உள்ளடக்கத்துக்குச் செல்

நிசா கோத்ரேஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிசா அதி கோத்ரேஜ்
பிறப்புநிசாபா கோத்ரேஜ்
12 பெப்ரவரி 1978 (1978-02-12) (அகவை 46)
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்கதீட்ரல் ஜான் கோனன் பள்ளி (1983 - 1994)
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் பள்ளி (1996-2000)
ஹார்வார்டு வணிகப் பள்ளி (2004-2006)
பணிகோத்ரேஜ் நுகர்வோர் தயாரிப்புகளின் தலைவர்
பெற்றோர்அதி கோத்ரேஜ் (தந்தை)
பரமேசுவர் கோத்ரெஜ் (தாய்)
வாழ்க்கைத்
துணை
கபிலேஷ் மேத்தா
உறவினர்கள்தான்யா அரவிந்த் துபாஸ் (சகோதரி)
பிரஜோஷ் அதி கோத்ரெஜ் (சகோதரன்)

நிசாபா ஆதி நிசா கோத்ரேஜ் (Nisaba Adi "Nisa" Godrej ) இவர் கோத்ரேஜ் நுகர்வோர் தயாரிப்புகள் நிறுவனங்களின் [1] தலைவராக உள்ளார். [2]

கோத்ரேஜ் தொழில் நிறுவனங்கள் மற்றும் அதன் இணை நிறுவனங்களுக்கான பெருநிறுவன செயல் திட்டம் மற்றும் மனிதவள மேம்பாட்டின் செயல்பாடுகளையும் இவர் மேற்பார்வையிடுகிறார். [3] கோத்ரேஜ் குழுமத்தின் 'குட் அண்ட் கிரீன்' (பெரு நிறுவனங்களின் சமூகப் பெறுப்பு) போன்ற முயற்சிகளை நிசா நிர்வகித்து வருகிறார். கோத்ரேஜ் குடும்ப அமைப்பின் செயல்பாடுகளுக்கு முக்கிய நபராகவும் உள்ளார். [4]

இவர் தற்போது கோத்ரேஜ் நுகர்வோர் தயாரிப்புகள் நிறுவனம், விலங்குத் தீவனம் மற்றும் வேளாண் வணிக நிறுவனமான கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனம் மற்றும் இந்தியாவில் கல்வி ஏற்றத்தாழ்வு பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்து அனைத்து குழந்தைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்க செயல்பட்டுவரும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான டீச் ஃபார் இந்தியா என்ற அமைப்பு ஆகியவற்றின் இயக்குநர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளார். [5] [6]

கல்வி

[தொகு]

இவர் கதீட்ரல் ஜான் கோனன் பள்ளியிலிருந்து தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர்,பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தி வார்டன் பள்ளியிலிருந்து இளங்கலை அறிவியல் பட்டம் மற்றும் ஹார்வர்ட் வணிகப் பள்ளியில் முதுகலை வணிக மேலாண்மை (எம்பிஏ) ஆகியவற்றை முடித்தார். [7] [8]

தொழில்

[தொகு]

கோத்ரேஜ் குழுமத்திற்குள் நிசாவின் முந்தைய பணிகளில் கோத்ரேஜ் அக்ரோவெட்டின் திருப்புமுனை அடங்கும். கோத்ரேஜ் தொழில் நிறுவனங்கள் மற்றும் அதன் இணை நிறுவனங்களுக்கான பல்வேறு திட்டங்கள், புதுமை, செயல்த் திட்டம் மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றை இவர் மேற்பார்வையிட்டு வருகிறார். [9] 2008ஆம் ஆண்டில் கோத்ரேஜ் அக்ரோவெட் குழுவில் நிசா நியமிக்கப்பட்டார். இவரது முதல் படியாக ஹார்வர்டில் தனது வகுப்புத் தோழர் மார்க் கான் என்பவரை கோத்ரேஜ் அக்ரோவெட்டில் நிர்வாக துணைத் தலைவராக நியமித்து, கோத்ரேஜில் தலைமைப் பதவிகளுக்கு வெளிநாட்டினரை பணியமர்த்த வழி வகுத்தார். [10] இவரது நிறுவன மாற்றங்கள் இறுதியில் கோத்ரேஜ் அக்ரோவெட்டை அதன் கடந்தகால செயல்திறனுடன் ஒப்பிடும்போது ஒரு லாபகரமான நிறுவனமாக மாற்றின. பல ஆண்டுகளாக நிசா தனது தலைமையில் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், தனது நிறுவனத்தில் பணியாளர்களுடன் ஈடுபடுவதாகவும் மாறிவிட்டார். தனது மகன் சோரன் பிறந்து ஒரு மாதத்திற்குள் இவர் மகப்பேறு விடுப்பில் இருந்து மீண்டும் தனது பணியைத் தொடங்கினார். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த முயற்சிப்பதன் மூலம் தன்னை வேலைக்குள் அழைத்துச் சென்றார். தனது தந்தை அதி கோத்ரேஜ் போலவே உண்மையிலேயே பெருமிதம் கொண்ட ஒரு காரியத்தில் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டுடன் தானும் இருப்பதாக இவர் நம்பினார்.

2017 மே 10, அன்று கோத்ரேஜ் நுகர்வோர் தயாரிப்புகள் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக நிசாபா கோத்ரேஜ் அறிவிக்கப்பட்டார். இந்த நேரத்தில், இவர் நிறுவனத்தின் இளைய தலைவராக இருந்தார். அதன் ஒருங்கிணைந்த வருவாய் ரூ .9,600 கோடியாகும். [11] இவர் குடும்ப வியாபாரத்தில் தாமதமாகத்தான் நுழைந்தார் எனினும் அதன் செயல்த் திட்டம் மற்றும் மாற்றத்தில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

நிசா அதி கோத்ரேஜ் மற்றும் பரமேசுவர் கோத்ரேஜ் ஆகியோரின் இளைய மகளாவார். தான்யா அரவிந்த் துபாஸ் மற்றும் பிரோஜ்ஷா ஆதி கோத்ரேஜ் ஆகியோர் இவரது உடன்பிறப்புகள் ஆவர். நிசா தனது கணவர் கல்பேஷ் மேத்தா மற்றும் மகன் சோரனுடன் மும்பையில் வசித்து வருகிறார். இவரது தந்தை அதி கோத்ரேஜ் கோத்ரேஜ் குழுமத்தின் தலைவராக உள்ளார். [12]

கோத்ரேஜுக்கு அப்பால்

[தொகு]

டீசா ஃபார் இந்தியா நிறுவனத்தின் குழு உறுப்பினராக நிசா இருக்கிறார். [13]

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "The heir takes over" (in en). https://www.fortuneindia.com/people/the-heir-takes-over/101429. 
  2. "Adi Godrej announces succession at Godrej Consumer Products". http://www.livemint.com/Companies/oiFbkU6sZhYmS4qdsE96lJ/Adi-Godrej-announces-succession-Nisaba-to-lead-Godrej-Consu.html. 
  3. "Godrej group locks its future, crafts succession plan - The Economic Times". The Economic Times. http://economictimes.indiatimes.com/news/company/corporate-trends/godrej-group-locks-its-future-crafts-succession-plan/articleshow/51336198.cms. 
  4. "Nisaba Godrej, 38 - 40 under Forty: Celebrating Young Leaders - The Economic Times". The Economic Times. http://economictimes.indiatimes.com/slideshows/management-leaders/40-under-forty-celebrating-young-leaders/nisaba-godrej-38/slideshow/54539287.cms. 
  5. "List of Public Companies Worldwide, Letter - Businessweek - Businessweek". www.bloomberg.com. பார்க்கப்பட்ட நாள் 2016-04-29.
  6. "Nisaba Godrej is keeping Godrej Consumer Products in tune with the times". www.businesstoday.in. பார்க்கப்பட்ட நாள் 2016-04-29.
  7. "The Godrej girls | Latest News & Updates at Daily News & Analysis". dna (in அமெரிக்க ஆங்கிலம்). 2010-03-24. பார்க்கப்பட்ட நாள் 2016-04-29.
  8. "Forbes India Magazine - How Adi Godrej's Daughter Nisa is Calling the Shots". forbesindia.com. பார்க்கப்பட்ட நாள் 2016-04-29.
  9. "Godrej group locks its future, crafts succession plan - The Economic Times". http://economictimes.indiatimes.com/news/company/corporate-trends/godrej-group-locks-its-future-crafts-succession-plan/articleshow/51336198.cms. பார்த்த நாள்: 2016-11-18. 
  10. "Godrej - Consumer Products". www.godrejcp.com. Archived from the original on 29 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 4 April 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "Nisaba 'Nisa' Godrej takes over as GCPL chairperson - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 4 April 2019.
  12. "Adi Godrej's younger daughter Nisa Godrej to lead Godrej Consumer Products Limited's FMCG business - Economic Times". Articles.economictimes.indiatimes.com. 2012-06-15. பார்க்கப்பட்ட நாள் 2014-02-23.
  13. "The Influencers". indiatoday.intoday.in. பார்க்கப்பட்ட நாள் 2016-04-29.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசா_கோத்ரேஜ்&oldid=3819074" இலிருந்து மீள்விக்கப்பட்டது