உள்ளடக்கத்துக்குச் செல்

நிகில் பானர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டிட்
நிகில் பானர்ஜி
பத்ம பூசண்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1931-10-14)14 அக்டோபர் 1931
பிறப்பிடம்கொல்கத்தா, இந்தியா
இறப்பு27 சனவரி 1986(1986-01-27) (அகவை 54)
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர் சித்தார்
இசைக்கருவி(கள்)சித்தார்

பண்டிட் நிகில் ரஞ்சன் பானர்ஜி (Pandit Nikhil Ranjan Banerjee) (14 அக்டோபர் 1931 - 27 சனவரி 1986) இவர் மைகர் கரானாவின் (பள்ளி) இந்திய பாரம்பரிய சித்தார் கலைஞர் ஆவார். புகழ்பெற்ற வங்காள தேச இசைக் கலைஞர் பாபா அலாவுதீன் கானின் மாணவரான இவர், தொழில்நுட்ப திறமைக்குப் பெயர் பெற்றவர். பண்டிட் ரவி சங்கர், உஸ்தாத் விலாயத் கான் ஆகியோருடன் சேர்ந்து, இவர் சித்தாரின் முன்னணி நிபுணர்களில் ஒருவராக உருவெடுத்தார். இவர் இந்திய அரசிடமிருந்து பத்ம பூசண் கௌரவத்தைப் பெற்றுள்ளார். [1]

ஆரம்பகால வாழ்க்கையும், பின்னணியும்

[தொகு]

இவர், 14 அக்டோபர் 1931 அன்று கொல்கத்தாவில் பிறந்தார். இவரது தந்தை ஜிதேந்திரநாத் பானர்ஜி ஒரு தொழில்முறை சித்தார் கலைஞராவார். மேலும், இவர், தனது தந்தையின் இசையால் ஈர்க்கப்பட்டார். இவர் தனது நான்கு வயதிலேயே ஒரு கருவியை இசைக்க முயற்சிக்க விரும்பியதால், இவரது தந்தையாலும், தாத்தாவாலும் தடுக்கப்பட்டார். ஆனால், ஐந்து வயதில், அவர்கள் இவருக்கு ஒரு சிறிய சித்தாரை வழங்கினர். ஆரம்பத்தில் தனது தந்தையிடம் கற்றுக்கொண்டார். பின்னர், இவர் அகில இந்திய சித்தார் போட்டியில் வென்றார். மேலும், ஒன்பது வயதில் அனைத்திந்திய வானொலியில் பணியாற்றும் இளைய இசைக்கலைஞரானார். இவரை இவரது தந்தை ஜிதேந்திரநாத் முஷ்டாக் அலிகான் என்பவரிடம் சீடராக சேர்ந்துக் கொள்ள அணுகினார். ஆனால் அவரிடம் குறுகிய வாரங்கள் மட்டுமே கற்றுக்கொண்டார். அதற்கு பதிலாக இன்றைய வங்காளதேசத்தின் கௌரிப்பூரைச் சேர்ந்த ஜமீந்தாரான பிரேந்திர கிஷோர் ராய் சௌத்ரி, இவரது ஆரம்பகால பயிற்சிக்கு பொறுப்பானார். இவர் ராதிகா மோகன் மைத்ராவின் கீழ் கணிசமான பயிற்சியைப் பெற்றார்.

1946 இல் இவர், கியால் பாடகர் அமீர் கான் இவரது சகோதரிக்கு கற்பிக்கும் போது சந்தித்தார். சில வருடங்கள் கழித்து கச்சேரியில் அவரது இசையைக் கேட்டதன் மூலம் இவருக்கு இசையின் மீதான உற்சாகம் வலுப்பெற்றது. [2] அமீர் கான் தொடர்ந்து பானர்ஜியின் இசை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினார். 

பயிற்சி

[தொகு]

1947 ஆம் ஆண்டில், இவர் தனது மகன் அலி அக்பர் கானுடன் அவரது முக்கிய குருவாக மாறவிருந்த உஸ்தாத் அலாவுதீன் கானைச் சந்தித்தார். இருவரும் சரோத் இசைக் கலைஞர்கள். இவர், அலாவுதீன் கானின் இசை நிகழ்ச்சிகளுக்குச் சென்றார். அவரை தனது ஆசிரியராக்கிக் கொள்ள ஆசைப்பட்டார். அலாவுதீன் கான் அதிக மாணவர்களைப் பெற விரும்பவில்லை. ஆனால் இவரது வானொலி ஒலிபரப்பைக் கேட்டபின் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார். அலாவுதீன் கான் இவரது பிரதான ஆசிரியராக ஆனார். அவர் மைகாரை விட்டு வெளியேறிய பிறகு, அலாவுதீன் கானின் மகன் அலி அக்பர் கானிடமிருந்தும் பல ஆண்டுகளாக கற்றுக்கொண்டார். [3]

உஸ்தாத் அலாவுதீன் கானின் கீழ் பயிற்சி தீவிரமாக இருந்தது. பல ஆண்டுகளாக, இவரது பயிற்சி அதிகாலை நான்கு மணிக்கே தொடங்கும். சில இடைவெளிகளுடன், இரவு பதினொரு மணி வரை தொடரும். [4] உஸ்தாத் அலாவுதீன் கான், அவருடைய மகன் அலி அக்பர் கான், பேரன் ஆசிசு கான் மற்றும் மருமகன் பகதூர் கான் (சரோத்); சித்தாரில் ரவிசங்கர் ; அவரது மகள், அன்னபூர்ணா தேவி, சுர்பகாரில்; பன்னாலால் கோசு (புல்லாங்குழல்); வசந்த் ராய் (சரோத்) போன்றவர்களிடமும் பயிற்சி பெற்றார். 

நிகழ்த்தும் தொழில்

[தொகு]

மைகருக்குப் பிறகு, பானர்ஜி ஒரு கச்சேரி வாழ்க்கையைத் தொடங்கினார். அது இவரை உலகின் எல்லா மூலைகளிலும் அழைத்துச் சென்று இவரது அகால மரணம் வரை நீடித்தது. தனது வாழ்நாள் முழுவதும் இவர் உஸ்தாத் அலாவுதீன் கான் மற்றும் அவரது குழந்தைகளான உஸ்தாத் அலி அக்பர் கான் மற்றும் திருமதி. அன்னபூர்ணா தேவி ஆகிய இருவரிடமும் பயின்று வந்தார். 1968 இல், இவர் பத்மசிறீ பெற்றார். 1974 இல் மதிப்புமிக்க சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார் .

நிகில் பானர்ஜி அடிக்கடி ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சுற்றுப்பயணம் செய்தார்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  2. Music for the Soul பரணிடப்பட்டது 19 திசம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம், abstract from the souvenir programme for a memorial programme organized by Amir Khan Sangeet Sangstha Rabindra Sadan 1975
  3. Interview by Ira Landgarten Page 2, printed in the booklet for The Hundred-Minute Raga: Purabi Kalyan, Raga Records Raga-207)
  4. Interview by Ira Landgarten, printed in the booklet for The Hundred-Minute Raga: Purabi Kalyan, Raga Records Raga-207)
  • Allauddin claimed he was teaching Banerjee the sitar "style of Nawab Kutubudaulla Bahadur of இலக்னோ", a player not otherwise remembered. (My Maestro As I Saw Him, essay by Banerjee printed in the booklet for Afternoon Ragas, Raga Records Raga-211)
  • San Francisco Chronicle:

Banerjee's technique is a phenomenon, faster than cheetahs, more secure than the dollar. But he does not lean on that as most players do. It is there, at the ready, a strength to be called on when needed. It is his gentle playing that is so singular. The ease of it, highlighted by atypical (for Indian music) bits of literal reiteration create a kind of euphoric effect. The result is remarkably individual. One could spot a Banerjee performance on a radio broadcast or tape, a thing of great difficulty among Oriental musicians.

Manomanjari—a variation: some argue it's a blend of Kalavati & Marwa. In a 1979/80 [not verifiable] Calcutta concert [@Kala Mandir], as per the announcement, Mr. Banerjee played two ragas of his own creation—Manomanjari & Chandrakaushiki.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகில்_பானர்ஜி&oldid=3588733" இலிருந்து மீள்விக்கப்பட்டது