உள்ளடக்கத்துக்குச் செல்

நிசார் பாசுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிசார் பாசுமி
இயற்பெயர்சையத் நிசார் அகமது
பிறப்பு(1924-12-01)1 திசம்பர் 1924
ஜள்காவ், காந்தேஷ் பிரதேசம், மகாராட்டிரம், இந்தியா
பிறப்பிடம்பாக்கித்தான்
இறப்பு22 மார்ச்சு 2007(2007-03-22) (அகவை 83)
கராச்சி, சிந்து மாகாணம், பாக்கித்தான்
இசை வடிவங்கள்சமகால இசைக்கருவிகள்
தொழில்(கள்)இசையமைப்பாளர் & திரைப்படங்களில் இசை இயக்குனர்
இசைத்துறையில்1944–2007

நிசார் பாசுமி (Nisar Bazmi) (1924 திசம்பர் 1 - 2007 மார்ச் 22) இவர் இந்தியாவிலும், பாக்கித்தானிலும் திரைப்படத் துறையின் இசையமைப்பாளராகவும், இசை இயக்குநராகவும் இருந்தார். [1]

இவர், தெற்காசியாவின் மிகவும் பிரபலமான இசைக்கலைஞர்களில் ஒருவராக அறியப்பட்டார். ஆலம்கீர் போன்ற புதிய பாடகர்களையும் அறிமுகப்படுத்தினார். இசையமைப்பாளர்கள் இலட்சுமிகாந்த்-பியரேலால் ஆகிய இருவரும் இந்தியப் பிரிப்புக்கு முன்னர் இந்தியாவில் இவருடன் இணைந்திருந்த இசைக்கலைஞர்களாவர். இருப்பினும், பின்னணி பாடகர் அகமது ருஷ்தியின் குரலில் இவர் இசையமைத்ததற்காக முதன்மையாக நினைவுகூரப்படுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கையும், தொழிலும்

[தொகு]

இவர், 1924 ஆம் ஆண்டில் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் காந்தேஷ் பகுதியில் உள்ள ஜள்காவ் என்ற இடத்தில் சையத் குத்ரத் அலி என்பவருக்கு பிறந்தார். இவர் ஒரு கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. உண்மையில், இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அந்த நேரத்தில் மும்பையில் புகழ்பெற்ற கவ்வாலியான யாசின் கானின் கவ்வாலி குழுவில் இவர் தனது 11 வயதில் சேர வேண்டியிருந்தது. [2] இவருக்கு முந்தைய இசை பின்னணி ஏதுமில்லை. 1930களின் பிற்பகுதியில், மும்பையின் பிரபல இந்திய இசைக்கலைஞர் கான் சாகப் அமன் அலிகான் என்பவர் இவரது இசை ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு இவருக்கு நான்கு ஆண்டுகள் இசையினைக் கற்பித்தார். கலை அறிவைக் கொண்ட, அந்த நேரத்தில் வெறும் 13 வயதாக இருந்த இளம் பாசுமி, பல்வேறு இராகங்களிலும், இசைக் கருவிளிலும் விரைவாக தேர்ச்சி பெற்றார். 1939இல், அனைத்திந்தியந்திய வானொலி இவரை ஒரு கலைஞராக நியமித்தது. 1944ஆம் ஆண்டில், "நாதிர் ஷா துரானி" என்ற நாடகத்திற்காக சில பாடல்களை இயற்றினார். இது மும்பை வானொலி நிலையத்திலிருந்து ஒளிபரப்பப்பட்டது. இந்தப் பாடலைபாடல்களை இரபீக் கசுனவி, அமிர்பாய் கர்நாடகி ஆகிய இருவம் பாடியிருந்தனர். இதற்குப் பின்னர், இவர், "ஒரு மாதத்திற்கு 50 ரூபாய் சம்பாதிக்கத் தொடங்கினார் - அந்த நாட்களில் இது மரியாதைக்குரிய சம்பளமாகும்."

இந்தியாவில்

[தொகு]

1946 இல் வெளியான "ஜமனா பார்" படத்திற்கு இவர் இசை அமைத்தார். இந்த நேரத்தில், இவர் தனது பெயரை நிசார் பாஸ்மி என்றும் மாற்றினார். [1] [3] இந்தியாவில் நாற்பது படங்களுக்கு இவர் இசை அமைத்தார். இவர் இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில் இருபத்தி எட்டு படங்கள் வெளியிடப்பட்டன. இவர் பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்த பிறகு மீதமுள்ள திரைப்படங்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன.

பாக்கித்தானில்

[தொகு]

இவர், 1962இல் பாக்கித்தானில் உள்ள தனது உறவினர்களைப் பார்க்கச் சென்றார். அங்கே இவர் மூத்த திரைப்படத் தயாரிப்பாளர் பசல் அகமது கரீம் பாசில் என்பவரைச் சந்தித்தார். அவர், இவரை பாக்கித்தான் படங்களுக்கு இசையமைக்க அழைத்தார். "இவர், இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு பாக்கித்தானில் குடியேற முடிவு செய்தார்." [2]

பாக்கித்தானில் இவரது முதல் பாடல் 1964ஆம் ஆண்டு வெளியான "ஐசா பி ஹோடா ஹை" படத்திற்காக பாடகர்கள், அகமது ருஷ்டி, நூர் ஜஹான் பாடிய "மொஹபத் மீ தேரே சார் கி கசம்" என்பதாகும். ரூனா லைலா, அகமது ருஷ்டி, மெஹ்தி ஹாசன், பைசல் நதீம், குர்ஷீத் நூராலி (ஷீரசி), சலீம் ஷாஜாத் ஆகியோருக்காக பல பாடல்களையும் இயற்றினார். இவர் பல நவீன இசையமைப்பாளர்களுக்கு பயிற்சி அளித்திருந்தார். இவரது நெருங்கிய மாணவர் / உதவியாளர் பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான பதர் உஸ் ஜமான் என்பவராவார்.பதர், 18 ஆண்டுகளாக இவருடன் தொடர்பிலிருந்தார். நிசார் பாசுமி தனது சாதனைகளுக்காக பல நிகார் விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும், இவரது வாழ்க்கையில் 140 படங்களுக்கு இசையமைத்தார். [2]

இறப்பு

[தொகு]

நிசார் பாசுமி 2007 மார்ச் 22 அன்று கராச்சியில் காலமானார். [4] [3]

ஒரு முக்கிய பாக்கித்தானிய ஆங்கில மொழி செய்தித்தாள் இவரது மரணத்திற்குப் பிறகு, "நிசார் பாசுமியின் மரணத்தில், பாக்கித்தானில் இசை மாணவர்கள் 140 திரைப்படங்களுக்கு இசையமைத்த ஒரு கலைஞரின் அனுபவத்திலிருந்து பயனடையும் ஒரு வாய்ப்பை இழந்துவிட்டனர்" என்று கருத்து தெரிவித்தது. [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Nisar Bazmi passes away (obituary and profile) Dawn (newspaper), Published 23 March 2007, Retrieved 27 December 2018
  2. 2.0 2.1 2.2 2.3 Shaikh Aziz (28 March 2007). "Nisar Bazmi: accomplished music director". Dawn (newspaper). பார்க்கப்பட்ட நாள் 27 December 2018.
  3. 3.0 3.1 Profile of Nisar Bazmi on cineplot.com website Published 28 September 2009, Retrieved 28 December 2018
  4. "Legendary music composer, director Nisar Bazmi remembered". Dunya News (TV Channel website). 22 March 2018. பார்க்கப்பட்ட நாள் 27 December 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசார்_பாசுமி&oldid=3053155" இலிருந்து மீள்விக்கப்பட்டது