நிக்கல் டங்சுடேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
நிக்கல்(II) டங்சுடேட்டு
நிக்கல் டங்சுடன் ஆக்சைடு | |
| இனங்காட்டிகள் | |
| 14177-51-6 | |
| ChemSpider | 75997 |
| EC number | 238-032-4 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 84240 |
| |
| பண்புகள் | |
| NiWO4 | |
| வாய்ப்பாட்டு எடை | 306.534 |
| தோற்றம் | பச்சை படிகங்கள் |
| மணம் | மணமற்றது[1] |
| அடர்த்தி | 3.3723 கி/செ.மீ³[2] |
| உருகுநிலை | 1420 ˚C[3] |
| கரையாது[1] | |
| கரைதிறன் | அமோனியாவில் கரையும் |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | ஒற்றைச்சாய்வு |
| தீங்குகள் | |
| GHS pictograms | |
| GHS signal word | அபாயம் |
| P201, P260, P280, P308+313, P405, P501 | |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | நிக்கல்(II) குரோமேட்டு நிக்கல்(II) மாலிப்டேட்டு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | இரும்பு(II) டங்சுடேட்டு கோபால்ட்டு(II) டங்சுடேட்டு துத்தநாக(II) டங்சுடேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நிக்கல் டங்சுடேட்டு (Nickel tungstate) என்பது NiWO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிக்கல், தங்குதன், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]நிக்கல்(II) நைட்ரேட்டுடன் சோடியம் டங்சுடேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நிக்கல் டங்சுடேட்டு உருவாகும்:[4]
- Ni(NO3)2 + Na2WO4 → NiWO4 + 2 NaNO3
நிக்கல்(II) ஆக்சைடுடன் தங்குதன்(VI) ஆக்சைடைச் சேர்த்து வினை புரியச் செய்தாலும் நிக்கல் டங்சுடேட்டைத் தயாரிக்கலாம்.[5]
அம்மோனியம் மெட்டாடங்சுடேட்டுடன் நிக்கல்(II) நைட்ரேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும்[6] அல்லது சோடியம் டங்சுடேடு, நிக்கல்(II) குளோரைடு மற்றும் சோடியம் குளோரைடு ஆகியவற்றின் வினையினாலும் கூட நிக்கல் டங்சுடேட்டைத் தயாரிக்கலாம்.[7]
நிக்கல் டங்சுடேட்டு 700 °செல்சியசு வெப்பநிலையில் ஒரு கட்ட மாற்றத்திற்கு உட்படுகிறது.
பண்புகள்
[தொகு]நிக்கல் டங்சுடேட்டு வெளிர் பழுப்பு நிறத்தில், மணமற்ற திடப்பொருளாகக் காணப்படுகிறது. இது நீரில் கரையாது.[1] படிக உருவமற்ற வடிவம் பச்சை நிறத்திலும்,[4] பல்படிக வடிவம் பழுப்பு நிறத்திலும் இருக்கும். P2/c (எண். 13) என்ற இடக்குழுவில் ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் உல்பிரமைட்டு படிக அமைப்பில் படிகமாகிறது.>[8]
பயன்கள்
[தொகு]நிக்கல் டங்சுடேட்டுக்கு வணிக ரீதியான பயன்பாடுகள் இல்லை. ஓர் ஒளிச்சேர்க்கை வினையூக்கியாகவும், ஈரப்பத உணரிகளிலும், மின்கடத்தா ஒத்ததிரிவிகளிலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது சமச்சீரற்ற மீமின்தேக்கிகளுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய எதிர்மின்வாய் பொருளாகவும் கருதப்படுகிறது.[9]
பிற சேர்மங்கள்
[தொகு]நிக்கல் டங்சுடேட்டு அம்மோனியாவுடன் சேர்ந்து சேர்மங்களை உருவாக்குகிறது. உதாரணமாக NiWO4·2NH3·H2O சியான் படிகங்களாகவும்,[10] NiWO4·4NH3 பச்சை படிகங்களாகவும்,[11] NiWO4·5NH3·H2O அடர் நீல படிகங்களாகவும் அல்லது நீரற்ற NiWO4·6NH3 படிகம் ஊதா நிறமாகவும், எக்சமீனின் எண்ணீரேற்று அடர் நீல நிறமாகவும் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Record of Nickel-Wolframtetraoxid in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health, accessed on 2020-01-08.
- ↑ Hicham Oudghiri-Hassani, Fahd Al Wadaani – Preparation, Characterization and Catalytic Activity of Nickel Molybdate (NiMoO4) Nanoparticles. எஆசு:10.3390/molecules23020273.
- ↑ Lebukhova, N. V.; Inorganic Materials, (2006), 42(3), 310-315, CAplus
- ↑ 4.0 4.1 A. Kuzmin, J. Purans, R. Kalendarev: Local structure and vibrational dynamics in NiWO4. In: Ferroelectrics. 258, 2001, S. 21, எஆசு:10.1080/00150190108008653.
- ↑ Falko P. Netzer, Alessandro Fortunelli (2016), Oxide Materials at the Two-Dimensional Limit (in German), Springer, p. 386, Bibcode:2016omtd.book.....N, ISBN 978-3-319-28332-6
{{citation}}: CS1 maint: unrecognized language (link) - ↑ J.M. Quintana-Melgoza, J. Cruz-Reyes, M. Avalos-Borja: Synthesis and characterization of NiWO4 crystals. In: Materials Letters. 47, 2001, S. 314, எஆசு:10.1016/S0167-577X(00)00272-X.
- ↑ R. O. Keeling: The structure of NiWO4. In: Acta Crystallographica. 10, S. 209, எஆசு:10.1107/S0365110X57000651.
- ↑ Alexei Kuzmin, Aleksandr Kalinko, Robert Evarestov: First-principles LCAO study of phonons in NiWO4. In: Open Physics. 9, 2011, எஆசு:10.2478/s11534-010-0091-z.
- ↑ R.A. Evarestov (2013), Quantum Chemistry of Solids LCAO Treatment of Crystals and Nanostructures (in German), Springer Science & Business Media, p. 480, ISBN 978-3-642-30356-2
{{citation}}: CS1 maint: unrecognized language (link) - ↑ Nickel: sect. 1-2. Coordination compounds with neutral and inner-complex-forming ligands (Verlag Chemie, 1968), page 109. Retrieved 15 Apr 2021.
- ↑ Bulletin de la Société chimique de France (Société chimique de France; Masson, 1921), page 1487. Retrieved 28 Feb 2021.