உள்ளடக்கத்துக்குச் செல்

நிக்கல்பேக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


நிக்கல்பேக்
Nickelback
பிறப்பிடம்ஹான்னா, ஆல்பெர்டா, கனடா
இசை வடிவங்கள்Hard rock, alternative rock, post-grunge, alternative metal[1][2][3]
இசைத்துறையில்1995–தற்போது
வெளியீட்டு நிறுவனங்கள்Roadrunner, Atlantic,
EMI (Canada), LiveNation
இணையதளம்www.nickelback.com
உறுப்பினர்கள்Chad Kroeger
Ryan Peake
Mike Kroeger
Daniel Adair
முன்னாள் உறுப்பினர்கள்Ryan Vikedal
Brandon Kroeger
Nickelback 2006

நிக்கல்பேக் 1995வது வருடம் ஹன்னா, ஆல்பர்ட்டாவில் உருவான ஒரு கனடா நாட்டு ஹார்ட் ராக் இசைக்குழு. ஷாட் க்ரோயேகர், மைக் க்ரோயேகர், ரையான் பீக் மற்றும் அப்போது டிரம்ஸ் வாசிப்பவராக இருந்த பிராண்டன் க்ரோயேகர் ஆகியோர் இதனை உருவாக்கினர். வணிக ரீதியாக மிகுந்த அளவில் வெற்றி பெற்ற கனடியக் குழுக்களில் ஒன்றாக நிக்கல்பேக் விளங்குகிறது. இதன் இசைத் தட்டுக்கள் உலகெங்கும் 30 மில்லியன் விற்றுள்ளன.[4] 2000 ஆம் வருடங்களில் மிக அதிகமாக விற்பனையாகும் இசைச் செயற்பாடுகளில் நிக்கல்பேக் பதினொன்றாவது இடத்தில் உள்ளது; மற்றும் இது ஐக்கிய மாநிலங்களீல் தி பீட்டில்ஸ் குழுவிற்கு அடுத்த நிலையில், 2000 ஆம் வருடங்களில் மிக அதிகமாக விற்பனையாகும் வெளி நாட்டு இசைச் செயற்பாடாக, நிக்கல்பேக்கை வைத்துள்ளது.[5]

இந்த இசைக்குழு தற்போது கனடாவில் பிரித்தானிய கொலம்பியாவில் வாங்கௌர் என்னும் இடத்தில் தளம் கொண்டுள்ளது. இந்த இசைக் குழுவின் உறுப்பினரான மைக் க்ரோயேகர் தாம் ஸ்டார்பக்ஸ் நிறுவனப் பணியில் இருக்கும்போது தமது வாடிக்கையாளர்களுக்கு மீதச் சில்லறையாக அளித்து வந்த நிக்கல் என்பதில் இந்தப் பெயர் தோற்றுவாய் கொண்டுள்ளது. அந்தக் கால கட்டத்தில் அவர் அடிக்கடி கூறிய வார்த்தைகள்: "ஹியர்'ஸ் யுவர் நிக்கல் பேக்" (அதாவது "இதோ உங்களது 5 சென்ட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள்" என்பதாகும்).[6]

இந்த இசைக்குழு கனடாவில் ஈஎம்ஐயுடனும், உலகின் பிற பகுதிகளுக்காக ரோட் ரன்னர் என்னும் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் இட்டிருக்கிறது. 2008வது வருடம் ஜூலை லைவ் நேஷன் என்னும் நிறுவனத்துடன் இந்த இசைக் குழு மூன்று பயணங்கள் மற்றும் இசைத் தொகுப்பு சுழற்சிகளுக்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதில் ஒரு நாலாவது சுழற்சிக்கான விருப்பத்தேர்வும் உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஒலிப்பதிவுகள், பயணங்கள், விற்பனைப் பொருட்கள் மற்றும் இதர உரிமைகள் அடங்கியுள்ளன.[7]

வரலாறு

[தொகு]

ஆரம்ப காலங்கள் (1995-2000)

[தொகு]

நிக்கல்பேக்கின் முதல் வெளியீடு 1996ஆம் வருடம் ஈபி என்னும் நீட்டிக்கப்பட்ட காலம் கொண்ட ஏழு ஒலித்தடங்களைக் கொண்டிருந்த ஹெஷர் என்பதாகும்.[8] 1996ஆம் வருடத்திலேயே, நிக்கல்பேக் தங்களது முழுநீள இசைத் தொகுப்பான கர்ப் என்பதைப் பதிவு செய்தனர். ஹெஷர் மற்றும் கர்ப் ஆகியவற்றிற்குப் பிறகு ஃப்ளை வெளியிடப்பட்டது. நிக்கல்பேக் தயாரித்த முதல் ஒற்றை இசைத்தொகுப்பும் இதுவேயாகும். இது பட்டியல்களில் இடம் பெறாது, உள்ளூர் வானொலிகளில் மட்டுமே ஒலிப்பரப்பானது.

1998ஆம் வருடம், இதைத் தொடர்ந்து தி ஸ்டேட் என்னும் இசைத் தொகுப்பு ஒலிப்பதிவாகி அதே வருடத்தில் தனிப்பட்ட ஒரு ஒலித்தட்டாக வெளியானது. ஈஎம்ஐ மற்றும் ரோட்ரன்னர் ஆகியவற்றுடன் நிக்கல்பேக் இசைக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இதன் பின்னர், தி ஸ்டேட் இசைத் தொகுப்பு ஈஎம்ஐயால் மீண்டும் 2000 ஆம் வருடம் மறு வெளியீடானது. இந்த இசைத் தொகுப்பிலிருந்து "லீடர் ஆஃப் தி மேன்" மற்றும் "ப்ரீத்" என்னும் இரண்டு தனிப்பாடல்கள் மிகுந்த அளவு பிரபலம் அடைந்து, இந்த இசைத் தொகுப்பானது கனடா மற்றும் யுனைடட் ஸ்டேட்ஸ் ஆகியவற்றில் தங்கச் சான்றிதழ் பெறுவதற்கு வழி வகுத்தன. 2008வது வருடம் இது பிளாட்டினச் சான்றிதழ் பெற்றது.[9]

வர்த்தக ரீதியாக வெற்றி: 201-2007

[தொகு]

2001ஆம் வருடம் நிக்கல்பேக் சில்வர் சைட் அப் என்னும் ஒரு இசைத்தொகுப்பை வெளியிட்டது; இதுவே பெரும்பான்மையோர் ரசிக்கும் இசையை நோக்கி அதனைச் செலுத்தி வர்த்தக ரீதியான வெற்றிக்கு வழி வகுத்தது. இதிலிருந்த தனிப்பாடலான "ஹௌ யூ ரிமைண்ட் மீ" என்பது மிகவும் வெற்றியடைந்து அமெரிக்க மற்றும் கனடா இசைப் பட்டியல்களில் இரண்டிலும் ஒரே நேரத்தில் முதல் இடம் பெற்றுத் திகழ்ந்தது. ஐக்கிய மாநிலங்களில் இது வர்த்தகரீதியாகவும், நவீன ராக் பட்டியல்களிலும் மற்றும் பாப் பட்டியல்களிலும் முதல் இடம் பெற்ற தனிப்பாடலாகவும் விளங்கியது. அடல்ட் டாப் 40 என்னும் பட்டியலிலும் இது இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 2002ஆம் வருடத்தில் பில்போர்ட் ஹாட் 100 பட்டியலில் முதலாம் இடத்தைப் பெற்ற தனிப்பாடலாக ஹௌ யூ ரிமைண்ட் மீ விளங்கியது. இதற்கு அடுத்த தனிப்பாடலான "டூ பேட்" என்பதும் வர்த்தகரீதியான ராக் பட்டியலில் முதல் இடம் பெற்று, மற்றும் பாப் பட்டியலில் சிறிய அளவில் வெற்றியடைந்தது. இந்த இசைத்தொகுப்பில் இருந்த இறுதித் தனிப்பாடலான "நெவர் எகெய்ன்", வர்த்தக ரீதியான ராக் இசையில் முதல் இடம் பெற்ற மற்றொரு தனிப்பாடலாகும்.

2002ஆம் வருடம், ஷாட் க்ரோயேகர் ஜோசீ ஸ்காட் மற்றும் ஸ்பைடர்மேன் திரைப்படத்தின் மையக் கருத்திசைப் பாடலான "ஹீரோ" என்பதற்கு கிதார் இசைத்த கைஜ் கோர்வோ ஆகியோருடன் இணைந்து செயல்படலானார். இது டைலர் கொனோலி, மைக் க்ரோயேகர், மாட் கேமெரோன் மற்றும் ஜெரமி டாகார்ட் ஆகியோரையும் கொண்டிருந்தது.

2003ஆம் வருடம், நிக்கல்பேக் தி லாங் ரோட் என்னும் இசைத் தொகுப்பை வெளியிட்டது. இதன் முன்னணித் தனிப்பாடலாக சம்டே என்பது இருந்தது மற்றும் இந்த இசைத் தொகுப்பானது உலகெங்கும் 5 மில்லியன் பிரதிகள் விற்பனையானது.[சான்று தேவை] "ஃபீலிங் வே டூ டாம் குட்" என்ற ஒற்றை ஒலித்தடத்தையும் இந்த இசைக் குழு வெளியிட்டது. இது வர்த்தக ரீதியான ராக் பட்டியல்களில் மூன்றாவது இடம் பெற்று விளங்கியது. "பிகர்ட் யூ அவுட்" என்பதும் ஒற்றை ஒலித்தடமாக வெளியிடப்பட்டு வர்த்தக ரீதியான ராக் பட்டியல்களில் தொடர்ந்து 13 வாரங்களுக்கு உச்சத்தில் இருந்தது.

நிக்கல்பேக்கின் ஐந்தாவது ஒலிப்பதிவுக் கூட இசைத் தொகுப்பான ஆல் தி ரைட் ரீசன்ஸ் , யூ.எஸ்.ஹட் டாப் 20 சிங்கிள்ஸ் பட்டியலில் இடம் பெற்ற ஐந்து ஒலித்தடங்களை உருவாக்கியது: அவை, "ஃபோட்டோகிராஃப்", "ஸேவிங் மீ", ஃபார் அவே", "இஃப் எவ்ரிஒன் கேர்ட்" மற்றும் "ராக்ஸ்டார்" ஆகியவையாகும். இவற்றில் மூன்று யூஎஸ் ஹாட் 100 டாப் 10 சிங்கிள்ஸ் பட்டியலில் இடம் பெற்றன. 2009ஆம் வருடம் செப்டம்பர் 19ஆம் தேதி வரையிலும் ஆல் தி ரைட் ரீசன்ஸ் , ஐக்கிய மாநிலங்களில் 7,225,557 பிரதிகள் விற்பனை ஆகியுள்ளது. 2005ஆம் ஆண்டு வெளியானது துவங்கி,ஆல் தி ரைட் ரீசன்ஸ் , உலகெங்கும் மொத்தமாக, பதினொரு மில்லியன் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளது. ஆல் தி ரைட் ரீசன்ஸ் வெற்றி அடைந்ததைத் தவிர, முதன்மைப் பாடகரான க்ரோயேகர் தனது சொந்தக் குறியீடாக 604 ரெகார்ட்ஸ் என்பதை 2005ஆம் ஆண்டில் துவங்கி, அதன் செயல் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.

அண்மைக் காலத்திய வெளியீடுகள்: 2008- தற்போதுவரை

[தொகு]

2008ஆம் வருடம் செப்டம்பர் மாதம் நாலாம் தேதியன்று, ரோட்ரன்னர் ரெகார்ட்ஸ், தங்களது வரவிருக்கும் இசைத் தொகுப்பில் முதல் தனியிசை இஃப் டுடே வாஸ் யுவர் லாஸ்ட் டே என்பதாக இருக்கும் என்றும், 2008வது வருடம் செப்டம்பர் 30 அன்று அது வெளியிடப்படும் என்றும் அறிவித்தது. இருப்பினும், இந்தப் பாடல் முதல் தனியிசையாக அல்லாது விடுக்கப்பட்டு, காட் டு பீ சம்படி என்பதே முதல் முதன்மைத் தனி ஒலித்தடமானது.[10] டார்க் ஹார்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்தப் புதிய இசைத் தொகுப்பு 2008ஆம் வருடம் நவம்பர் 18 அன்று வெளியானது. இந்த இசைத் தொகுப்பு மாட் லேங்க் என்பவர் தயாரித்து ப்ரோ டூல்ஸ் மற்றும் எஃப்எல் ஸ்டுடியோ ஆகிய எண்ணியல் ஒலிப் பணி நிலையங்களிலேயே முழுவதுமாக உருவானது.[11] டிசம்பர் 15 அன்று "சம்திங் இன் யுவர் மௌத்" ராக் ரேடியாவில் இரண்டாவது தனிப்பாடலாக வெளியாகி அதில் முதல் இடத்தை வென்றது. "இஃப் டுடே வாஸ் யுவர் லாஸ்ட் டே" இரண்டாவது பெரும் தனியிசையாகவே வெளியானது. இதன் பிறகு, செப்டம்பர் மாதத்தில் மேலும் இரண்டு தனியிசைகளாக, "ஐ'ட் கம் ஃபார் யூ" மற்றும் "பர்ன் இட் டு தி க்ரௌண்ட்" ஆகியவை ஆறாவது தனியிசைத் தடமான "நெவர் கோன்னா பீ அலோன்" என்பதனுடன் வெளியிடப்பட்டுள்ளன. நவம்பர் 16 அன்று ஷேக்கிங் ஹேண்ட்ஸ் என்பது ஏழாவது தனியிசைத் தடமாக வெளியிடப்பட்டது.[12]

விமர்சனம்

[தொகு]

பிரபலமான இசையில் மிக அதிக அளவிலான விமர்சனங்களைப் பெற்ற இசைக் குழுக்களில் நிக்கல்பேக்கும் ஒன்று.[13] நிக்கல்பேக், தனது தொழில் வாழ்க்கையின் பற்பல கட்டங்களில், பரவலான அளவில் எதிர்மறையான விமர்சனங்களைப் பலரிடமிருந்தும் பெற்றே வந்துள்ளது. இந்தக் குழு வர்த்தக ரீதியாகச் செயல்படத் துவங்கியதிலிருந்து அவர்களது ஆறு ஒலிப்பதிவுக் கூட இசைத் தொகுப்புக்களில் மிக அண்மையிலான மூன்று- அதாவது தி லாங் ரோட், ஆல் தி ரைட் ரீசன்ஸ் மற்றும் டார்க் ஹார்ஸ் ஆகியவை- முறையே 62%, 41% மற்றும் 49% மதிப்பெண்கள் மட்டுமே பெறுவதாக விமர்சனத் திரள் வலைத்தளமான மெடாக்ரிடிக் அறிவிக்கிறது.[14]

இவை சுயமான படைப்பாற்றல் அற்றவை என்று சில நேரங்களில் கேலிக்கு உள்ளாகியுள்ளன. 2001ஆம் வருடம், ரோலிங் ஸ்டோன் இந்த இசைக் குழுவின் இசை பாணியை இவ்வாறு விமர்சித்தது: "சொந்தமான திறமையை நீங்கள் எதிர்பார்த்தால், ஒரு நிக்கல் பேக் (ஐந்து சென்ட்டுகள்) அல்ல- முழுப் பணத்தையுமே திரும்ப வாங்கிக் கொள்ள வேண்டும்."[15] தங்களது 2003ஆம் ஆண்டிற்கான வெளியீட்டில் ரோலிங் ஸ்டோன் , தி லாங் ரோட் "கற்பனை வளமற்றது என்றில்லாவிடினும், வெட்கமற்ற முறையில் நிலையிசைவு கொள்ளாதது" என்றும் கூறியது. ஆல்மியூசிக்கும் இவ்வாறு உரைத்தது: "நிக்கல்பேக் ஒலிப்பதிவுக் கூடத்தில் மேலும் கொஞ்ச நேரம் செலவழித்து, மேலும் கொஞ்சம் உழைக்கலாம்; அதை விடுத்து, அதே இசையை மீண்டும் அளித்து, அது எந்த அளவு கொடுமையான மற்றும் தேவையற்ற முறையில் மந்தமான இசைக் குழுவாக உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் கூறுவதாக உள்ளது."[14] ராக் பாண்ட் என்னும் ஒளிக்காட்சி விளையாட்டின் உருவாக்குனரான ஹாமோனிக்ஸ் தனது ராக் பாண் நெட்வொர்க் என்பதற்கு உள்ளார்ந்த சங்கேதக் குறியீடாக "ராக் பாண்ட்:நிக்கல்பேக்" என்று பெயரிட்டது; அதாவது, நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் குறிப்பிட்டபடி, "மிகப் பிரதானமாக நவீன ராக் இசையினமாக இந்தப் பெயரே அனைத்து இசை ஆர்வங்களையும் திருப்புவதற்குப் போதுமானது என்ற கருத்தின் அடிப்படையில்" இவ்வாறு அதற்குப் பெயரிட்டது.[16]

2005ஆம் வருடம், ரோலிங் ஸ்டோன் "ஆல் தி ரைட் ரீசன்ஸ் எவ்வளவு சோர்வாக ஒலிக்கிறது என்றால், அதைக் கேட்பதற்கு கர்ட் [கோபெய்ன்] அருகில் இல்லை என்று நீங்கள் மகிழ்ச்சி கொள்ளும் அளவிற்கு" என்று கூறியது.[17] இதன் வெளியீட்டைப் பற்றி டைனி மைக்ஸ் டேப்ஸ் என்பதும் கவலை தெரிவித்தது. இதற்கு முந்தைய அனைத்து நிக்கல்பேக் வெளியீட்டுகளையும் போல, ஆல் தி ரைட் ரீசன்ஸ் என்பதும் தவறான காரணங்களுக்காக உருவாக்கப்பட்டு, சாகடிக்கும் அளவு சலிப்பூட்டுவதாக அதே சூத்திரங்களையும், காது புளித்த சொற்றொடர்களையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது."[18] டார்க் ஹார்ஸ் இசைத் தொகுப்பை மறு ஆய்வு செய்த ஆல் மியூசிக்கைச் சார்ந்த ஸ்டீஃபன் தாமஸ் எர்லிவைன் இவ்வாறு கோரினார்: "நிக்கல்பேக் ஒரு கரடு முரடான, ஆபாசமான இசைக் குழு. இது இசையில் ரசனை என்பதைப் பற்றி தனக்கு உள்ள அறியாமையைப் பறைசாற்றி மகிழ்கிறது. சுறுசுறுப்புக் குறைவு அல்லது மட்டமான ரசனையில் மகிழ்ச்சி கொள்வதனாலேயே இது இவ்வளவு மோசமாகவும், முட்டிக்கு முட்டி தட்டுவதைப் போன்ற இசையுடன் அதற்குப் பொருத்தமாக, மூளையில்லாத தடித்த வார்த்தைகளையும் கொண்டுள்ளது."[19]

2007வது வருடம், யூஎஸ்ஏ டுடே , "மிகச் சில இசைக் குழுக்களே நிக்கல்பேக்கைப் போல இத்தனை தீவிரமான அளவு வெறுப்பேற்றுகின்றன" என்று அறிவித்தது.[20] நிக்கல்பேக்கின் வர்த்தக ரீதியான வெற்றி, "விமர்சகர்கள் தவறு" என்று சுட்டிக் காட்டுகிறதா என்றும் இந்தக் கட்டுரை கேள்வி எழுப்பியது; மேலும், இசை உலகத்திலிருந்தே பல்வேறு தோற்றுவாய்களிலிருந்தும் இது பற்றிய கருத்துக்களைப் பெற்றுப் பிரசுரித்தது. ரோலிங் ஸ்டோன் பத்திரிகையின் ஒரு மூத்த ஆசிரியரான நாதன் பிராக்கட் இவ்வாறு கூறினார்: "விமர்சனத்தால் பாதிக்கப்படாத சில இசைக் குழுக்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்." பிராக்கட் மற்றும் பிளெண்டர் பத்திரிகையின் முதன்மை ஆசிரியரான கிரெய்க் மார்க்ஸ் ஆகிய இருவருமே இந்தக் குழுவின் வெற்றிக்கு, "அதிகமாக ஒலித்தகடுகளை வாங்காத, அவ்வளவாக அலட்டிக் கொள்ளாத இளைஞர்களுக்கு" வானொலி மூலமாக அறிமுகம் ஆவதுதான் இந்தக் குழுவின் வெற்றிக்குக் காரணம் என்று கருதுகிறார்கள். விமர்சன பதிலிறுப்புகள் எத்தகையானதாக இருப்பினும், நிக்கல்பேக்கின் பிராபல்யம், "அது அடைந்துள்ள வெற்றிக்கு ஒரு பாராட்டே" என்று மார்க்ஸ் புகழ்ந்துரைத்தார்.[20]

விமர்சகர்களின் கண்டனங்களைச் சரமாரியாகப் பெற்றாலும், நிக்கல்பேக் இசைக்குழு வர்த்தக ரீதியாகத் தங்களது இசைத் தொகுப்புக்கள் ஒவ்வொன்றிலும் பல்வேறு பிரிவினரையும் திருப்திப்படுத்துவதில் வெற்றி அடைந்துள்ளது. நிக்கல்பேக்கின் சில்வர் சைட் அப் வர்த்தக ரீதியில் கட்டுடைத்த வெற்றியாக அறிவிக்கப்படுகையில், ஆல்மியூசிக் விமர்சகர் லியானா ஜோன்ஸ் இவ்வாறு பாராட்டினார்: "தங்களது சம கால இசைக் குழுக்களை விட இந்த இசைக் குழு மேலோங்கியிருப்பதற்குக் காரணம், அதன் உச்சமான முனைப்பும் மற்றும் அடிப்படையாக உள்ள உணர்ச்சிப் பெருக்கும்தான்.... நேயர்கள் தங்களை அடையாளம் கண்டு கொள்வதான ஏற்றத் தாழ்வுகளுடனான இசையை நிக்கல்பேக் யதார்த்தமான கதை சொல்லும் பாணியில் அளிக்கிறது."[21] 2008ஆம் வருடம், டார்க் ஹார்ஸ் இசைத் தொகுப்பு வெளியான பிறகு, இந்த இசைக்குழு தங்களது இலக்கான நேயர்கள் யார் என்று அறிந்திருப்பதே இதன் வெற்றிக்குக் காரணம் என்று சார்ட்அட்டாக் கூறியது. "ஷாட் க்ரோயேகர் ஒரு மிகச் சிறந்த அறிவாளி; மக்களுக்கு என்ன வேண்டும், தன்னால் எந்த அளவு செல்ல இயலும் என்பதை அவர் மிகச் சரியாக அறிந்து கொண்டுள்ளார்." பரபரப்பான, குடிபோதையைப் பற்றிய பாடல்களைக் கொண்டு, அதே சமயம் எந்த ஒரு கட்டுப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்காத வண்ணம் வேண்டிய அளவு காதல் மற்றும் நல்லொழுக்க அதிகாரம் ஆகியவற்றைக் கொண்டு வார்த்தைகளுக்கு முலாம் பூசிப் பெரும்பான்மையோர் ரசிக்கும் ஒரு இசைத் தொகுப்பு ஒன்றை அவர் அளித்துள்ளார். வட அமெரிக்காவே, கொண்டாடு. இதுதான் உனக்கான உலகம்."[22] பில்போர்ட் பத்திரிகையும் இந்த இசைக்குழுவைப் பாராட்டியது: "குண்டு துளைக்காத கவசம் போன்ற நிக்கல்பேக், கடினமான காலங்களிலும் கட்டுப்படியாகக் கூடிய மகிழ்ச்சியை உறுதி செய்யும் கொண்டாட்டத்தை அளிக்கிறது."[23]

2009ஆம் ஆண்டு, வேர்ட் மேகசீன் வாசகர்கள், நிக்கல்பேக் குழுவிற்கு 19.8 சதமே வாக்களித்து, "உலகத்திலேயே மட்டமான இசைக் குழு" என்று தீர்ப்பளித்தனர்.[24]

இசைக்குழு உறுப்பினர்கள்

[தொகு]
காலக்கோடு

Unable to compile EasyTimeline input:

EasyTimeline 1.90


Timeline generation failed: 2 errors found
Line 7: </div>

- Invalid statement. No '=' found.


Line 13: id:Lines value:black legend:இசைத் தொகுப்புக்கள்

- Invalid attribute 'தொகுப்புக்கள்' ignored.

 Specify attributes as 'name:value' pairs.



தற்போதுள்ள உறுப்பினர்கள்
  • ஷாட் க்ரோயேகர் – முதன்மை வாய்ப்பாடல்கள், முதன்மை கிதார் (1995–தற்போதுவரை)
  • ரையான் பீக் – தாள கிதார், பின்னணி வாய்ப்பாடல்கள் (1995–தற்போதுவரை)
  • மை க்ரொயேகர் – பாஸ் (1995–தற்போதுவரை)
  • டேனியல் அடைய்ர் – டிரம்ஸ், பின்னணி வாய்ப்பாடல்கள் (2005–தற்போதுவரை)
முன்னாள் உறுப்பினர்கள்
  • ப்ராண்டன் க்ரோயேகர் – டிரம்ஸ் (1995–1997)
  • ரையான் விகேடல் – டிரம்ஸ் (1997–2005)

இசை வரலாறு

[தொகு]
  • கர்ப் (1996)
  • தி ஸ்டேட் (2000)
  • சில்வர் சைட் அப் (2001)
  • தி லாங் ரோட் (2003)
  • ஆல் தி ரைட் ரீசன்ஸ் (2005)
  • டார்க் ஹார்ஸ் (2008)

விருதுகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. http://movies.nytimes.com/movie/359327/Nickelback-Pictures/overview
  2. http://movies.msn.com/movies/movie/nickelback-live-at-home/[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-06-22. பார்க்கப்பட்ட நாள் 2010-03-10.
  4. Emma Jones. "Meet the 'goofiest guys' in rock". BBC. பார்க்கப்பட்ட நாள் 2009-07-08.
  5. ஹெச்டிடிபி://நியூ.மியூசிக்.யாஹூ.காம்/ப்ளாக்ஸ்/சார்ட்_வாச்/34074/சார்ட்-வாச்-எக்ஸ்ட்ரா-தி-டாப்-20-ஆல்பம்ஸ்-செல்லர்ஸ்-ஆஃப்-தி[தொடர்பிழந்த இணைப்பு] 2000எஸ்
  6. நேம்லி நிக்கல்பேக் பரணிடப்பட்டது 2021-01-21 at the வந்தவழி இயந்திரம் பொருத்தமான இசைக்கு வழிகாட்டி
  7. Sisario, Ben (2008-07-08). ""Nickelback Signs Up With Live Nation"". NY Times. பார்க்கப்பட்ட நாள் 2008-07-08.
  8. ஹெச்டிடிபி://ஜாம்.கேனோ.சிஏ/மியூசிக்/ஆர்டிஸ்ட்ஸ்/என்/நிக்கல்பேக்/2001/10.02/748171.ஹெச்டிஎம்எல்[தொடர்பிழந்த இணைப்பு]
  9. ஹெச்டிடிபி://ரியா.காம்/கோல்ட்அண்ட்பிளாடினம்டேட்டாஅ.பிஹெச்பி?டேபிள்=சர்ச்-ரிசர்ல்ட்ஸ்[தொடர்பிழந்த இணைப்பு]
  10. மெயின்ஸ்ட்ரீம் டாப் 40 ஆட் டேட்ஸ் பரணிடப்பட்டது 2012-05-25 at Archive.today எஃப்எம்க்யூபி.காம் 2008ஆம் வருடம் செப்டம்பர் 16 அன்று பெறப்பட்டது.
  11. ஹெச்டிடிபி://டபிள்யூடபிள்யூடபிள்யூ.கோமோட்ரோக்.காம்/நியூ-ரிலீசஸ்/சிடி-ரிலீசஸ்/நிக்கல்பேக்-அனௌன்ஸ்-ந்யூ-ஆல்பம்ஸ்-200809047346/நிக்கல்பேக்அனௌன்ஸ்[தொடர்பிழந்த இணைப்பு] நியூ ஆல்பம்
  12. ஹெச்டிடிபி://எஃப்எம்க்யூபி.காம்/ஆர்ட்டிகிள்.ஏஎஸ்பி?ஐடி=16697[தொடர்பிழந்த இணைப்பு]
  13. "Fans Vs. the Critics - Nickelback". About.com. Archived from the original on 2012-01-18. பார்க்கப்பட்ட நாள் 2007-01-16.
  14. 14.0 14.1 ஹெச்டிடிபி.டபிள்யூடபிள்யூடபிள்யூ.மெடாக்ரிடிக்.காம்/மியூசிக்/ஆர்டிஸ்ட்ஸ்/நிக்கல்பேக்/லாங்ரோட்
  15. Matt Diehl. "Silver Side Up". Rolling Stone. Archived from the original on 2008-06-04. பார்க்கப்பட்ட நாள் 2009-07-07.
  16. Radosh, Daniel (2009-08-11). "While My Guitar Gently Beeps". The New York Times: p. MM26. http://www.nytimes.com/2009/08/16/magazine/16beatles-t.html?pagewanted=1. பார்த்த நாள்: 2009-11-03. 
  17. "All the Right Reasons". Rolling Stone. Archived from the original on 2009-09-10. பார்க்கப்பட்ட நாள் 2009-07-07.
  18. "Tiny Mix Tapes Reviews: Nickelback Music Review". Tiny Mix Tapes. Archived from the original on 2009-05-03. பார்க்கப்பட்ட நாள் 2009-07-07.
  19. Erlewine, Stephen Thomas. "Review: Dark Horse". Allmusic. பார்க்கப்பட்ட நாள் 13 June 2009.
  20. 20.0 20.1 Erin Carlson. "Sales can't buy love for some top bands". USA Today. பார்க்கப்பட்ட நாள் 2009-07-07.
  21. "Silver Side Up". Allmusic. பார்க்கப்பட்ட நாள் 2009-07-07.
  22. ஹெச்டிடிபி.டபிள்யூடபிள்யூடபிள்யூ.சார்ட்அட்டாக்.காம்/ரெவ்யூஸ்/628428/நிக்கல்பேக்ஸ்-டார்க்-ஹார்ஸ்-ஃபார்-டார்க்-டைம்ஸ்
  23. ஹெச்டிடிபி.டபிள்யூடபிள்யூடபிள்யூ.பில்போர்ட்.காம்/பிபிகாம்/ரெவ்யூஸ்-ஆல்பம்ஸ்/டார்க்ஹார்ஸ்-1003895507.ஸ்டோரி
  24. ஹெச்டிடிபி.டபிள்யூடபிள்யூடபிள்யூ.சார்ட்அட்டாக்.காம்/ந்யூஸ்.77460/நிக்கல்பேக்-வோடட்-வொர்ஸ்ட்-பேண்ட்-இன்-தி-வேர்ல்ட்

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கல்பேக்&oldid=3925286" இலிருந்து மீள்விக்கப்பட்டது