நிக் காம்ப்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக் காம்ப்டன்

நிக் காம்ப்டன் (Nick Compton , பிறப்பு: சூன் 26 1983), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 16 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 775 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக 117 ஓட்டங்களை எடுத்துள்ளார். 194 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 12,168 ஓட்டங்களை எடுத்துள்ளர். அதில் அதிகப்ட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 254* ஓட்டங்களை எடுத்துள்ளார். இவர் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்காக எந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடவில்லை.

ஒரு வலது கை துவக்க மட்டையாளர் மற்றும் இவ்வப்போது வலது கை எதிர்ச் சுழல் பந்து வீச்சாளரான இவர் 2001 இல் மிடில்செக்ஸிற்காக பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார் மற்றும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார். 2010 ஆம் ஆண்டில் சோமர்செட் அணிக்காக விளையாடினார். 2012 இல் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.

ஏப்ரல் 2013 இல், விஸ்டன் கிரிக்கெட் வீரர்களின் நாட்குறிப்பானது இந்த ஆண்டின் ஐந்து விஸ்டன் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக காம்ப்டனை பெயரிட்டது. [1] இவர் 2013 சீசனில் வொர்செஸ்டர்ஷைர் துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார்

ஆரம்பகால மற்றும் சொந்த வாழ்க்கை[தொகு]

காம்ப்டன் தென் ஆப்ரிக்காவின் டர்பனில் பிறந்து வளர்ந்தார். இவரின் தந்தை ரிச்சட் கொம்டன் முன்னாள் முதல் தரத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவரி தாய் ஜிம்பாப்வே பொது உறவுகள் மற்றும் இதழியல் பின்னணியினைக் கொண்ட கிலினஸ் ஆவார் [2] காம்ப்டன் சிறுவயதிலிருந்தே துடுப்பட்டத்தில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார்.இவர் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் மற்றும் ஆர்செனல் கால்பந்து வீரர் டெனிஸ் காம்ப்டனின் பேஇவ மற்றும் சக அர்செனல் கால்பந்து வீரர் லெஸ்லி காம்ப்டனின் பெரிய மருமகன் ஆவார்.

காம்ப்டனின் தந்தை ரிச்சர்ட் மற்றும் மாமா பேட்ரிக் இருவரும் தென்னாப்பிரிக்காவில் நடாலுக்காக முதல் தர துடுப்பாட்டம் விளையாடினர். காம்ப்டன் தனது பதின்பருவத்தில் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார் மற்றும் விளையாட்டு உதவித்தொகை திட்டத்தில் ஹாரோ பள்ளியில் பயின்றார், அங்கு இவருக்கு டேவிட் எல்லேரே வழிகாட்டினார். [3]பள்ளித் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்தார். [4]

பின்னர் 18 ஆவது வயதில், காம்ப்டன் இசிபி எனப்படும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் துடுப்பாட்ட அணிகளின் சார்பாக 19 வயதிற்குட்பட்ட வெஸ்ட் இண்டீஸ் பள்ளிக்கள் அணிக்கு எதிராக விளாஇயாடிய போது மூன்று போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராகக் களம் இறங்கிய இவர் ஒரு போட்டியில் 74 ஓட்டங்கள் எடுத்தார்.[5]ஒரு மாதத்திற்குப் பிறகு, அதே சுற்றுப்பயணத்தின் போது இவர் 18 வயதிற்குட்பட்ட இங்கிலாந்து அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், இந்த சந்தர்ப்பத்தில் மூன்றாம் வீரராகக் கள்ம் இறங்கிய இவர் 42 ஓட்டங்களை அடித்தார். [6]

காம்ப்டன் டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் பட்டத்தைப் பயின்றார். ஹாட்ஃபீல்ட் கல்லூரியில் பின்னர் இவர் பயின்றார். [7] இருப்பினும், ஒரு தொடர்ச்சியான இடுப்பு பிரச்சனை ஏற்பட்டதனால் அது இறுதியில் அறுவை சிகிச்சைக்கு வழிவகுத்தது.பின்னர் அது துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற வழிவகுத்தது.[8]

சான்றுகள்[தொகு]

  1. "Wisden – Nick Compton". ESPNCricinfo. 24 June 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Wisden – Nick Compton". ESPNCricinfo. 24 June 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. Hopps, David (26 October 2009). "Nick Compton ends family ties at Middlesex for new life at Somerset". The Guardian. 29 October 2009 அன்று பார்க்கப்பட்டது.
  4. . 
  5. "ECB Schools v West Indies Under-19s". CricketArchive. 29 October 2009 அன்று பார்க்கப்பட்டது.
  6. "England Under-18s v West Indies Under-19s". CricketArchive. 29 October 2009 அன்று பார்க்கப்பட்டது.
  7. Friend, Nick. "Opening up: Nick Compton on pressure, England, Pietersen and more". Palatinate. 9 November 2018 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Wisden – Nick Compton". ESPNCricinfo. 24 June 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்பு[தொகு]

நிக் காம்ப்டன் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 27 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்_காம்ப்டன்&oldid=2887661" இருந்து மீள்விக்கப்பட்டது