நிக் கீர்யோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிக் கீர்யோசு
Nick Kyrgios RG13 (6) (cropped).jpg
நாடு  ஆத்திரேலியா
வசிப்பிடம் மெல்பேர்ண், ஆத்திரேலியா
பிறந்த திகதி 27 ஏப்ரல் 1995 (1995-04-27) (அகவை 26)
பிறந்த இடம் கான்பரா, ஆஸ்திரேலியா
உயரம் 1.96 m (6 ft 5 in)
நிறை 78 கிலோ
தொழில்ரீதியாக விளையாடியது 2013
விளையாட்டுகள் வலது-கை (இரு-கை பின்னோக்காட்டம்)
வெற்றிப் பணம் $235,084
ஒற்றையர்
சாதனை: 3–7
பெற்ற பட்டங்கள்: 0
அதி கூடிய தரவரிசை: No. 144 (23 சூன் 2014)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் 2R (2014)
பிரெஞ்சு ஓப்பன் 2R (2013)
விம்பிள்டன் QF (2014)
அமெரிக்க ஓப்பன் 1R (2013)
இரட்டையர்
சாதனைகள்: 0–2
பெற்ற பட்டங்கள்: 0
அதிகூடிய தரவரிசை: No. 474 (16 செப்டம்பர் 2013)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் 1R (2013)
பிரெஞ்சு ஓப்பன்
விம்பிள்டன்
அமெரிக்க ஓப்பன்

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 23 சூன் 2014.

நிக்கலோசு இல்மி நிக் கீர்யோசு (Nicholas Hilmy "Nick" Kyrgios, 27 ஏப்ரல் 1995)[1] ஆத்திரேலியாவைச் சேர்ந்த தொழில்முறை டென்னிசு விளையாட்டாளர். 2013ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று போட்டியில் சிறுவர் ஒற்றையர் கோப்பையையும் விம்பிள்டன் கோப்பை போட்டிகளில் சிறுவர் இரட்டையர் கோப்பையையும் வென்றுள்ளார். 2014 விம்பிள்டனில் காலிறுதிக்கு எட்டியது இவரது சிறந்த சாதனையாக உள்ளது.

வாழ்க்கை வரலாறு[தொகு]

நிக்கலோசு இல்மி கீர்யோசு ஆஸ்திரேலியாவின் கான்பராவில் பிறந்தவர். இவரது தந்தை, கீர்யோசு (ஜார்ஜ்) கிரேக்கராவார். தாய் நோர்லைலா, மலேசியப் பின்னணியைக் கொண்டவர்.[2][3] தந்தை கீர்யோசு வண்ணமடிக்கும் சுயத்தொழிலைக் கொண்டவர். தாய் கணினி பொறியியலாளர்.[4] மூன்றாவதும் கடைசியுமான இவருக்கு ஒரு அண்ணனும் அக்காளும் உண்டு; அண்ணன், கிறிசுடோசு, வக்கீலாகவும் அக்காள்,அலிமா, நடிகையாகவும் உள்ளனர்.[5] கீர்யோசு எட்டாவது வகுப்பு வரை ராட்போர்டு கல்லூரியில் படித்து 12ஆம் வகுப்பு படிப்பை 2012இல் தரமலான் கல்லூரியில் முடித்தார்.[6]

கூடைப் பந்தாட்டத்தில் சிறந்து விளங்கிய கீர்யோசு தனது பதின்ம ஆண்டுகளில் ஆத்திரேலியத் தலைநகர ஆட்புல அணியிலும் ஆத்திரேலிய அணியிலும் விளையாடியுள்ளார். தமது 14வது அகவையில் டென்னிசில் மட்டுமே தமது கவனத்தைக் குவியப்படுத்த தீர்மானித்ததை அடுத்து கூடைப்பந்ந்தாட்டத்தை விட்டார்.[7] இரண்டு ஆண்டுகள் கழித்து ஆத்திரேலிய விளையாட்டு நிறுவனத்தின் முழைமையான கல்விக்கொடையைப் பெற்று டென்னிசு விளையாட்டில் சிறப்புப் பயிற்சி பெறலானார். ஐக்கிய அமெரிக்காவின் என்பிஏ ஆட்டங்களில் கீர்யோசு பாஸ்டன் செல்டிக்ஸ் அணியின் விசிறியாவார் .[8]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Nick KYRGIOS". International Tennis Federation. பார்த்த நாள் 10 திசம்பர் 2012.
  2. LEO SCHLINK (1 July 2014). "Rod Laver says Nick Kyrgios can put pressure on Rafael Nadal at Wimbledon tonight". NEWS CORP AUSTRALIA. http://www.couriermail.com.au/sport/tennis/rod-laver-says-nick-kyrgios-can-put-pressure-on-rafael-nadal-at-wimbledon-tonight/story-fnii0pkt-1226973082150. பார்த்த நாள்: 2 July 2014. "Kyrgios’ manager John Morris: “Then you’ve got the mass audience he can potentially reach in Malaysia with his Mum (Norlaila) being half Malaysian and the entire Asian community."" 
  3. Adam Harvey (Wed 2 Jul 2014). "Australian tennis hopeful Nick Kyrgios might be 'the one' but first he needs to play Rafael Nadal". ABC. http://www.abc.net.au/news/2014-07-01/nick-kyrgios-to-play-nadal-at-wimbledon/5564038. பார்த்த நாள்: 2 July 2014. 
  4. JACQUELIN MAGNAY (JUNE 27, 2014). "Nick Kyrgios now feels the Grand Slam pressure". THE AUSTRALIAN. http://www.theaustralian.com.au/sport/tennis/nick-kyrgios-now-feels-the-grand-slam-pressure/story-fnbe6xeb-1226968834872. பார்த்த நாள்: 2 July 2014. 
  5. http://www.atpworldtour.com/Tennis/Players/Ky/N/Nick-Kyrgios.aspx NICK KYRGIOS: atpworldtour.com
  6. Dutton, Chris (15 December 2012). "Kyrgios has sights on Open season". Canberra Times. http://www.canberratimes.com.au/sport/tennis/kyrgios-has-sights-on-open-season-20121214-2bfnl.html. பார்த்த நாள்: 15 December 2012. 
  7. Pearce, Linda (25 January 2013). "Newly crowned No.1 reaps reward of choosing right court". Sydney Morning Herald. http://www.smh.com.au/sport/tennis/newly-crowned-no1-reaps-reward-of-choosing-right-court-20130124-2d9r9.html. பார்த்த நாள்: 25 January 2013. 
  8. Loving The Clay - nickkyrgios.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்_கீர்யோசு&oldid=2545338" இருந்து மீள்விக்கப்பட்டது