நிக்டிட்டிரோமசு
| நிக்டிட்டிரோமசு | |
|---|---|
| பாராக், நிக்டிட்ரோமசு அல்பிகோலிசு | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | பிசிபார்மிசு
|
| குடும்பம்: | |
| பேரினம்: | நிக்டிட்டிரோமசு கெளல்டு, 1838
|
| மாதிரி இனம் | |
| பாராக், நிக்டிட்ரோமசு அல்பிகோலிசு கெளல்டு, 1838 | |
| சிற்றினம் | |
|
உரையினை காண்க | |
நிக்டிட்டிரோமசு (Nyctidromus) என்பது கேப்ரிமுல்கிடே குடும்பத்தில் உள்ள பக்கி பேரினமாகும். இப்பேரினத்தின் சிற்றினங்கள் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் பரவலாகக் காணப்படுகின்றன.
வகைப்பாட்டியல்
[தொகு]நிக்டிட்டிரோமசு பேரினமானது 1838ஆம் ஆண்டில் இங்கிலாந்து பறவையியலாளர் ஜான் கோல்ட் என்பவரால் புதிதாக விவரிக்கப்பட்ட நிக்டிட்டிரோமசு டெர்பையானசு சிற்றினத்திற்கு இடமளிக்க அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே இந்த உயிரலகு மாதிரி இனமாகும். இது இப்போது பாராக், நிக்டிட்ரோமசு அல்பிகோலிசு (கமெலின்) 1789-இன் துணையினமாகக் கருதப்படுகிறது. இதன் பேரினப் பெயர் பண்டைய கிரேக்கச் சொல்லான நுக்டி- அதாவது "இரவு" என்று பொருள் படும் சொல்லுடன் -ட்ரோமோசு அதாவது "ஓட" எனும் பொருள் படும் சொல் சேர்ந்து இரவில் காணப்படும் பறவை என்பதைக் குறிப்பதாக அமைந்துள்ளது.
இப்பேரினம் இரண்டு சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[1]
- பாராக், நிக்டிட்ரோமசு அல்பிகோலிசு
- அந்தோணி பக்கி, நிக்டிட்ரோமசு அந்தோணி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2022). "Frogmouths, Oilbird, potoos, nightjars". IOC World Bird List Version 12.1. International Ornithologists' Union. Retrieved 7 July 2022.