நிகார் அமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிகார் அமீன் (Nihar Ameen) ஒரு முன்னணி இந்திய நீச்சல் பயிற்சியாளர் ஆவார். 2015 ஆம் ஆண்டில் இவர் துரோணாச்சார்யா விருது பெற்றார் [1]. பெங்களூருவில் உள்ள சிறப்பு மிக்க பதுகோனே திராவிட் மையத்திலுள்ள டால்பின் கழகத்துடன் இவர் தொடர்பு கொண்டிருந்தார். இவரிடம் பயிற்சி பெற்ற வீர்ர்களில் ஒருவரான சிக்கா டான்டன் என்பவர் 2004 ஆம் ஆண்டு ஏதென்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு முதன்முதலாகத் தகுதிபெற்ற இந்திய விளையாட்டு வீரர் ஆவார். 2008 ஆம் ஆண்டு பீகிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு விர்தாவால் காதே மற்றும் சந்தீப் செச்வால் ஆகியோர் தகுதிபெற்றனர்[2] at Athens, 2004 and Virdhawal Khade and Sandeep Sejwal for Beijing, 2008.[3]. மெகனா நாராயணன் என்ற பூனாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனைக்கும் இவரே பயிற்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1989-1992 காலப்பகுதியில் அணி இயக்குநரும் ஒலிம்பிக் பயிற்சியாளருமான யாக் நெல்சன் உடன் அமெரிக்க தேசிய அணியின் உதவி பயிற்சியாளராக அமீன் பணியாற்றினார்[4]. அரசியல் சார்பற்ற நிறுவனமான கோசுபோர்ட்சு அறக்கட்டளையில் இடம்பெற்றிருந்த நிபுணர்கள் குழுவில் அமீனும் ஓர் உறுப்பினராக இருந்தார்[5].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகார்_அமீன்&oldid=2720327" இருந்து மீள்விக்கப்பட்டது