நிகில் சிற்றரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிகில் சிற்றரசு (Nikhil Chittarasu ) இந்தியாவைச் சேர்ந்த ஒரு உயரம் தாண்டுதல் வீரர் ஆவார். 1990 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 24 ஆம் நாள் இவர் பிறந்தார்.

சாதனைகள்[தொகு]

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய உள்ளரங்க விளையாட்டுப் போட்டியில் எட்டாவது இடத்தைப் பிடித்தார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய போட்டிகளில் 13 ஆவது இடம் பெற்றார். இதே ஆண்டில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2013 ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன் பட்ட விலையாட்டுப் போட்டிகளில் ஒன்பதாவது இடம் இவருக்குக் கிடைத்தது.

2013 ஆம் ஆண்டு கொழும்புவில் நடந்த போட்டியில் தனது சாதனை உயரமான 2.21 மீ. உயரத்தை இவர் தாண்டினார்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஐ.ஏ.ஏ.எஃபில் இடம்பெறும் நிகில் சிற்றரசு-இன் குறிப்புப் பக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகில்_சிற்றரசு&oldid=2775050" இருந்து மீள்விக்கப்பட்டது