நிக்கி ரேட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கி ரேட்டல்
Niki Rattle
குக் தீவுகளின் 10ஆவது நாடாளுமன்றத்தில் சபாநாயகர்
பதவியில்
22 மே 2012 – 15 பிப்ரவரி 2021
முன்னையவர்செப்ரி என்றி
பின்னவர்தாய் துரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1951
அரசியல் கட்சிநியமனம்
வேலைபதிவுபெற்ற செவிலியர்

நிக்கி ரேட்டல் (Niki Rattle) தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள குக் தீவுகளின் நாடாளுமன்றத்தில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி வரை சபாநாயகராக இருந்தார்.[1]

நிக்கி ரேட்டல் குக் தீவுகளில் உள்ள முத்து தீவு எனப்படும் ராட்டில் மணியிகி தீவில் 1951 ஆம் ஆண்டு பிறந்தார்.[2] ஒரு பதிவு செய்யப்பட்ட செவிலியராகப் பணிபுரிந்தார். நியமனத்திற்கு முன்பு குக் தீவுகள் செஞ்சிலுவைச் சங்கத்தின் செயலாளராக 18 ஆண்டுகள் பணியாற்றினார்.[3][4] 22 மே 2012 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் நாளன்று குக் தீவுகளின் பிரதம மந்திரி என்றி புனா இவரை சபாநாயகராக நியமித்தார்.[5]

தொழில்[தொகு]

இவரது நியமனம் எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்று அவர்கள் கருதினர்.[6][7] அவர் 2014 ஆம் ஆண்டில் நிக்கி ரேட்டல் மீண்டும் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். அரசியலமைப்பின் முதன்மைகள் மற்றும் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்க பாராளுமன்றத்தின் செயல்பாடுகளை உறுதிப்படுத்தும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் பாலின சமத்துவத்தை ரேட்டல் நிலைநிறுத்தினார். ஏனெனில் பாராளுமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இவர் தேசிய மகளிர் கவுன்சிலின் தலைவராகவும், மகளிர் ஆலோசனை மையத்தின் தலைவராகவும் இருந்தார். 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் குக் தீவுகளில் நடந்த முதல் மகளிர் நடைமுறை பாராளுமன்றத்தில் ரேட்டில் பங்கேற்றார். பெண்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கான தகுதிகள் மற்றும் பொறுப்புகளை அறிமுகப்படுத்தினார். காமன்வெல்த் மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் பணிகளில் தீவிரமாகவும் ஈடுபட்டுள்ளார்.[8]

2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதியன்று நிக்கி ரேட்டல் தனது சபாநாயகர் பதவியிலிருந்து விலகினார். பதவியில் இருப்பவர்கள் அவ்வப்போது புத்துணர்ச்சியுடன் இருப்பது முக்கியம் என்று அப்போது கூறினார். இவருக்குப் பிறகு தை துரா குக் தீவுகளின் சபாநாயகர் ஆனார்.

ஜனவரி 2022 ஆம் ஆண்டு சனவரியில் நிக்கி குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Emmanuel Samoglou (15 February 2021). "BREAKING: Speaker of Parliament resigns". Cook Islands News. பார்க்கப்பட்ட நாள் 16 February 2021.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Speaker enthralls USP audience". Cook Islands News. 2017-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-04-29.
  3. "Speaker's resignation catches MPs off-guard". Cook Islands News. 16 February 2021. பார்க்கப்பட்ட நாள் 17 February 2021.
  4. "Secretary General Desk". Cook Islands Red Cross. Archived from the original on 19 April 2013. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01.
  5. "Niki Rattle appointed Cook Islands Speaker of Parliament". Pacific Women in Politics. 2012-05-23. Archived from the original on 30 October 2013. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01.
  6. "Opposition decries speaker's appointment". Cook Islands News. 23 May 2012. பார்க்கப்பட்ட நாள் 27 January 2021.
  7. "'An elected speaker has limited powers'". Cook Islands News. 23 May 2012. பார்க்கப்பட்ட நாள் 27 January 2021.
  8. Niki Rattle Retrieved on 19 Feb 2018
  9. "Niki Rattle appointed new Ombudsman". Cook Islands News. 28 January 2022. Archived from the original on 28 January 2022. பார்க்கப்பட்ட நாள் 29 January 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கி_ரேட்டல்&oldid=3732977" இலிருந்து மீள்விக்கப்பட்டது