நிக்கோலே இலியோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிக்கோலே இலியோன் (Nicolae Leon) ஓர் உருமேனிய உயிரியலாளர் ஆவார். இவர் 1862 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். இவர் இயற்கை ஆர்வலர் கிரிகோர் ஆண்டிபாவின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரர் ஆவார். [1][2]

இலியோன் உருமேனியாவின் போட்டோசானி மாகாணத்திலுள்ள கர்டெசுட்டி ஆட்சிப்பகுதிக்கு உட்பட்ட பைசெனி என்ற கிராமத்தில் பிறந்தார். [2] 1881 ஆம் ஆண்டு முதல் இவர் ஐயாசி பல்கலைக்கழகத்தின் மருத்துவப் புலத்தில் படித்தார். 1884 ஆம் ஆண்டில் விலங்கியல் படிப்பதற்காக யெனா பல்கலைக்கழகத்திற்குச் சென்று, 1887 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். ஐயாசிக்கு திரும்பிய பின்னர் இவர் 1889 ஆம் ஆண்டு மருத்துவப் புலத்தின் பேராசிரியராக ஆனார். பின்னர் இவர் அம்மருத்துவ நிறுவனத்தின் கல்வித் தலைவராகவும் பின்னர் 1918 மற்றும் 1920-1921 ஆம் ஆண்டுகளில் ஐயாசி பல்கலைக்கழகத்தின் கல்லூரித் தலைவராகவும் இருந்தார். [2]

1931 ஆம் ஆண்டு அக்டோபர் 4 அன்று நிக்கோலே இலியோன் காலமானார்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கோலே_இலியோன்&oldid=2986467" இருந்து மீள்விக்கப்பட்டது