உள்ளடக்கத்துக்குச் செல்

நிக்கோல் பெர்ல்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கோல் பெர்ல்மன்
பிறப்புதிசம்பர் 10, 1981 (1981-12-10) (அகவை 44)[1]
போல்டர், கொலராடோ, ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்நியூயார்க் பல்கலைக்கழகம்
பணிதிரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2009–இன்று வரை

நிக்கோல் பெர்ல்மன் (ஆங்கிலம்: Nicole Perlman) (பிறப்பு: திசம்பர் 10, 1981) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் ஆவார். மார்வெல் திரைப் பிரபஞ்சப் படங்களான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி[2] (2014) மற்றும் கேப்டன் மார்வெல்[3] (2019) போன்ற படங்களில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

பெர்ல்மேன் 10 திசம்பர் 1981 இல் கொலராடோ போல்டரில் ஒரு யூத[4][5] குடும்பத்தில் பென்னி மற்றும் மைக்கேல் பெர்ல்மன் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் போல்டரில் வளர்ந்து,[6] அங்கு உள்ள போல்டர் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். அதன் பிறகு நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கலை திரைப்படம் மற்றும் நாடகம் சார்ந்த படிப்பை படித்து 2003 இல் பட்டம் பெற்றார்.[7]

திரைப்படம்

[தொகு]
ஆண்டு தலைப்பு எழுத்தாளர் தயாரிப்பாளர் குறிப்புகள்
2011 தோர் ஆலோசகர் இல்லை அங்கீகரிக்கப்படாதது
2014 கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி ஆம் இல்லை ஜேம்ஸ் கன் என்பவருடன் இணை எழுத்தாளராக
2017 ரைசிங் அ ருக்ஸ் ஆம் Executive குறும்படம்
2018 தி ஸ்லொவ்ஸ் ஆம் இல்லை குறும்படம்; இயக்குநர்[8]
2019 கேப்டன் மார்வெல் கதை இல்லை இணை கதை ஆசிரியராக
போகிமொன் டிடெக்ட்டிவ் பிகாச்சு கதை இல்லை இணை கதை ஆசிரியராக

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் நிக்கோல் பெர்ல்மன்
  2. ↑ Strom, Mark (August 19, 2014). "Nicole Perlman Writes the Galaxy". Marvel.com. Archived from the original on August 22, 2014. Retrieved August 22, 2014.
  3. ↑ Borys Kit (April 13, 2015). "'Captain Marvel' Movie Targets 'Inside Out' and 'Guardians' Writers". The Hollywood Reporter.
  4. ↑ "Boulder Jewish Family Service Presents Reel Hope Boulder with Screenwriter Nicole Perlman". Jewish Family Service of Colorado. August 10, 2016. Retrieved March 3, 2019.
  5. ↑ David Fellows (November 6, 2016). "Reel Hope Boulder a Galactic Success For Boulder JFS". Boulder Jewish News. Retrieved March 3, 2019.
  6. ↑ "Meet The Woman Who Made History With Marvel's "Guardians Of The Galaxy"". BuzzFeed. July 30, 2014. Retrieved January 14, 2015.
  7. ↑ "Nicole Perlman". Variety. June 22, 2006. Retrieved January 14, 2015.
  8. ↑ Epstein, Sonia (23 October 2018). "Guardian's of the Galaxy's Nicole Perlman's Directorial Debut". Sloan Science & Film. Retrieved 25 October 2018.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கோல்_பெர்ல்மன்&oldid=4416657" இலிருந்து மீள்விக்கப்பட்டது