நிக்கோல் டேவிட்
| நிக்கோல் டேவிட் Nicol David DB; PJN; DSPN; KMN; AMN | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நிக்கோல் ஆன் டேவிட் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| முழு பெயர் | Nicol Ann David | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| புனைப்பெயர்கள் | துராசெல் பனி[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தேசம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பிறப்பு | 26 ஆகத்து 1983 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உயரம் | 1.62 m (5 அடி 4 அங்)[2] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| எடை | 55 கிலோகிராம்கள் (121 lb)[2] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தொழில்ரீதியாக விளையாடியது | 2000[2] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| விளையாட்டு(கள்) | வலது கை பழக்கம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பயிற்சியாளர் | லிஸ் இர்விங் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பயன்படுத்தப்படும் மட்டை | வில்சன் [2] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| இணைய தளம் | www.nicoldavid.com | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மகளிர் ஒற்றையர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அதி கூடிய தரவரிசை | 1-ஆம் நிலை (சனவரி, 2006) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தலைப்பு(கள்) | 98 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| இறுதிச் சுற்று(கள்) | 101 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உலக திறந்தவெளி போட்டிகள் | W (2005, 2006, 2008, 2009, 2010, 2011, 2012, 2014) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: சனவரி 2026. | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
டத்தோ நிக்கோல் டேவிட் அல்லது நிக்கோல் ஆன் டேவிட் (Nicol David அல்லது Nicol Ann David; பிறப்பு: 26 ஆகத்து 1983) என்பவர் உலகச் சுவர்ப்பந்து வாகையாளர் பட்டத்தை 8 முறை வென்று மலேசிய வரலாற்றில் சாதனை படைத்த மலேசிய விளையாட்டு வீராங்கனை ஆவார். மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 7 முறை தங்கம்; உலக விளையாட்டுகளில் சுவர்ப்பந்து 3 முறை தங்கம்; பொதுநலவாய விளையாட்டுக்களில் 2 முறை தங்கம் வென்று சாதனைகள் படைத்துள்ளார்.[3]
பிரித்தானிய திறந்த சுற்று சுவர்ப்பந்து வாகையாளர் பட்டத்தை 2005, 2006, 2008, 2012, 2014-ஆம் ஆண்டுகளில் வென்றுள்ளார். சூலை 2016-இல், பிரித்தானிய திறந்த சுற்று சுவர்ப்பந்து வாகையாளர் போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் தொடர்ந்து 151-ஆவது மாதமாக நிலைத்து நின்று, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் சுவர்ப்பந்து சாதனைகளையும் முறியடித்துள்ளார்.[4]
2021-இல் உலக விளையாட்டு அமைப்பால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், நிக்கோல் டேவிட் மொத்தம் 318,943 வாக்குகளைப் பெற்று; உலக விளையாட்டுகளின் அனைத்து காலத்திலும் சிறந்த விளையாட்டு வீரராக முடிசூடப்பட்டார்; அந்தக் கருத்துக் கணிப்பின் 24 வேட்பாளர்களில் இவர் மட்டுமே ஒரே மலேசியரும், ஒரே ஆசிய தடகள வீரரும் ஆவார்.[5][6]
பிப்ரவரி 2019-இல், நிக்கோல் டேவிட், சுவர்ப்பந்து உலகில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார். மேலும் 2018/2019 சூன் மாதத் தொழில்முறை சுவர்ப்பந்து போட்டியின் இறுதியில் ஓய்வு பெற முடிவு செய்தார். பன்னாட்டு அளவில் தொடர்ந்து 108 மாதங்கள் முதலிடத்தில் கோலோச்சிய இவர், செப்டம்பர் 2015-இல் பன்னாட்டு சுவர்ப்பந்து தரவரிசை போட்டிகளில் இருந்து விலகிக் கொண்டார்.[7]
மலேசிய பக்தி விருது
[தொகு]1999-ஆம் ஆண்டு; மற்றும் 2001-ஆம் ஆண்டு ஆகிய இரண்டு ஆண்டுகளில்; உலக இளையோர் சுவர்ப்பந்து பட்டத்தை அடுத்தடுத்து இரு முறை வென்ற முதல் சுவர்ப்பந்து வீரர் எனும் உலகச் சாதனையையும் படைக்கிறார்.
இவரின் அரிய விளையாட்டுத்துறைச் சாதனைகளுக்காக, 2008 சூன் 7-ஆம் திகதி, மலேசிய அரசர் சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன் அவர்கள்; நிக்கோல் டேவிட்டிற்கு மலேசிய பக்தி விருது எனும் உயரிய மலேசிய விருதை வழங்கிச் சிறப்பு செய்தார்.[8] 1975 ஆம் ஆண்டு சூன் 26-ஆம் தேதி நிறுவப்பட்ட இந்த விருதைப் பெற்ற முதல் நபர் என நிக்கோல் டேவிட் வரலாறு படைக்கிறார். கலை, அறிவியல் மற்றும் மனிதநேயத் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த 10 மலேசியர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுகிறது.[9] இதுவரையில் மலேசியாவில் இருவர் மட்டுமே இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டி
[தொகு]மிகச்சிறந்த மகளிர் சுவர்ப்பந்து வீராங்கனைகளில் ஒருவராக் கருதப்படும் இவர்,[10][11] 2004-ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடக்கவிழாவின் போது மலேசியாவிற்காக ஒலிம்பிக் தீச்சுடரை ஏந்திச் செல்லும் சிறப்பு நிக்கோல் டேவிட்டிற்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவர் மலேசியாவிற்கான ஐ.நா. தேசிய நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார்.[12]
2005–2010 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில்; தொழில்முறை சுவர்ப்பந்து சங்கத்தின் சிறந்த சுவர்ப்பந்து வீரருக்கான விருதை 7 முறை பெற்றுள்ளார். 2018-ஆம் ஆண்டு தொழில்முறை சுவர்ப்பந்து சங்கத்தால் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில், எல்லாக் காலத்திலும் பெண்கள் பிரிவில், சிறந்த சுவர்ப்பந்து வீரராக நிக்கோல் டேவிட் தேர்வு செய்யப்பட்டார்.[13][14]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]பினாங்கில் பிறந்த நிக்கோல் டேவிட், முன்னாள் பினாங்கு மாநில தடகள வீரர்; மற்றும் கால்பந்து வீரரான தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய இந்தியப் பொறியாளரான டெசுமண்ட் டேவிட் (Desmond David);[15] சீனர் வம்சாவளியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மலேசிய சீனப் பள்ளி ஆசிரியை ஆன் மேரி டேவிட் ஆகியோரின் மகள் ஆவார்.[16] இவருக்கு லியான்; மற்றும் செரில் எனும் இரண்டு சகோதரிகள் உள்ளனர்; இருவரும் மலேசிய தேசிய அளவில் திறமையான சுவர்ப்பந்து வீரர்கள் என அறியப்படுகிறார்கள்.
இடைநிலப்பள்ளியில் படிக்கும் காலத்தில் நிக்கோல் டேவிட்டிற்கு கணிதம் மிகவும் பிடித்த பாட்மாக இருந்தது; அவர் ஒரு நாள் ஒரு பொறியியலாளராக வேண்டும் என்று கனவு கொண்டிருந்தார். இவர் தன் தொடக்கக் கல்வியை கிரீன் லேன் கான்வென்ட் தொடக்கப்பள்ளியில் பயின்றார். இடைநிலைக்கல்வி மதிப்பீட்டில் ஏழு 'ஏ' மதிப்பெண்களையும்; மலேசிய பாடத் திட்டத்தில் ஏழு 'ஏ' மதிப்பெண்களையும் பெற்றார்.
விருதுகள்
[தொகு]சூலை 12, 2008 அன்று, பினாங்கு மாநில ஆளுநர் துன் அப்துல் ரகுமான் அப்பாஸ் அவர்களின் 70-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கௌரவிக்கப்பட்ட 497 பேரில் நிக்கோல் டேவிட் ஒருவராகும்.[17] டத்தோ என்ற விருதைப் பெற்ற 28 பேரில் நிக்கோல் டேவிட்டும் ஒருவர்.[17] இதன் மூலம் பினாங்கில் டத்தோ விருது பெற்ற இளைய நபர் என்ற பெருமையைப் பெற்றார்.[17] மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவி, நிக்கோல் டேவிட் "இப்போது என்னை விட பிரபலமானவர்" என்று ஒரு முறை நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.[18]
சூலை 2007-இல், நாட்டிங்காம் பல்கலைக்கழகம், நிக்கோல் டேவிட்டிற்கு முதுகலை கௌரவப் பட்டம் வழங்கி சிறப்பு செய்தது. 2004-ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி திறப்புவிழாவின் போது மலேசியாவிற்காக ஒலிம்பிக் தீச்சுடரை ஏந்திச் செல்லும் சிறப்பு நிக்கோல் டேவிட்டிற்கு வழங்கப்பட்டது.[19]
நிக்கோல் டேவிட் சுயசரிதை திரைப்படம்
[தொகு]செப்டம்பர் 23, 2019 அன்று, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் நிக்கோல் டேவிட்டிற்கு விளையாட்டு அறிவியல் துறையில் கௌரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பு செய்தது.[20][21]
எட்டு முறை உலக வாகையர் பட்டத்தை வென்று சாதனை படைத்த மலேசியாவின் சுவர்ப்பந்து அரசியான நிக்கோல் டேவிட்டின் வாழ்க்கை "நான் நிக்கோல் டேவிட்" (I am Nichole David) எனும் பெயரில் திரைப்படமாகிறது. இதை மலேசியாவின் 'ஏசிஇ' திரைப்பட நிறுவனம் தயாரிக்கிறது. தமது சுயசரிதை திரைப்படமாவது ஒருவித சிலிர்ப்பையும் உற்சாகத்தையும் அளிப்பதாக நிக்கோல் டேவிட் கூறியுள்ளார்.[22][23][24]
மலேசிய விருதுகள்
[தொகு]
மலேசியா
- Order of the Defender of the Realm (AMN) (2000)
- Order of the Defender of the Realm (KMN) (2006)[25]
- Order of Merit (DB) (2008)[26]
- Order of Meritorious Service (PJN) – Datuk (2017)[27]
பினாங்கு
- Order of the Defender of State (DSPN) – Dato' (2008)[28]
காட்சி படங்கள்
[தொகு]-
2009
-
2007
-
2009
-
2007
-
2007
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nicol Ann David, WISPA – Squash player profile". Women's International Squash Players Association. Retrieved 14 March 2010.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Nicol Ann David, Psa World Tour – Squash player profile". psaworldtour.com. Retrieved 19 March 2020.
- ↑ "Examining Nicol David". http://www.squashplayer.co.uk/Article_NicolDavid01.htm 2003. Retrieved 4 December 2016.
- ↑ "Nicol David Sets Historic Record Ranking Run". World Squash (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2016-07-01. Retrieved 2021-03-27.
- ↑ Guan, Kng Zheng (2021-02-01). "Malaysia's Nicol David named Greatest Athlete of All Time | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). Retrieved 2021-03-27.
- ↑ "IWGA The World Games Greatest Athlete of All Time". www.theworldgames.org. Retrieved 2021-03-27.
- ↑ "Squash Queen Nicol David Writes Her Name in History as Longest-Reigning World No. 1". kridangan. 25 June 2015.
- ↑ "PANDUAN PENCALONAN DKBPP 2018" (PDF). Bahagian Istiadat & Urusetia Persidangan Antarabangsa. Retrieved 2018-09-05.
- ↑ "Darjah Bakti". National Library of Malaysia. Archived from the original on May 30, 2012. Retrieved 20 January 2012.
- ↑ Newbery, Piers (May 21, 2013). "Ramy Ashour - the world's greatest racquet-sport player?". BBC Sport. Retrieved July 31, 2019.
- ↑ "Nicol David is World Champion Again". HuffPost UK. 9 January 2013.
- ↑ Binner, Andrew (9 September 2024). "David carried the Olympic torch for Malaysia during the build-up to Athens 2004, and served as Malaysia's Deputy Chef de Mission for Paris 2024". Olympics.com (in ஆங்கிலம்). Retrieved 2 January 2026.
- ↑ "Squash queen Nicol David to hang up racquet". Malaysiakini (in ஆங்கிலம்). 2019-02-19. Retrieved 2021-03-27.
- ↑ "A new beginning for Nicol Ann David". The Malaysian Reserve (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-01-06. Retrieved 2021-03-27.
- ↑ "Nicol David". Ekerjaya.com. 26 December 2007. Retrieved 15 March 2010.
- ↑ Naik, Shivani (3 April 2008). "Badminton player from Malaysia but she's 'first a Punju'". The Indian Express. Hyderabad, India. p. 1. Retrieved 23 March 2010.
- ↑ 17.0 17.1 17.2 "Nicol David Among 497 To Receive Penang Honours". Penang: Bernama. 12 July 2008. Retrieved 23 March 2010.
- ↑ "Biography". Official Website of the Prime Minister's Office of Malaysia. Retrieved 16 March 2010.
- ↑ "Malaysian Star Nicol David Carries Olympic Torch In KL". Worldsquash.org.uk. Archived from the original on 21 April 2008. Retrieved 14 March 2010.
- ↑ Mohamed Basyir (23 September 2019). "Former squash queen to inspire Malaysian athletes". New Straits Times. https://www.nst.com.my/news/nation/2019/09/523877/former-squash-queen-inspire-malaysian-athletes.
- ↑ Jessica Chua (24 September 2019). "Datuk Nicol David Receives Honorary Doctorate In Sports Science". Rojak Daily. Retrieved 14 December 2019.
- ↑ "மலேசியாவின் 'ஸ்குவாஷ் அரசி' டேவிட் நிகோல் வாழ்க்கை திரைப்படமாகிறது". www.nambikkai.com.my. Retrieved 2 January 2026.
- ↑ "Former Squash Champion Collaborates ACE Pictures Entertainment to Produce Biopic "I am Nicol David"". The Edge Markets. 7 June 2021. Retrieved 16 June 2021.
- ↑ ""I am Nicol David" biopic to depict squash queen's story". Bernama (Astro Awani). 7 June 2021. https://www.astroawani.com/berita-malaysia/i-am-nicol-david-biopic-depict-squash-queens-story-302081.
- ↑ "It's now 'Tun' Musa Hitam". Malaysiakini. 3 June 2006. https://www.malaysiakini.com/news/51996.
- ↑ "Nicol receives award from King" (in ஆங்கிலம்). The Sun Daily. 21 August 2008. Retrieved 2 August 2018.
- ↑ Rajes Paul (10 September 2017). "Chong Wei all fired up". The Star (Malaysia). Retrieved 29 July 2018.
- ↑ Christina Chin, Andrea Filmer, Looi Sue-Chern (12 July 2008). "'Just Nicol' conferred Datukship". The Star. Retrieved 2 August 2018.
{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் நிக்கோல் டேவிட் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Squash Stars பரணிடப்பட்டது 3 ஏப்ரல் 2014 at the வந்தவழி இயந்திரம்
- Malaysia’s Résumé – Datuk Nicol Ann David
- நிக்கோல் டேவிட்