நிக்கல்(II) குரோமேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(II) குரோமேட்டு
| |
| வேறு பெயர்கள்
நிகலசு குரோமேட்டு
நிக்கல் குரோமேட்டு நிக்கல்(II) குரோமியம்(VI) ஆக்சைடு | |
| இனங்காட்டிகள் | |
| 14721-18-7 | |
| ChemSpider | 55656 |
| EC number | 238-766-5 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 61767 |
| |
| பண்புகள் | |
| NiCrO4 | |
| வாய்ப்பாட்டு எடை | 174.71 கி/மோல் |
| தோற்றம் | அடர் அரக்கு நிறத் தூள் |
| மிகச் சிறிதளவே கரையும்[1] | |
| கரைதிறன் | ஐதரோகுளோரிக் காடியில் கரையும் |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது. |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | நிக்கல்(II) மாலிப்டேட்டு நிக்கல்(II) டங்சுடேட்டு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | மக்னீசியம் குரோமேட்டு காட்மியம் குரோமேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நிக்கல்(II) குரோமேட்டு (Nickel(II) chromate) என்பது NiCrO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமிலத்தில் கரையக்கூடிய இச்சேர்மம் செம்பழுப்பு நிறத்தில் வெப்பத்தை அதிக அளவு தாங்கும் சகிப்புத்தன்மை கொண்டதாக உள்ளது. நிக்கல்(II) குரோமேட்டும் இதை உருவாக்கும் அயனிகளும் குறிப்பாக வனவிலங்குகளில் கட்டி உருவாக்கத்துடனும் மரபணு மாற்றத்துடனும் இணைக்கப்பட்டுள்ளன.[2]
தயாரிப்பு
[தொகு]குரோமியம்(III) ஆக்சைடு மற்றும் நிக்கல் ஆக்சைடு கலவையை 700 °செல்சியசு வெப்பநிலை முதல் 800 °செல்சியசு வரையிலான வெப்பநிலையில் ஆக்சிசனின் கீழ் 1000 வளிமண்டல அழுத்தத்தில் சூடாக்குவதன் மூலம் ஆய்வகத்தில் நிக்கல்(II) குரோமேட்டை தயாரிக்க முடியும். 535 °செல்சியசு வெப்பநிலையில் 7.3 பார் ஆக்சிசன் அழுத்தத்திலும் இதை உற்பத்தி செய்யலாம், ஆனால் இவ்வினை முடிவடைய பல நாட்கள் ஆகும்.[3] அழுத்தம் மிகவும் குறைவாகவோ அல்லது வெப்பநிலை மிக அதிகமாகவோ ஆனால் 660 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் இருந்தால், இதற்கு பதிலாக நிக்கல் குரோமியம் சிபினல் (NiCr2O4) உருவாகும்.[3]
கரின் பிராண்ட்டு நீர் வெப்ப நுட்பத்தைப் பயன்படுத்தி நிக்கல் குரோமேட்டைத் தயாரித்ததாகக் கூறினார்.[4][5]
குரோமேட்டுடன் Ni2+ அயனிகளின் வீழ்படிவுகள் தண்ணீரைக் கொண்ட பழுப்பு நிறப் பொருளை உருவாக்குகின்றன.[6]
பண்புகள்
[தொகு]நிக்கல் குரோமேட்டின் அமைப்பு குரோமியம் வனேடேட்டு (CrVO4) சேர்மத்தின் கட்டமைப்புக்கு சமமானதாகும். படிகங்கள் ஒரு செஞ்சாய்சதுர திண்ம அமைப்பைக் கொண்டுள்ளன. a = 5.482 Å, b = 8.237 Å, c = 6.147 Å என்ற அணிக்கோவை அளவுருக்களில் செல்லின் கன அளவு 277.6 Å3 ஆக் ஓர் அலகு செல்லிற்கு நான்கு வாய்ப்பாட்டு அலகுகளுடன் இச்சேர்மம் படிகமாகிறது. [5][7]
நிக்கல் குரோமேட்டு மஞ்சள் நிறத்தில் இருக்கும் மற்ற குரோமேட்டுகளைப் போலல்லாமல், அடர் நிறத்தில் உள்ளது.[3] நிக்கல் குரோமேட்டின் அகச்சிவப்பு நிறமாலை இரண்டு வகையான உறிஞ்சுதல் பட்டைகளைக் காட்டுகிறது. முதலாவது Cr-O நீட்சி காரணமாக 925, 825 மற்றும் 800 செ.மீ−1 என்ற அளவில் உள்ள கோடுகளைக் கொண்டுள்ளது. இரண்டாவது Cr-O பாறை மற்றும் வளைவு காரணமாக 430, 395, 365 (மிகவும் பலவீனமானது) மற்றும் Ni-O நீட்சியால் உருவாக்கப்பட்ட 310 செ.மீ−1 என்ற அளவில் உள்ள கோடுகளைக் கொண்டுள்ளது.[8]
வினை
[தொகு]குறைந்த ஆக்சிசன் அழுத்தத்தில் சுமார் 600 °செல்சியசு வெப்பநிலையில் சூடாக்கும் போது, நிக்கல் குரோமேட்டு சிதைவடைந்து நிக்கல் குரோமைட்டு சிபினல், நிக்கல் ஆக்சைடு மற்றும் ஆக்சிசனாக மாற்றம் அடைகிறது.[3]
- 4 NiCrO4 → 2 NiCr2O4 + 2 NiO + 3 O2 (வாயு)
பிற தொடர்புகள்
[தொகு]நிக்கல் குரோமேட்டுகள் ஈந்தணைவிகளுடன் படிகமாக்கப்படலாம். உதாரணமாக, 1,10-பீனாந்த்ரோலினுடன் இது முச்சாய்வு ஆலிவ் நிற [Ni(1,10-பீனாந்த்ரோலின்)CrO4•3H2O]•H2O படிகங்களையும், ஆரஞ்சு நிற Ni(1,10-பீனாந்த்ரோலின்)3Cr2O7•3H2O படிகங்களையும், மஞ்சள் நிறத் தூளளான Ni(1,10-பீனாந்த்ரோலின்)3Cr2O7•8H2O படிகத்தையும் உருவாக்கும்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Perry, Dale L. (19 April 2016). Handbook of Inorganic Compounds, Second Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 290. ISBN 9781439814628.
- ↑ Eisler, R. (1998). Nickel Hazards to Fish, Wildlife, and Invertebrates: a Synoptic Review. Laurel: U.S. Geological Survey
- ↑ 3.0 3.1 3.2 3.3 Muller, Olaf; Roy, Rustum; White, William B. (December 1968). "Phase Equilibria in the Systems NiO-Cr2,O3,-O2, MgO-Cr2O3-O2, and CdO-Cr2,O3,-O2, at High Oxygen Pressures". Journal of the American Ceramic Society 51 (12): 693–699. doi:10.1111/j.1151-2916.1968.tb15930.x.
- ↑ Brandt, Karin (1943). "X-Ray Analysis of CrVO4 and isomorphous compounds". Arkiv för Kemi, Mineralogi och Geologi 17A (6): 1–13. (not consulted)
- ↑ 5.0 5.1 Muller, Olaf; White, William B.; Roy, Rustum (September 1969). "X-ray diffraction study of the chromates of nickel, magnesium and cadmium". Zeitschrift für Kristallographie 130 (1–6): 112–120. doi:10.1524/zkri.1969.130.1-6.112. Bibcode: 1969ZK....130..112M.
- ↑ 6.0 6.1 Bronowska, W; Staszak, Z; Daszkiewicz, M; Cieślak-Golonka, M; Wojciechowska, A (May 2002). "Systematic investigation of the [Ni2+–phen–CrO42−] system; dichromate species isolated from alkaline solutions". Polyhedron 21 (9–10): 997–1003. doi:10.1016/S0277-5387(02)00912-9.
- ↑ Baran, E. J (May 1998). "Materials belonging to the CrVO4 structure type: preparation, crystal chemistry and physicochemical properties". Journal of Materials Science 33 (10): 2479–2497. doi:10.1023/A:1004380530309. Bibcode: 1998JMatS..33.2479B. http://sedici.unlp.edu.ar/handle/10915/144150.
- ↑ Muller, Olaf; White, William B.; Roy, Rustum (August 1969). "Infrared spectra of the chromates of magnesium, nickel and cadmium". Spectrochimica Acta Part A: Molecular Spectroscopy 25 (8): 1491–1499. doi:10.1016/0584-8539(69)80133-9. Bibcode: 1969AcSpA..25.1491M.