நிக்கோபார் பெரும் புறா
தோற்றம்
நிக்கோபார் பெரும் புறா | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | துகுலா
|
இனம்: | D. nicobarica
|
இருசொற் பெயரீடு | |
Ducula nicobarica (பெல்செல்ன், 1865) |
நிக்கோபார் பெரும் புறா (Nicobar imperial pigeon)(துகுலா நிக்கோபாரிகா) என்பது கொலம்பிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது நிக்கோபார் தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும்.
இந்த சிற்றினம் முன்பு பெரிய பச்சைப் புறாவின் (துகுலா ஏனியா) துணையினமாகக் கருதப்பட்டது. மற்ற அனைத்து பெரிய பச்சைப் புறா துணையினங்களுடன் ஒப்பிடும்போது, இறகுகள் மற்றும் குரல்வளம் இரண்டிலும் உள்ள தனித்த வேறுபாடுகளின் அடிப்படையில் இது இப்போது ஒரு தனி சிற்றினமாகக் கருதப்படுகிறது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rasmussen, Pamela C.; Anderton, John C. (2012). Birds of South Asia. The Ripley Guide. Vol. 2: Attributes and Status (2nd ed.). Washington D.C. and Barcelona: Smithsonian National Museum of Natural History and Lynx Edicions. p. 217. ISBN 978-84-96553-87-3.
- ↑ Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Pigeons". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. Retrieved 14 March 2020.