜோவின் மிகவும் நெருங்கிய நண்பட்ன். இன்னும் சொல்லப்போனால் அவனுடைய சகோதரன் போன்றவன். இவர் "பாகு-ர்யூ" என்ற நிஞ்சா ரோபோவை இயக்குகிறான்.

இளவரசி ரொமினா[தொகு]

இளவரசி ரொமினாவினால் ஜோவும் அவனது நண்பர்களும் அவளுடைய கிரகத்தை ஆக்கிரமித்துக்கொண்ட ஸபூம் கிரகத்தின் அரசனான அனெக்ஸை எதிர்த்து போரிட ஒப்ப்க்கொள்கின்றனர். பார்ப்பதற்கும் மிகவும் அழகாக இருப்பவள். ரொமினா, ஐஸ்லாண்டர் மற்றும் ஜேட் உடன் ஸீனோஸ்-5 என்ற விண்கலத்தில் தனது சொந்த கிரகத்தில் இருந்து தப்பித்து செவ்வாய் கிரகம் வருகின்றனர். ரொமினா ஜோவின் மீது ஒரு விதமான அன்பு கலந்த மரியாதையை வைத்திருப்பவள். ஐஸ் லாண்டருக்கும் ஜோவுக்குமான மோதல் இவளை மிகவும் காயப்படுத்துகிறது.

ஜேட்[தொகு]

ஜேட் இளவரசி ரொமினாவின் தோழி. ரொமினா மிகவும் நாணல் கொண்டவளாக இருந்தால் ஜேட் அதற்கு நேரெதிரான்ன குணத்தைக்கொண்டவள்.

ஐஸ் லாண்டர்[தொகு]

ரொமினாவினுடைய கிரகத்தின் தளபதி இவர். ஜோவின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக ஐஸ் லாண்டர் ரொமினாவுக்கு துரோகம் இழைத்து விட்டு ஸபூம் அரசனுடன் கூட்டுச்சேர்கிறான். ஆரம்பத்தில் எந்த ரோபோவையும் கட்டுப்படுத்தாமல் இருந்தாலும், பின்னர் மாண்டிஸ் என்ற ரோபோவுடன் ஒன்று சேர்கிறான்.

தீம் பாடல்கள்[தொகு]

திறக்கும் பாடல்
  • லவ் சர்வைவர்
முடியும் பாடல்
  • இச்சி சேகிமெ நொ எஞ்செரு


வெளி இணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிஞ்சா_ரோபோக்கள்&oldid=3218459" இலிருந்து மீள்விக்கப்பட்டது