நிக்கோலா போசின்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நிகோலா போசின் | |
---|---|
1650ஆம் ஆண்டு நிக்கோலா போசின் தன்னைத்தானே வரைந்து கொண்டது. | |
தேசியம் | பிரெஞ்சு |
அறியப்படுவது | சித்திரம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஏ ஆன் ஆர்காடியா ஈகோ, 1637-38 |
அரசியல் இயக்கம் | செவ்வியல் பரோக் |
நிக்கோலா போசின் (Nicolas Poussin)(15 சூன் 1594 – 19 நவம்பர் 1665)ஓர் செவ்வியல் நடை பிரெஞ்சு ஓவியர். இவரது படைப்புக்களில் தெளிவு,ஏரணம்,ஒழுங்கு சிறப்புப் பெறுகின்றன. வண்ணங்களை விட வரிவடிவை கூடுதலாக விரும்புபவர். பதினேழாம் நூற்றாண்டில் வெளிப்படையாக உணர்வுகளை சித்தரித்த மற்றும் ஆதிக்கம் செலுத்திய பரோக் நடைக்கு மாற்றாக இவரது ஓவியங்கள் அமைந்திருந்தன.இருபதாம் நூற்றாண்டு வரை யாக்-லூயி டேவிட் (Jacques-Louis David), யான்-ஆகஸ்ட்-டொமினிக் இங்க்ரே (Jean-Auguste-Dominique Ingres) மற்றும் பால் செசான் போன்ற செவ்வியல் நோக்கு கொண்ட ஓவியர்களின் அகத்தூண்டலாக இருந்தார்.
பெரும்பாலான தனது ஓவியங்களை ரோம் நகரத்தில் தீட்டிய இவர் வெகு குறைந்த காலம் கர்தினால் ரிச்லியுவின் ஆணைப்படி அரசரின் முதல் ஓவியராகப் பணியாற்ற பிரான்சில் தங்கியிருந்தார்.
ஓவியத் தொகுப்பு
[தொகு]-
The Four Seasons: Summer, or Ruth and Boaz, 1660–1664, oil on canvas, 118 x 160 cm, Louvre Museum
-
Et in Arcadia ego (Les Bergers d’Arcadie), late 1630s, oil on canvas, 85 x 121 cm, Louvre
-
Adoration of the Golden Calf - Nicolas Poussin - 1633-34 - National Gallery, London.
-
A Dance to the Music of Time - Nicolas Poussin - 1640 - The Wallace Collection.
வெளியிணைப்புகள்
[தொகு]விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: நிக்கோலா போசின்