நிகல்லா லாசன்
நிகல்லா லூசி லாசன் (பிறப்பு 6 ஜனவரி 1960) என்பவர் ஆங்கில உணவு எழுத்தாளரும், சமையல் நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார்.[1] இவர் முன்னாள் ஐக்கிய இராச்சிய அரசு கருவூல பொறுப்பாளரான நிகல் லாசன் மற்றும் வனேசா லாசன் ஆகியோரின் மகள் ஆவார். ஜே. லியோன்ஸ் அண்ட் கோ உணவகம் இவரது குடும்பத்திற்கு சொந்தமானது.
நிகல்லா லாசன் | |
---|---|
2016 இல் லாசன் | |
பிறப்பு | நிகல்லா லூசி லாசன் 6 சனவரி 1960 வான்டர்சர்த், இலண்டன்,இங்கிலாந்து |
இருப்பிடம் | இலண்டன், இங்கிலாந்து |
படித்த கல்வி நிறுவனங்கள் | லேடி மார்கட் ஹால் ஆக்ஸ்போர்ட் |
பணி | சமையல் குறிப்பு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர் மற்றும் ஒலிபரப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1983–தற்சமயம் வரை |
அறியப்படுவது | தொலைக்காட்சி தொகுப்பாளர், சமையல் எழுத்தாளர் |
சொத்து மதிப்பு | $15–25 மில்லியன்[2] |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 2 |
வலைத்தளம் | |
nigella |
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]நிகல்லா லோசன் இலண்டனில் வாண்ட்ஸ்வொர்த்தில் பிறந்தார்.[4] இவரது தந்தை நிகல் லாசனின் மகள்களில் ஒருவராவார்.[5] இவரது தாய் வனேசா சல்மொன் ஆவார்.[6] இவரது பெற்றோர் இருவரும் யூத குடும்பங்களிலிருந்து வந்தவர்கள்.[7] 1980 ஆம் ஆண்டில் நிகல்லாவுக்கு 20வது வயதாக இருக்கும் போது இவரது பெற்றோர் விவாகரத்து செய்தனர். பின்னர் அவர்கள் மறுமணம் செய்து கொண்டனர். லாசனின் தாயார் 48வது அகவையில் கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.[8] டொமினிக், ஹோராட்டியா மற்றும் தாமசினா ஆகியோர் இவரது முழு உடன் பிறப்புக்களும், டாம் மற்றும் எமிலி இவரது தந்தையின் இரண்டாவது மனைவியின் பிள்ளைகள் ஆவார்கள் .
கல்வி
[தொகு]நிகல்லா குழந்தை பருவத்தில் சில காலத்தை ஹையர் கின்னெர்டன் கிராமத்தில் கழித்தார். அவர் 9 முதல் 18 வயதிற்குள் ஒன்பது முறை பள்ளிகளை நகர்த்த வேண்டியிருந்தது. இப்ஸ்டாக் பள்ளி, குயின்ஸ் பள்ளி, மற்றும் கோடோல்பின் அன்ட லேடிமர் பள்ளிகளில் படித்தார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நவீன மற்றும் இடைக்கால மொழிகளில் பட்டம் பெற்றார்.[9] லேடி மார்கட் ஹாலில் உறுப்பினராக இருந்தார்.[10] குறிப்பிட்ட காலம் இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் வாழ்ந்தார்.[11]
பணி
[தொகு]லாசன் பட்டம் பெற்ற பிறகு புத்தக மற்றும் உணவக விமர்சகராக பணி புரிந்தார்.[9] 1986 ஆம் ஆண்டு தி சண்டே டைம்ஸ் இதழின் துணை இலக்கிய ஆசிரியரானார்.[12] பின்னர் பல செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு எழுதினார். 1998 ஆம் ஆண்டு அவரது முதல் சமையல் புத்தகமான ஹவ் டூ ஈட் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.[12] 300,000 பிரதிகள் விற்று சிறந்த விற்பனை புத்தகமானது.[13] 2000 ஆம் ஆண்டு ஹவ் டு பி டொமஸ்டிக் கொடஸ் என்ற அவரது இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகம் ஆண்டின் எழுத்தாளருக்கான பிரித்தானிய புத்தக விருதை வென்றது.[13]
1999 ஆம் ஆண்டில் தனது சொந்த சமையல் நிகழ்ச்சித் தொடரான நிகல்லா பைட்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.[14] நிகல்லா பைட்ஸ் என்ற புத்தகம் ஒன்றையும் எழுதினார். இது சிறந்த விற்பனையை புத்தகமாக திகழ்ந்தது. இந்த புத்தகத்திற்காக கில்ட் ஆஃப் உணவு எழுத்தாளர்கள் விருதை வென்றார். 2005 ஆம் ஆண்டு ஐடிவி பகல்நேர அரட்டை நிகழ்ச்சியை தொகுப்பாளராக பணிபுரிந்தார். இந்த நிகழ்ச்சி எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றதால் நிறுத்தப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் அமெரிக்க புட் நெட்வொர்கில் நிகழ்ச்சியொன்றை தொகுத்தார். அதன்பின்னர் இங்கிலாந்தில் இவர் தொகுத்து வழங்கிய நிகல்லா கிறிஸ்மஸ் கிச்சன் என்ற நிகழ்ச்சி 2007 ஆம் ஆண்டில் நிகல்லா எக்ஸ்பிரஸ் என்ற நிகழ்ச்சியை பிபிசி டூ வில் நடத்த வழிவகுத்தது.[15] இவர் இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமான சமையல் குறிப்பு புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
விருதுகள்
[தொகு]2000 - பிரித்தானிய புத்தக விருது[13]
2001 - டபிள்யூ.எச். ஸ்மித் புத்தக விருது
2001 - உணவு எழுத்தாளர்களின் கில்ட் விருது[16]
2001 - உலக உணவு ஊடக விருது[17]
2002 - டபிள்யூ.எச். ஸ்மித் புத்தக விருதுகள்[18]
2007 - உலக உணவு ஊடக விருது
குறிப்புகள்
[தொகு]- ↑ "Celebrity milestones this week". nydailynews.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
- ↑ "How rich is Nigella?". Yahoo Finance UK. 10 January 2014. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
- ↑ "Nigella Lawson". Woman's Hour. Archived from the original on 15 December 2012.அணுகப்பட்டது 18 January 2014.
- ↑ "Find my past nigella lawson". www.findmypast.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
- ↑ "A women of extreme".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Bloomberg - Are you a robot?". www.bloomberg.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
{{cite web}}
: Cite uses generic title (help) - ↑ "Spice of life Nigella Lawson endured the very public death of her husband to cancer. Now she has a new partner, has she found the recipe for happiness?". HeraldScotland (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
- ↑ "Say what you like about Nigella Lawson". Archived from the original on 2005-03-07.
- ↑ 9.0 9.1 "The Times & The Sunday Times". www.thetimes.co.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
- ↑ "you ask the questions". Archived from the original on 2008-12-22.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "An Angel at our table".
- ↑ 12.0 12.1 "Nigella Lawson: A sweet and sour life".
- ↑ 13.0 13.1 13.2 "Hot Dish".
- ↑ "Too hat to handle".
- ↑ "Weekly viewing summary". Archived from the original on 2008-07-12.
- ↑ "Awards". www.gfw.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
- ↑ "worldfoodmediaawards.com". www.worldfoodmediaawards.com. Archived from the original on 2019-10-23. பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
- ↑ "Viewers lose their hunger for cooking shows".