உள்ளடக்கத்துக்குச் செல்

நிகில் குமார் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிகில் குமார்

நிகில் குமாரசாமி (Nikhil Kumarswamy) இவர் ஓர் இந்திய நடிகரும் மற்றும் அரசியல்வாதியுமாவார்.[1] இவர் கன்னட மற்றும் தெலுங்குத் திரையுலகில் நடித்துள்ளார். கன்னட-தெலுங்கு இருமொழி திரைப்படமான ஜாகுவார் (2016) மூலம் நடிகராக அறிமுகமானார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

நிகில் குமாரசாமி முன்னாள் கர்நாடக முதல்வர் எச். டி. குமாரசாமியின் மகனும் முன்னாள் இந்தியப் பிரதமர் எச். டி. தேவ கௌடாவின் பேரனும் ஆவார்.[1][2]

2020 பிப்ரவரி 10, பெங்களூரின் தாஜ் வெஸ்ட் எண்டில் காங்கிரசு தலைவரும் ரியல் எஸ்டேட்டருமான எம். கிருஷ்ணப்பாவின் பேத்தியான ரேவதியுடன் நிகில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.[3][4] திருமணம் 2020 ஏப்ரல் 17, அன்று ராம்நகரில் உள்ள ஜனபட லோகாவில் நடைபெற்றது.[5][6]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

2019ஆம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தலில் கர்நாடகாவில் ( மக்களவை ) மண்டியா மாவட்டத்தில் இருந்து ஜனதா தளம் (மதச்சார்பற்றது) வேட்பாளராக நிகில் போட்டியிட்டார் [7] . வரலாற்று ரீதியாக இந்திய தேசிய காங்கிரசு மிகவும் வெற்றிகரமான கட்சியாக இருந்ததால், காங்கிரசு- ஜனதா தளம் (மதசார்பற்றது) கூட்டணிக்கு மண்டியா ஒரு பாதுகாப்பான கோட்டையாக கருதப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜனதா தளம் (மதச்சார்பற்றது) மண்டியா மாவட்டத்தில் போட்டியிட்டது.[8][9][10] தேர்தலில் அவர் மறைந்த அம்ரீசின் மனைவி சுமலதாவிடம் 128,876 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Nikhil Gowda's first interview is here".
  2. 2.0 2.1 "Former PM Deve Gowda and family revel in opening of grandson Nikhil Kumar's film Jaguar". Indianexpress.com. 13 October 2016.
  3. "HD Kumaraswamy's Son Nikhil Engaged To Congress Leader's Grand-Niece". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-02-10.
  4. www.thenewsminute.com https://www.thenewsminute.com/article/nikhil-kumaraswamy-engaged-former-cong-min-s-grandniece-revathi-bengaluru-117873. பார்க்கப்பட்ட நாள் 2020-02-10. {{cite web}}: Missing or empty |title= (help)
  5. "Preparation begins for Nikhil's wedding - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
  6. "Kumaraswamy extends open invite; lakhs may turn up at his son's wedding in April". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-02-24. பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
  7. May 23, PTI |; 2019; Ist, 21:41. "Karnataka Lok Sabha Election Results: Kumaraswamy's son Nikhil loses in Mandya | India News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-06. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
  8. "Mandya (Lok Sabha constituency)", Wikipedia (in ஆங்கிலம்), 2020-02-29, பார்க்கப்பட்ட நாள் 2020-03-06
  9. Swamy, Rohini (2019-05-27). "It's down to 86-yr-old Deve Gowda to revive JD(S) as family politics, poll rout threaten party". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
  10. Narayanan, Nayantara. "2019 results: With BJP sweeping Karnataka, will the Congress-JD(S) government survive?". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகில்_குமார்_(நடிகர்)&oldid=3758180" இலிருந்து மீள்விக்கப்பட்டது