உள்ளடக்கத்துக்குச் செல்

நிக்கி தம்போலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கி தம்போலி
2021இல் நிக்கி தம்போலி
பிறப்பு21 ஆகத்து 1996

(1996

-08-21) (அகவை 27)[1]
அவுரங்காபாத், மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2018 – தற்போது வரை
அறியப்படுவதுகாஞ்சனா 3
இந்தி பிக் பாஸ் 14

நிக்கி தம்போலி (Nikki Tamboli) (பிறப்பு: ஆகஸ்ட் 21, 1996) ஓர் இந்திய நடிகையாவார். இவர் திரைப்படங்களிலும் [2] தொலைக்காட்சிகளிலும் பணிபுரிகிறார். தமிழில் காஞ்சனா 3 படத்தில் நடித்ததற்காக இவர் அறியப்படுகிறார்.[3] 2020ஆம் ஆண்டில், இவர் திரைப்பட நடிகர் சல்மான் கான் வழங்கிய பிக் பாஸ் என்ற இந்தி நிகழ்ச்சியின் பதினான்காவது பருவத்தில் பங்கேற்று இரண்டாவது இடத்தைப் பெற்றார்.[4] 2021ஆம் ஆண்டில் இவர் சண்டை அடிப்படையிலான உண்மைநிலை நிகழ்ச்சியான பியர் பேக்டர்: கத்ரான் கே கிலாடி பருவம் 11இல் பங்கேற்றார். ஆனால் முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டார் (13 வது இடம்).

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

தம்போலி 1996 ஆகஸ்ட் 21 அன்று இந்தியாவின் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் பிறந்தார்.[5]

தம்போலி ஒரு விளம்பர மாதிரி நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் சீக்கட்டி காடிலோ சித்தகோட்டு என்ற தெலுங்கு திகில் நகைச்சுவை படத்தில் பூஜா என்ற வேடத்தில் இந்திய திரைப்படத் துறையில் அறிமுகமானார்.[6][7] பின்னர், இவர் நடிகர் ராகவா லாரன்ஸின் தமிழ் அதிரடி திகில் படமான காஞ்சனா 3 இல் திவ்யாவாக நடித்தார்.[8][9]

"திப்பாரா மீசம்" (தெலுங்கு) என்ற தனது மூன்றாவது படத்தில், இதில் இவர் மௌனிகாவாக நடித்தார்.[10] 2020 ஆம் ஆண்டில், பிக் பாஸ் என்ற இந்தி உண்மைநிலை நிகழ்ச்சியின் பதினான்காவது பருவத்தின் ஒரு போட்டியாளராக நுழைந்தார்.[11][12][13] இதில் இவர் இரண்டாவது வெற்றியாளாராக முடித்தார். 2021ஆம் ஆண்டில், உண்மை நிலை தொலைக்காட்சி நிகழ்ச்சியான பியர் பேக்டர்: கத்ரான் கே கில்லாடி 11இல் பங்கேற்றார். இது கேப் டவுனில் படமாக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியிலிருந்து முதல் வாரத்திலேயே (13 வது இடத்தில்) வெளியேற்றப்பட்டார்.[14][15]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Bigg Boss 14: Who is Nikki Tamboli? Here's all you should know about the actress". 30 September 2020.
 2. "Who Is Nikki Tamboli? Here's Everything You Need To Know About The Actor". Republic World. https://www.republicworld.com/entertainment-news/television-news/who-is-nikki-tamboli-heres-everything-you-need-to-know-about-her.html. 
 3. "Kanchana 3 actress to make her Bollywood debut?". 16 September 2019.
 4. "Nikki Tamboli is second Bigg Boss 14 contestant, says she will break hearts on Salman Khan's show. Watch". Hindustan Times (in ஆங்கிலம்). 3 October 2020. பார்க்கப்பட்ட நாள் 8 October 2020.
 5. "Bigg Boss 14 Grand Premiere Episode: Nikki Tamboli Flirts With Salman Khan On Stage, Here's All You Need To Know About Her". 3 October 2020.
 6. "'Chikati Gadilo Chithakotudu': The Adult comedy to hit the screens on this day – Times of India". The Times of India.
 7. "Watch: Director Santhosh P Jayakumar unveils the seductive and bold trailer of 'Chikati Gadilo Chithakotudu' – Times of India". The Times of India.
 8. "Raghava Lawrence To Revive Muni Franchise, Confirms Fourth Film". 24 August 2017.
 9. "Raghava Lawrence starrer Kanchana 3 to kick off next month".
 10. Kavirayani, Suresh (7 February 2019). "Sree Vishnu's Thipparaa Meesam's first look". Deccan Chronicle.
 11. "Who Is Nikki Tamboli? These HOT PICS Of Bigg Boss 14 CONFIRMED Contestant Prove That She Will Raise OOMPH In Salman Khan's Show This Year!". 23 September 2020.
 12. "Bigg Boss 14 contestant Nikki Tamboli: Know more about her films, boyfriend and more". 3 October 2020.
 13. "Exclusive – Want to look patakha on Bigg Boss 14; have hired three stylists and carrying 18 lehengas: Nikki Tamboli". 12 October 2020.
 14. "Nikki Tamboli poses by the sea in blue swimsuit in Cape Town. See pics".
 15. "Khatron Ke Khiladi 11's Nikki Tamboli Flaunts Toned Body In Swimwear As She Poses With 'Desi Boys' Vishal Aditya Singh, Varun Sood".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கி_தம்போலி&oldid=3946567" இலிருந்து மீள்விக்கப்பட்டது