நிசில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிசில் (Nisil) என்பது எடையளவில் 95.5% சிலிக்கன், 4.4% மக்னீசியம் உலோகங்கள் கலந்துள்ள ஒரு நிக்கல் கலப்புலோகம் ஆகும்.

நிசில் கலப்புலோகம் 1341 – 1420°செ வெப்பநிலையில் உருகுகிறது. 8.58 கிராம்/செ.மீ³ அடர்த்தியும், 20 பாகை செல்சியசு வெப்பநிலையில் 0.365 Ω.மி.மீ2 /மீ வெப்பத்தடை அளவும் கொண்டுள்ளது. என் வகை வெப்பமின் இரட்டைகளில் நேர்மின்சுமை தாங்கியாக நிக்ரோசில் கலப்புலோகமும் எதிர்மின்சுமை தாங்கியாக மற்றொரு நிக்கல் கலப்புலோகமான நிசில் கலப்புலோகமும் பயன்படுத்தப்படுகிறது [1] கந்தகம் கலந்துள்ள வாயுக்களின் தொடர்பு இல்லாமல் இதைப் பயன்படுத்த வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Type N thermocouples" (PDF). 2006-10-15 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2007-10-31 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசில்&oldid=3560684" இருந்து மீள்விக்கப்பட்டது