நிக்கோலா பாக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கோலா ஜே. பாக்சு
Nicola J. Fox
பிறப்புஇட்சின்
பணியிடங்கள்பயன்முறை இயற்பியல் ஆய்வகம்
சூரிய இயற்பியல் அறிவியற்கோட்டம்
கல்வி கற்ற இடங்கள்இலண்டன் இம்பீரியல் கல்லூரி (அறிவியல் இளவல், முனைவர்)
சுறே பல்கலைக்கழகம் (அறிவியல் முதுவர்)
அறியப்படுவதுசூரிய இயற்பியல்
விருதுகள்நாசாவின் குழுச் சாதனை விருது (1998, 2000)

நிக்கோலா பாக்சு (Nicola J. Fox) (born 1969) நாசாவின் சூரிய இயற்பியல் அறிவியற்கோட்டம் இயக்குநர் ஆவார். பார்க்கர் சூரிய ஆய்கல முதன்மை அறிவியலாளரான இவர் பன்னாட்டுச் சூரியத் தரை இயற்பியல் சார்ந்த அறிவியல் முன்முனைவுக்கான அறிவியல், இயக்குதல் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.

இளமையும் கல்வியும்[தொகு]

பாக்சு இங்கிலாந்து இட்சின் நகரில் பிறந்தார்.[1] இவர் எட்டு மாதக் குழந்தையாக இருந்தபோதே இவரது தந்தையார் இவருக்கு அப்பொல்லோ-11 விண்கலம் நிலவில் இறங்கியதைத் தொலைக்காட்சியில் காட்டியுள்ளார்.[1] இவர் தொடர்ந்து பாக்சின் அறிவியல் ஈர்ப்பை இரவு வான விண்மீன்களையும் கோள்களின் இயக்கங்களை அறிமுகப்படுத்தியும் ஊக்குவித்து வந்துள்ளார்.[2] இவர் இலெட்ச்வர்த் கார்டன் நகரில் உள்ள புனித பிரான்சிசு மகளிர் கல்லூரியில் படித்தார்.[1] கல்லூரியில் படிக்கும்போது தன் வகுப்பில் இவர் ஒருவர் மட்டுமே பெண்பாலராக இருந்துள்ளார்.[1]

பாக்சு இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் இயற்பியலில் இளவல் பட்டத்தை 1990 இல் பெற்றார். இவர் சுறே பல்கலைக்கழகத்தில் தொலைத்தொடர்பு, கோள் பொறியியல் துறையில் தன் முதுவர் பட்டத்தை 1991 இல் பெற்றுள்ளார்.[2] பிறகு தன் முனைவர் பட்ட ஆய்வுக்காக மீள இலண்டன் இம்பீரியல் கல்லூரிக்குத் திரும்பிவந்து இம்பீரியல் கல்லூரி ஒன்றியப் பெண் அலுவலராக பணிபுரிந்துள்ளார்.[3] இவர் 1995 இல் விண்வெளி இயற்பியலிலும் வளிமண்டல இயற்பியலிலும் முனைவர் பட்டத்தை முடித்தார்.[1][4] இவரது முனைவர் ஆய்வு புவிக் காந்தப் புயல்களில் அமைந்தது. இவர் அமெரிக்கத் தேசிய ஆராய்ச்சி மன்ற முதுமுனைவர் ஆய்வாளரக கோடார்டு விண்வெளிப் பறப்பு மையத்தில் சேர்ந்தார். அங்கு மரியோ அக்குஞ்சா வழிகாட்டுதலில் இவர் முதுமுனைவர் ஆய்வில் ஈடுபட்டார்.[1][5] கோடார்டில் இருந்தபோது இவர் சூரிய, புவி உறவுகளை ஆய்வு செய்தார்.[6] இவர் விண்வெளி வானிலை ப்ரப்புரையாளர் ஆவார். இவர் தன் அறிவியல் வாழ்க்கை நெடுகிலும் பொதுமக்களோடு தொடர்பாடலில் இருந்தார்.[7][8]

ஆராய்ச்சியும் வாழ்க்கைப்பணியும்[தொகு]

இவர் 1998 இல் ஜான் ஆப்கான்சு பல்கலைக்கழகத்தில் பயன்முறை இயற்பியல் ஆய்வகத்தில் சேர்ந்தார். இங்கு இவர் பன்னாட்டுச் சூரியத்தரை இயற்பியல்சார் அறிவியல் முன்முனைவுக்கான அறிவியல், செயற்கள ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இவரது ஆய்வு சூரியக் குடும்ப மின்ம ஊடக தரவுப் பகுப்பாய்வில் கவனம் குவிக்கிறது. பலவகை விண்கலங்களைப் பயன்படுத்தி சூரியக் காந்தக் கடப்பினை ஆய்வு செய்கிறார். இவர் நாசாவின் புவிமுனைச் செயற்கைக் கோளிலும் முன்பு பணிபுரிந்துள்ளார் .[9] இவர் 2008 இல் விண்மீனோடு வாழ்தல் நிகழ்ச்சிநிரல் சார்ந்த நாசாவின் வான் ஆல்லன் ஆய்கலத் திட்டத்தின் இணைத் திட்ட அறிவியலாளராக இருந்தார்.[10][11] இவட் 2017 இல் சூரியனைத் தொடுவோம் எனும் கருப்பொருளில் TED கருத்தரங்கில் பேசியுள்ளார்.[12]

இவர் 2015 இல் நாசாவின் சூரிய இயற்பியல் விண்வெளி ஆராய்ச்சிக் கிளையில் சேர்ந்தார்.[13] இவர் 2018 செப்டம்பர் மாத்த்தில் நாசா தலைமையகத்தில் சூரிய இயற்பியல் பிரிவின் தலைவராகப் பணியமர்த்தப்பட்டார்.[1] சூரிய இயற்பியல் பிரிவு சூரிய நிகழ்வுகளோடு அதுசார்ந்த எந்திரன் அனுப்புதல், விண்கல ஆய்வு ஆகியற்றை மேற்பார்வையிடுகிறது.[14][15] இவர் பார்க்கர் சூரியத் திட்ட விண்கலத்தின் முதன்மை அறிவியலாளர் ஆவார். இவர் 2018 ஆகத்து மாத்த்தில் பார்க்கர் ஆய்வுக்கலம் விண்வெலியில் செலுத்தப்பட்டபொது உடனிருந்தார்.[16][17][18]> இந்த ஆய்கலம் சூரியத் தழலின் சூடாக்க விளைவையும் சூரியக் காற்று உருவாக்கத்தையும் ஆய்வு செய்தது.[19][20] இந்த திட்ட இணை இயக்குநராக மார்கரெட் உலூசி விளங்கினார்.[21]

இவர் புவி இயற்பியல் ஆராய்ச்சிக் கடிதங்கள் இதழுக்கும் வளிமண்டலம், சூரியத்தரை இயற்பியல் இதழுக்கும் இணையாசிரியராக இருந்துள்ளார்.[10] இவர் கோள் அறிவியல் கழகத்தின் வல்லுனர் ஆவார்.[22]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

 • 1993 ஐரோப்பிய புவி அறிவியல் ஒன்றியத்தின் இளம் அறிவியலாளர் விருது[4]
 • 1997 பன்னாட்டுச் சூரிய மேற்பரப்பு இயற்பியல் முன்முனைவில் தன்னிகரற்ற செயல்திற விருது[சான்று தேவை]
 • 1998 நாசா குழுச் சாதனை விருது[10]
 • 2000 நாசா குழுச் சாதனை விருது[10]

சொந்த வாழ்க்கைe[தொகு]

பாக்சுக்குத் திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர்.[23]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Loff, Sarah (2019-05-10). "Meet the Women in Charge of NASA's Science Divisions". NASA. பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
 2. 2.0 2.1 Asher, J. P. "NASA mission to 'touch the Sun' launches - led by scientist from Hitchin". The Comet (in ஆங்கிலம்). Archived from the original on 2019-05-12. பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
 3. "Felix" (PDF). Felix Online. 1993-10-22. Archived from the original (PDF) on 2019-05-12. பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
 4. 4.0 4.1 "Dr. Nicola Fox, NASA - NASA Plans To Launch A Probe Next Year To 'Touch The Sun'". John Catsimatidis Official Site (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-06-04. பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
 5. Fox, Nicola (2018-01-01). "Nicola Fox". Faculty Images. https://commons.erau.edu/faculty-images/3. 
 6. "SolarNews". spd.stanford.edu. Archived from the original on 2019-05-12. பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
 7. "Presentations from the Workshops". pwg.gsfc.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
 8. "A Visit to NASA Goddard". www.ux1.eiu.edu. பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
 9. Corporation, SpaceTech (2018-09-11). "Your Online Coffee Break - Podcasts that inspire, educate and entertain". Your Online Coffee Break (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-05-12. பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
 10. 10.0 10.1 10.2 10.3 Zell, Holly (2013-06-07). "Presenter Bio: Nicola Fox". NASA (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
 11. Mauk, B. H.; Fox, N. J.; Kanekal, S. G.; Kessel, R. L.; Sibeck, D. G.; Ukhorskiy, A. (2014), Fox, Nicola; Burch, James L. (eds.), "Science Objectives and Rationale for the Radiation Belt Storm Probes Mission", The Van Allen Probes Mission (in ஆங்கிலம்), Springer US, pp. 3–27, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-1-4899-7433-4_2, hdl:2060/20140005819, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781489974334
 12. TEDx Talks (2017-08-01), Touching the Sun | Nicola Fox | TEDxJHU, பார்க்கப்பட்ட நாள் 2019-05-12
 13. Beatrice, Mailing Address: 8523 West State Highway 4; Us, NE 68310 Phone:223-3514 Contact. "NASA Presenters - Homestead National Monument of America (U.S. National Park Service)". www.nps.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
 14. "Nicola Fox, Heliophysics Division Director | Science Mission Directorate". science.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
 15. Garner, Rob (2018-02-23). "Nicola Fox Takes Helm as Director of NASA's Heliophysics Division". NASA. பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
 16. Press, Associated (2018-08-12). "Nasa's Parker probe sets off on quest for closeup view of the sun" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/science/2018/aug/12/nasas-parker-probe-sets-off-on-quest-for-closeup-view-of-the-sun. 
 17. Bodkin, Henry (2017-05-31). "NASA will fly spacecraft directly into Sun in bid to unlock the secrets of solar storms" (in en-GB). The Telegraph. https://www.telegraph.co.uk/science/2017/05/31/nasa-announces-historic-mission-send-probe-touch-sun-live/. 
 18. Davis, Presented by Nicola; Sanderson, produced by Max (2017-06-11). "Solar spacecraft: two missions to the sun - Science Weekly podcast" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/science/audio/2017/jun/11/solar-spacecraft-two-missions-to-the-sun-science-weekly-podcast. 
 19. Witze, Alexandra (2018-07-18). (in EN)Nature 559 (7715): 452–453. doi:10.1038/d41586-018-05741-6. பப்மெட்:30042524. 
 20. Dance, Scott. "Hopkins scientists readying mission to touch the sun". baltimoresun.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-05-12. பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
 21. "Heliophysics Leadership | Science Mission Directorate". science.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
 22. "Nicky Fox". www.planetary.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
 23. "Nicky Fox". multiverse.ssl.berkeley.edu. பார்க்கப்பட்ட நாள் 2019-05-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கோலா_பாக்சு&oldid=3614027" இலிருந்து மீள்விக்கப்பட்டது