நிக்கி பிரதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கி பிரதான்
Nikki Pradhan
தனித் தகவல்கள்
முழுப் பெயர்நிக்கி பிரதான்
தேசியம்இந்தியன்
பிறந்த நாள்8 திசம்பர் 1993 (1993-12-08) (அகவை 29)[1]
பிறந்த இடம்சார்க்கண்ட், இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுவளைகோல் பந்தாட்டம்
சங்கம்சார்க்கண்ட், இரயில்வே[2]

நிக்கி பிரதான் (Nikki Pradhan) ஓர் இந்திய வளைகோல் பந்தாட்ட வீரராவார். 1993 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 8 இல் இவர் பிறந்தார். சார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கிடைத்த முதலாவது பெண் வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரர் நிக்கி பிரதான் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் [3]. தலைநகரமான ராஞ்சியிலுள்ள கூண்டி மாவட்டம், மூர்து வட்டாரம், கிசால் கிராமத்தைச் சேர்ந்த சோம பிரதான் மற்றும் இயிட்டான் தேவி ஆகியோர் இவரது பெற்றோர்கள் ஆவர். பாரி்யட்டு பெண்கள் வளைகோல் பந்தாட்ட மையத்தில் [4] நிக்கி பிரதான் பயிற்சி பெற்று உருவானார். இரியோ 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய மகளிர் அணியில் இவரும் இடம்பெற்றிருந்தார்.

பங்கேற்ற அனைத்துலகப் போட்டிகள்[தொகு]

  • 2011 ஆம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோர் ஆசியக் கோப்பைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் [5].
  • 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற 21 வயதுக்குட்பட்டோர் ஆசியக் கோப்பைப் போட்டியில் போட்டியில் வெள்ளிப் பதக்கம். ஆனால் காயம் காரணமாக இவர் ஆட்டத்தில் விளையாடவில்லை.
  • 2012 ஆசியக் கோப்பை போட்டியில் இவர் பங்கேற்றார்.
  • 2016 இரியோ கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார் [6].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nikki Pradhan" இம் மூலத்தில் இருந்து 17 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160817093225/https://www.rio2016.com/en/athlete/nikki-pradhan. பார்த்த நாள்: 13 August 2016. 
  2. "Our girl Nikki makes it to Rio- Khunti lass becomes state's first woman hockey player at Olympics" இம் மூலத்தில் இருந்து 26 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160826223012/http://www.telegraphindia.com/1160713/jsp/frontpage/story_96450.jsp#.V67knqx36x4. பார்த்த நாள்: 13 August 2016. 
  3. "Jharkhand's Nikki Pradhan in hockey team for Rio Olympic". http://timesofindia.indiatimes.com/city/ranchi/Jharkhands-Nikki-Pradhan-in-hockey-team-for-Rio-Olympic/articleshow/53184225.cms. பார்த்த நாள்: 1 August 2016. 
  4. "Nikki Pradhan first woman hockey player from Jharkhand at Olympics". http://timesofindia.indiatimes.com/indiario/hockey/Nikki-Pradhan-first-woman-hockey-player-from-Jharkhand-at-Olympics/articleshow/53176739.cms. பார்த்த நாள்: 1 August 2016. 
  5. "Nikki Pradhan" இம் மூலத்தில் இருந்து 14 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160814212708/http://www.sportingindia.com/content/nikki-pradhan. பார்த்த நாள்: 13 August 2016. 
  6. "Rio 2016: Sushila Chanu to lead Indian women's hockey team at Olympics". http://www.firstpost.com/sports/rio-2016-sushila-chanu-to-lead-indian-womens-hockey-team-at-olympics-2891176.html. பார்த்த நாள்: 1 August 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கி_பிரதான்&oldid=3587345" இருந்து மீள்விக்கப்பட்டது