நிகர உள்நாட்டு உற்பத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒரு நாட்டின் நிகர உள்நாட்டு உற்பத்தி (Net Domestic Product) என்பது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து தேய்மான மதிப்பை நீக்கியபின் கிடைக்கும் பண மதிப்பாகும். ஒரு வருட காலத்தில் இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி அமைப்புகளில் தேய்வு ஏற்பட்டிருக்கும், அந்த மூலதன தேய்மானத்தைக் கழிப்பதன் மூலம் நிகர நாட்டு உற்பத்தி கணக்கிடப்படுகிறது.

நிகர உள்நாட்டு உற்பத்தி = மொத்த உள்நாட்டு உற்பத்தி - தேய்மானம்

பயன்பாடு[தொகு]

நிகர உள்நாட்டு உற்பத்தி மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை தக்கவைக்க ஆகும் செலவைக் கணிக்கலாம். ஒரு நாட்டின் மூலதன இழப்பு சரிசெய்யப்படாவிட்டால் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்துவிடும். நிகர மற்றும் மொத்த உள் நாட்டு உற்பத்தியின் இடைவெளி அகலாமாக வளர்ந்தால் நாட்டின் மூலதனம் குன்றுவதாகவும்; இடைவெளி குறுகி வளர்ந்தால் நாட்டின் மூலதனம் பெருகுவதாகவும் கணிக்கப்படுகிறது.