நிக்கல் மாங்கனீசு ஆக்சைடு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
நிக்கல் மாங்கனீசு ஆக்சைடு
| |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நிக்கல் மாங்கனீசு ஆக்சைடுகள் (Nickel manganese oxides) என்பவை Ni(x)Mn(3-x)O(y) என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் வேதியியல் சேர்மங்களாகும். [1] நிக்கல், மாங்கனீசு, ஆக்சிசன் ஆகிய தனிமங்களின் சேர்க்கையால் உருவாகும் பல்வண்ணப் பளிங்குருவினையுடைய கனிமப் பொருள் வகை சேர்மமாகும். நிக்கல் மாங்கனேட்டுகள் என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன.[2][3]
Ni2MnO4, NiMn2O4, மற்றும் Ni1.5Mn1.5O4 என்பவை சில பொதுவான நிக்கல் மாங்கனேட்டுகளாகும்.
இவை பொதுவாக மெல்லிய படல மின்தடையங்கள் மற்றும் வெப்பத்தடையங்களில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன.[4] உற்பத்தி செயல்பாட்டில் மின்தடை மற்றும் வெப்பநிலை குணகத்தை துல்லியமாக கட்டுப்படுத்த முடியும். நிக்கல்-உலோக ஐதரைடு மின்கலன்களில் மாங்கனீசு ஆக்சைடைச் சேர்ப்பது பல்வேறு ஆக்சிசஜனேற்ற நிலைகளில் பல்வண்ணப் பளிங்குரு கட்டமைப்பு நிக்கல் மாங்கனேட்டுகளை உருவாக்குவதற்கு உதவுகிறது. இவை நிக்கல் ஐதராக்சைடுகளை விட அதிக கடத்துத்திறன் மற்றும் மின்சுமைத் திறன் கொண்டிருக்கும். [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Suram, Santosh K.; Zhou, Lan; Shinde, Aniketa; Yan, Qimin; Yu, Jie; Umehara, Mitsutaro; Stein, Helge S.; Neaton, Jeffrey B. et al. (2018-05-01). "Alkaline-stable nickel manganese oxides with ideal band gap for solar fuel photoanodes" (in en-US). Chemical Communications (US) 54 (36): 4625–4628. doi:10.1039/c7cc08002f. பப்மெட்:29671420. https://resolver.caltech.edu/CaltechAUTHORS:20180419-092221814.
- ↑ Periyasamy, Sivakumar; Subramanian, Palaniappan; Levi, Elena; Aurbach, Doron; Gedanken, Aharon; Schechter, Alex (2016-05-18). "Exceptionally Active and Stable Spinel Nickel Manganese Oxide Electrocatalysts for Urea Oxidation Reaction". ACS Applied Materials & Interfaces 8 (19): 12176–12185. doi:10.1021/acsami.6b02491. பன்னாட்டுத் தர தொடர் எண்:1944-8244. பப்மெட்:27123873.
- ↑ "Structure and Physical Properties of Nickel Manganite NiMn2O4 Obtained from Nickel Permanganate Precursor". ResearchGate (in ஆங்கிலம்). Retrieved 2019-01-20.
- ↑ Sarrión, Maria Luisa Martínez; Morales, Manuel (1995). "Preparation and Characterization of NTC Thermistors: Nickel Manganites Doped with Lithium" (in en). Journal of the American Ceramic Society 78 (4): 915–921. doi:10.1111/j.1151-2916.1995.tb08414.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1551-2916. Bibcode: 1995JACS...78..915M.
- ↑ Ortiz-Quinonez, Jose Luis; Ramos Ramon, Jesús Alberto; de Anda Reyes, Maria Eunice; Ray, Apurba; Das, Sachindranath; Pal, Umapada (2021). "Structure and magnetic behavior of sol-gel grown spinel NixMn3-xO4 nanoparticles: Effect of Ni fraction and induction of superparamagnetism at room temperature". Materials Research Bulletin 139: 111267. doi:10.1016/j.materresbull.2021.111267.