உள்ளடக்கத்துக்குச் செல்

நிச்சலானந்தா சரசுவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ நிச்சலானந்தா சரசுவதி
பதவிகோவர்தன மடத்தின் 145வது சங்கராச்சாரியார்
சுய தரவுகள்
பிறப்பு
நீலாம்பர் ஜா, பின்னர், துருவசைதன்யா

30 சூன் 1943 (1943-06-30) (அகவை 82)
அரிப்பூர் பக்சி தோல், மதுபனி, பீகார், இந்தியா
சமயம்இந்து சமயம்
தேசியம் இந்தியா
துறவற சபைகணிதவியலாளர் வேதாந்தம், சுமார்த்தம்
தத்துவம்அத்வைதம் வேதாந்தம், ஒருமைநிலைவாதம்
பதவிகள்
குருசுவாமி கர்பத்ரி
இணையதளம்https://govardhanpeeth.org
கோவர்தன மடம்
பதவியில் உள்ளார்
பதவியில்
1992-தற்போது வரை
முன்னையவர்நிரஞ்சனதேவ தீர்த்தர்

நிச்சலானந்தா சரசுவதி (Nishchalananda Saraswati) ஓர் இந்திய இந்து ஆன்மீகத் தலைவரும், அத்வைத வேதாந்த பாரம்பரியத்தில் அறிஞரும் ஆவார். இவர் இந்தியாவின் ஒடிசாவின் புரியில் அமைந்துள்ள கோவர்தன மடத்தின் 145 வது சங்கராச்சாரியார் ஆவார்.[1][2][3] இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்து சமயத்தில் மதிக்கப்படும் ஒரு நபராக, இவர் ஆன்மீக சொற்பொழிவில் ஈடுபடுகிறார். சமகால பிரச்சினைகளைப் பற்றி உரையாற்றுகிறார். அதே நேரத்தில் பண்டைய மரபுகளையும் நிலைநிறுத்துகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

நிச்சலானந்தா சரசுவதி 1943 ஆம் ஆண்டில் பீகாரின் மதுபனி என்ற ஊரில் மைதிலி பிராமணக் குடும்பத்தில் நீலாம்பர் ஜா என்ற பெயரில் அரச புரோகிதர் பண்டிட் லால்வம்சி ஜா மற்றும் அவரது மனைவி கீதா தேவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை புகழ்பெற்ற சமசுகிருத அறிஞரும், ராஜ் தர்பங்கா ஜமீந்தாரின் அரசவை வித்வானும் ஆவார்.[4]

பிரம்மச்சர்யம் பெறுவதற்கு முன்பு தில்லியின் திபியா கல்லூரியில் படித்தார். நைமிசாரண்ய சுவாமி ஸ்ரீ நாரதானந்த சரசுவதியால் இவருக்கு துருவசைதன்யா என்ற பெயர் வழங்கப்பட்டது. வாரணாசி,பிருந்தாவனம், அரித்துவார், பிரயாக்ராஜ், நைமிசாரண்யம், புரி மற்றும் சிருங்கேரி ஆகிய இடங்களில் சாத்திரங்களைப் படித்தார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

பசு பாதுகாப்பு இயக்கங்களில் பங்கேற்ற இவர், 1966 ஆம் ஆண்டில் பசு வதைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதற்காக 52 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி அரித்துவாரில், சுவாமி கரபத்ரியால் சந்நியாசம் வழங்கப்பட்டது. மேலும், நிச்சலானந்தா சரசுவதி என்ற துறவறப் பெயரும் வழங்கப்பட்டது.

1992 பிப்ரவரி 9 அன்று (விக்ரம் நாட்காட்டி 2048) சுவாமி நிரஞ்சனதேவ தீர்த்தரால் புரி, கோவர்தன மடத்தின் 145 வது சங்கராச்சாரியராக நியமிக்கப்பட்டார்.

11 பிப்ரவரி 2018 அன்று, சுவாமி நிச்சலானந்தா சரசுவதியின் பட்டாபிசேகத்தின் வெள்ளி விழா (25 வது ஆண்டு விழா) புரியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாய்க், நேபாளத்தின் முன்னாள் மன்னர் ஞானேந்திரா மற்றும் பூரிய கஜபதி மகாராஜா திவியசிங்க தேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Swami Nischalananda Saraswati". Govardhan Math, Puri (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 17 December 2021.
  2. Subhashish, Mohanty. "'Shankaracharya is an institution'". தி டெலிகிராஃப். Retrieved 17 December 2021.
  3. "Puri Shankaracharya Happy with Move to Keep Govardhan Math out of Endowment Act, Seeks Total Autonomy". News18 (in ஆங்கிலம்). 22 October 2019. Retrieved 17 December 2021.
  4. "जगतगुरु शङ्कराचार्य स्वामी निश्चलानंद जी महाराज | गोवर्धन मठ | | जगतगुरु शङ्कराचार्य स्वामी निश्चलानंद जी महाराज |". 2018-09-22. Archived from the original on 2018-09-22. Retrieved 2022-03-26.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிச்சலானந்தா_சரசுவதி&oldid=4446855" இலிருந்து மீள்விக்கப்பட்டது