நிகழ் நேர ஆளுகைச் சமூகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிகழ் நேர ஆளுகைச் சமூகம் (Real Time Governance Society) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடுவால் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 அன்று உருவாக்கப்பட்டது. [1] நிகழ் நேர ஆளுகைத் துறையின் இயங்கும் கரமான இப்பிரிவு முதல்வருக்கு நேரடியாக அறிக்கை அளிக்கிறது. [2]

வரலாறு[தொகு]

ஆந்திரப் பிரதேசத்தில் மின் நிர்வாகத்தை நிலைநிறுத்த மின்னணு தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். அனைத்து முக்கியமான நிகழ்வுகளையும் இயற்கை பேரழிவுகளையும் நிகழ்நேர அடிப்படையில் கையாள்வதற்கும், மின்-ஆளுமை, தொழில்நுட்பம் மற்றும் மின்னணு தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதற்கும், பன்னாட்டு தரங்களின் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஆளுகைக்காக ஏற்றுக்கொள்வதற்கும் நிகழ்நேர நிர்வாகத்தை செயல்படுத்துவதற்கும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

அறிக்கை அளிப்பதற்காக நிகழ் நேர ஆளுகைச் சமூகத்தில் 13 மாவட்ட மையங்களும் 1 மாநில மையமும் ஏற்படுத்தப்பட்டன. [3] ஆந்திரப் பிரதேச வானிலை முன்னறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஆராய்ச்சி மையம், ஆளில்லா வானூர்திகள், இயந்திர கற்றல் அமைப்புகள், உயிரியளவு அமைப்புகள் மற்றும் பிற கண்காணிப்பு அமைப்புகளின் தரவுகளை ஒன்றிணைந்து ஆளுகைச் சமூக அமைப்பு மூலம் நிகழ்நேரத்தில் தெரிவிக்கப்படுகிறது. அழைப்பு மையம் ஒன்று குறைகளை நிவர்த்தி செய்கிறது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "How Real-Time Governance Society helps Chandrababu Naidu evaluate his MLAs performance". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-02-21.
  2. ANI (2017-11-26). "Chandrababu Naidu inaugurates real time governance centre in AP". Business Standard India. https://www.business-standard.com/article/news-ani/chandrababu-naidu-inaugurates-real-time-governance-centre-in-ap-117112600408_1.html. 
  3. 3.0 3.1 "Real Time Governance Centre launched in Andhra Pradesh" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-21.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகழ்_நேர_ஆளுகைச்_சமூகம்&oldid=3218395" இலிருந்து மீள்விக்கப்பட்டது