நிக்குரோமைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்குரோமைட்டு
Nichromite
பொதுவானாவை
வகைசிபைனல் குழு
வேதி வாய்பாடு(Ni,Co,Fe)(Cr,Fe,Al)2O4
இனங்காணல்
நிறம்அடர் பச்சை, கருப்பு
படிக இயல்புமணிகள், வடிவற்றது முதல் பகுதி வடிவமுள்ளது வரை.
படிக அமைப்புகனசதுரப் படிகம்
முறிவுசங்குருவம்
மோவின் அளவுகோல் வலிமை6-6 12
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்சாம்பல் பச்சை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி5.10
ஒளியியல் பண்புகள்சமவச்சு
மேற்கோள்கள்[1][2][3][4]

நிக்குரோமைட்டு (Nichromite) என்பது (Ni,Co,Fe)(Cr,Fe,Al)2O4 [1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். கருப்பு நிறத்துடன் கனசதுரச் சீரொழுங்கில் உள்ள இக்கனிமம் சிபைனைல் குழுக் கனிமங்களில் ஓர் உறுப்பினராகும் [5].தென் ஆப்பிரிக்காவின் [1] பார்பெர்டோன் மாவட்டத்திலுள்ள பகுதியான பான் அக்கார்டு நிக்கல் படிவுகளில் நிக்குரோமைட்டு கண்டறியப்பட்டது. இயற்கையில் நிக்கல் படிவுகளில் நிக்குரோமைட்டு தோன்றுகிறது. நிக்கல் மிகுதியான குரோமைட்டு கனிமம் என்பதால் இப்பெயர் சூட்டப்பட்டது [2].

சிபைனல் குழுவின் அணு அமைப்பு முறை பொதுவாக ஆய்வு செய்யப்பட்ட ஒரு கட்டமைப்பாகும், மேலும் பண்பு ரீதியாக சொல்வதென்றால் இக்கட்டமைப்பில் நான்கு நெருக்கப் பொதிவு ஆக்சிசன் அணுக்கள் உள்ளன. நிக்கல் அணுக்கள் சாதாரண சிபைனல் முறைக்கு ஏற்ப ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன [6].

இந்த கனிமம் தென்னாப்பிரிக்காவில் உள்ள பான் அக்கார்டு நிக்கல் படிவுகளில் மட்டுமே காணப்படுகிறது, அங்கு இது குரோமைட்டை இடப்பெயர்ச்சி செய்து மாற்றுவதன் மூலம் இது உருவாகிறது. விளிம்புகளில் டிரெவோரைட்டு கனிமம் படிந்துள்ளது [4].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Nichromite on Mindat.org
  2. 2.0 2.1 Nichromite on Webmineral
  3. Sawaokaa,A.,Saitoa,S.,Inoueb,K. and Asadab,T. (1971)Effect of high pressure on the lattice constants of chromites having the spinel structure. Materials Research Bulletin, 6, 97-101.
  4. 4.0 4.1 Cabri, L. J., Chao G.Y., Pabst, Adolf, Fleischer, Michael. (1980) New Mineral Names. American Mineralogist, 65, 811.
  5. "Glossary of Geology". Archived from the original on 2019-03-06. பார்க்கப்பட்ட நாள் 2019-10-01.
  6. Wyckoff, R.W.G. (1965) Crystal Structures (Second Edition). 75-86 p. University of Arizona, Tucson, Arizona.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்குரோமைட்டு&oldid=3560646" இலிருந்து மீள்விக்கப்பட்டது