நிசீம் எசெக்கியேல்
நிசீம் எசெக்கியேல் | |
---|---|
பிறப்பு | நிசீம் எசெக்கியேல் திசம்பர் 14, 1924 மும்பை, மஹாராஷ்டிரா, இந்தியா |
இறப்பு | ஜனவரி 9, 2004 |
தொழில் | கவிஞர், எழுத்தாளர், நாடகாசிரியர், கலை விமர்சகர் |
தேசியம் | இந்தியர் |
காலம் | 1952-2004 |
வகை | இந்திய ஆங்கில இலக்கியம் |
நிசீம் எசெக்கியேல் அல்லது நிஸ்ஸிம் எசிக்கியேல் (Nissim Ezekiel; நிஸ்ஸிம் இசெக்கியேல்; டிசடம்பர் 14, 1924 – ஜனவரி 9, 2004) ஒரு இந்தியக் கவிஞர், எழுத்தாளர், நாடகாசிரியர், கலை விமர்சகர் மற்றும் இதழாளர். யூத சமயத்தினரான இவர் சுதந்திர இந்தியாவின் ஆங்கில இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
மும்பையின் பெனே இஸ்ரேல் யூத சமூகத்தில் பிறந்த எசெக்கியேல், 1952ல் தனது முதல் கவிதைப் புத்தகத்தை வெளியிட்டார். தி இல்லுஸ்டிரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா போன்ற இதழ்களில் பணியாற்றியுள்ள இவர், சுயமாக ஒரு கவிதை இதழையும் நடத்தியுள்ளார். பல்வேறு கவிதைத் தொகுப்புகளுக்கு தொகுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ளார். துபாயிலுள்ள மிதிபாய் கல்லூரி, ஐக்கிய ராச்சியத்தின் லீட்ஸ் பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். அகில இந்திய வானொலியில் கைத்தொழில் மற்றும் இலக்கிய அறிவிப்பாளராகப் பத்தாண்டுகள் பணியாற்றியுள்ளார். 1983ல் இவருடைய லேட்டர்-டே சாம்ஸ் என்ற கவிதை நூல் சாகித்திய அகாதமி விருதினை வென்றது. எசெக்கியேலின் கவிதைகள் (குறிப்பாக தி நைட் ஆஃப் தி ஸ்கார்ப்பியன்) பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
எழுதிய நூல்கள்
[தொகு]- கவிதைகள்
- 1952: டைம் டூ ராக்[1]
- 1953: சிக்ஸ்டி போயமஸ்[1]
- 1956: தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா
- 1959: தி தேர்ட்[1]
- 1960: தி அன்ஃபினிஷ்ட் மேன்[1]
- 1965: தி எக்சாக்ட் நேம்[1]
- 1974: ஸ்னேக்ஸ்கின் அண்ட் அதர் போயம்ஸ், (இந்திரா சந்தின் மராத்தி கவிதைகளின் மொழிபெயர்ப்பு)[1]
- 1976: ஹிம்ன்ஸ் இன் டார்க்னெஸ்[1]
- 1982: லேட்டர்-டே சாம்ஸ்[1]
- 1989: கலெக்டட் போயம்ஸ் 1952-88[1]
- நாடகங்கள்
- 1969 : தி திரீ பிளேஸ்
- தொகுப்பு