நிசாத் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிசாத் குமார்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு3 அக்டோபர் 1999 (1999-10-03) (அகவை 24)
விளையாட்டு
விளையாட்டுஇணை ஒலிம்பிக் தடகளம்
மாற்றுத்திறன் வகைப்பாடுT47
நிகழ்வு(கள்)உயரம் தாண்டுதல்
பதக்கத் தகவல்கள்
ஆடவர் இணை-தடகளம்
நாடு  இந்தியா
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2020 தோக்கியோ உயரம் தாண்டுதல் T47
உலக இணை தடகளப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2019 துபாய் உயரம் தாண்டுதல் T47

நிசாத் குமார் (பிறப்பு: 3 அக்டோபர் 1999) இந்திய இணைஒலிம்பிக் உயரம் தாண்டுதல் விளையாட்டு வீரர்.[1] இவர் இணை ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக 2020 தோக்கியோவில் கலந்துகொண்டு T47 நிகழ்வில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்; இவர் தாண்டிய உயரம் 2.06 மீ ஆசிய சாதனையாக அமைந்தது.[2][3][4]

வாழ்க்கை வரலாறு[தொகு]

நிசாத் இமாச்சலப் பிரதேசத்தின் உனா நகரைச் சேர்ந்தவர். தனது எட்டாவது அகவையில் விபத்தொன்றில் வலது கையை இழந்தார்.[5] முன்னதாக 2021இல் கோவிடு பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு நோயிலிருந்து மீண்டார்.[6]லவ்லி புரொபசனல் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்றார்.[7]

விளையாட்டு வாழ்வு[தொகு]

2009இல் நிசாத் குமார் இணை ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகத் தொடங்கினார். நவம்பர் 2019இல் துபாயில் நடந்த உலக இணை தடகளப் போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில் T47 வகைப்பாட்டில் போட்டியிட்டு மூன்றாமிடத்தில் வெங்கலப் பதக்கம் வென்றார். இந்த வெற்றியானது 2020 கோடை இணை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை வழங்கியது.[8]

2020 இணை ஒலிம்பிக் போட்டியில் தமது வெள்ளிப் பதக்கத்தை ஐக்கிய அமெரிக்காவின் டல்லசு வைசு என்ற வீரருடன் இணைந்து வென்றுள்ளார். இருவரும் ஒரே உயரமான 2.06 மீ தாண்டியுள்ளனர்.[5][9][10]

இதனையும் காண்க[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Nishad Kumar - Athletics | Paralympic Athlete Profile" (in en). https://www.paralympic.org/nishad-kumar. 
  2. Sportstar, Team. "Tokyo Paralympics 2020 Day 5: Nishad Kumar wins silver in high jump; Bhavinaben Patel wins table tennis silver, Vinod Kumar wins bronze in discus throw" (in en). https://sportstar.thehindu.com/olympics/tokyo-paralympics/tokyo-paralympics-2021-day-5-indian-athletes-in-action-live-streaming-updates/article36154220.ece. 
  3. TokyoAugust 29, India Today Web Desk; August 29, 2021UPDATED:; Ist, 2021 18:36. "Tokyo Paralympics 2020: Nishad Kumar bags high jump silver to add 2nd medal in India's tally" (in en). https://www.indiatoday.in/sports/other-sports/story/tokyo-paralympics-nishad-kumar-clinches-silver-medal-for-india-in-mens-high-jump-1846802-2021-08-29. 
  4. "Tokyo Paralympics: Nishad Kumar wins silver medal in T47 high jump event, creates Asian Record" (in en). 2021-08-29. https://www.hindustantimes.com/sports/tokyo-paralympics-high-jumper-nishad-kumar-wins-silver-medal-101630238371703.html. 
  5. 5.0 5.1 "Lost right hand in fodder-cutting machine, Nishad Kumar wins silver at Paralympics" (in en). 2021-08-29. https://indianexpress.com/article/sports/sport-others/tokyo-paralympics-nishad-kumar-high-jump-t47-event-silver-medal-7476793/. 
  6. "Paralympics 2020 | Nishad Kumar wins silver in men’s high jump" (in en-IN). The Hindu. 2021-08-29. https://www.thehindu.com/sport/athletics/paralympics-2020-nishad-kumar-wins-silver-in-mens-high-jump/article36164289.ece. 
  7. "Athletics NISHAD KUMAR Nishad Kumar - Tokyo 2020 Paralympics" (in en-us) இம் மூலத்தில் இருந்து 2021-08-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210828151537/https://olympics.com/tokyo-2020/paralympic-games/en/results/athletics/athlete-profile-n1589679-nishad-kumar-nishad-kumar.htm. 
  8. "Dubai 2019 Results | Event Overview - Men's High Jump T47". https://www.paralympic.org/dubai-2019/schedule/info-live-results/atdu19/eng/zz/engzz_athletics-event-overview-men-s-high-jump-t47.htm. 
  9. "Tokyo Paralympics 2021: Nishad Kumar wins silver in high jump" (in en). 2021-08-29. https://www.espn.com/olympics/story/_/id/32107117/tokyo-paralympics-2021-nishad-kumar-wins-silver-high-jump. 
  10. "Athletics - Men's High Jump - T47 Schedule | Tokyo 2020 Paralympics" (in en-us) இம் மூலத்தில் இருந்து 2021-08-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210829172021/https://olympics.com/tokyo-2020/paralympic-games/en/results/athletics/event-schedule-men-s-high-jump-t47.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசாத்_குமார்&oldid=3442770" இருந்து மீள்விக்கப்பட்டது