நிகத் ஜரீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிகத் ஜரீன்
தனிநபர் தகவல்
சுட்டுப் பெயர்(கள்)நிக்கி
தேசியம்இந்தியர்
பிறப்பு14 சூன் 1996 (1996-06-14) (அகவை 27)
நிசாமாபாத் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் (தற்போது தெலங்காணா), இந்தியா
எடை51 கிலோகிராம்கள் (112 lb)
விளையாட்டு
விளையாட்டுகுத்துச் சண்டை
எடை வகுப்புபிளைவெயிட்
பதக்கத் தகவல்கள்
நாடு  இந்தியா
பெண்கள் தொழில்முறை குத்துச்சண்டை

நிகத் ஜரீன் (Nikhat Zareen) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில்சாரா பெண் குத்துச்சண்டை வீரராவார். 1996 ஆம் ஆண்டு சூன் மாதம் 14 ஆம் தேதி இவர் பிறந்தார்.

2011 ஆம் ஆண்டு துருக்கி நாட்டின் ஆந்தாலியா நகரத்தில் நடைபெற்ற பன்னாட்டு தொழில்சாரா குத்துச்சண்டை சங்கத்தின் இளையோர் மற்றும் இளைஞர்களுக்கான உலக சாம்பியன் பட்டப் போட்டியில் பிளைவெயிட் எனப்படும் 49 கிலோ முதல் 51 கிலோ வரையிலான எடைப்பிரிவில் போட்டியிட்டு நிகத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.[1] குவகாத்தியில் நடைபெற்ற 2 வது இந்திய திறந்தநிலை பன்னாட்டு குத்துச்சண்டை போட்டியிலும் இவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். மேலும் பேங்காக்கு நகரத்தில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான தாய்லாந்து திறந்தநிலை பன்னாட்டு குத்துச்சண்டை போட்டியிலும் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.[2] தெலங்காணா மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் வி. சீனிவாச கவுடு நிகத்திற்கு இருசக்கர மின்சார வாகனத்தையும், தெலுங்கானாவின் விளையாட்டு ஆணையத்தினர் 10,000 ரூபாய் ரொக்கப் பரிசை வழங்கி சிறப்பித்துள்ளனர்.[3][4] குத்துச்சண்டை வீரர் மேரி கோமை தனது முன்மாதிரி என்று ஒரு நேர்காணலில் நிகத் கூறியுள்ளார்.[5]

சொந்த வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

இந்தியாவின் தெலங்காணா மாநிலத்திலுள்ள நிசாமாபாத்தில் முகமது ஜமீல் அகமதுவுக்கும், பர்வீன் சுல்தானா என்பவருக்கும் மகளாக நிகத் பிறந்தார்.[6][7][8] நிசாமாபாத்தில் உள்ள நிர்மலா இருதயா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார்.[9] தெலங்காணாவின் ஐதராபாத்தில் உள்ள ஏ.வி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.[10]

தன்னுடைய 13 வயதிலேயே நிகத் குத்துச்சண்டையை தொடங்கினார்.தந்தையிடம் பயிற்சி பெற்றுவந்த நிகத்[9] 2009 ஆம் ஆண்டு முதல் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்ந்து துரோணாச்சார்யா விருது பெற்ற ஐ.வி.ராவின் கீழ் பயிற்சி பெற்றார்.

தொழில்முறை சாதனைகள்[தொகு]

  1. கல்லூரி காலத்தில் ஜலந்தரில் நடந்த அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டியில் ‘சிறந்த குத்துச்சண்டை வீரர்’ என்ற விருதை வென்றார்.[11]
  2. 2010 ஆம் ஆண்டு ஈரோட்டில் நடந்த தேசியக் குத்துச்சண்டைப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக 'சிறந்த தங்க குத்துச்சண்டை வீரர்' என அறிவிக்கப்பட்டார்.[12]
  3. பல்கேரியாவில் நடந்த 2013 மகளிர் இளையோர் மற்றும் இளைஞர் உலக குத்துச்சண்டைப் போட்டியில் இவருக்கு வெள்ளிப் பதக்கம் வென்றார்.[13]
  4. செர்பியாவின் நோவி சாட் நகரில் நடைபெற்ற மூன்றாவது தேசிய கோப்பை சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். இப்போட்ட்டியில் 51 கிலோ எடை பிரிவில் உருசியாவின் பால்ட்சேவா எகடெரினாவை தோற்கடித்தார்.[14]
  5. 2015 ஆம் ஆண்டு அசாமில் நடந்த 16 ஆவது மூத்தோர் மகளிர் தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் நிகத் தங்கப்பதக்கம் வென்றார்.[15]
  6. பல்கேரியாவின் சோஃபியாவில் நடைபெற்ற 2019 எசுட்ராண்ட்சா நினைவு குத்துச்சண்டை போட்டியில், 51 கிலோ எடைப் பிரிவில் பிலிப்பினோ ஐரிஷ் மேக்னோவை தோற்கடித்து இவர் தங்கப்பதக்கம் வென்றார்.[16]

பிற சிறப்புகள்[தொகு]

அடிடாசு நிறுவனம் தனது விளம்பரத் தூதுவராக நிகத்தை ஒப்பந்தம் செய்தது[17] வெல்சுபன் குழுமமும் நிகத்தை ஆதரிக்கிறது. இந்திய விளையாட்டு ஆணையம் " ஒலிம்பிக் போட்டியின் இலக்கு" திட்டத்தில் நிகத்தைச் சேர்த்துள்ளது.[18][19] தனது சொந்த மாநிலமான தெலங்கானாவின் நிசாமாபாத்திற்கு அதிகாரப்பூர்வத் தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.[20]

மேற்கோள்கள்[தொகு]

  1. "4 Indians win gold in AIBA Women's Youth & Junior World Championship" (in en). 30 April 2011. https://m.timesofindia.com/sports/boxing/4-Indians-win-gold-in-AIBA-Womens-Youth-Junior-World-Championship/articleshow/8128801.cms. பார்த்த நாள்: 15 October 2020. 
  2. "This silver medal at Thailand Open is a huge confidence boost for me ahead of the World Championships: Nikhat Zareen - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-18.
  3. "Athletes Deepthi, Maheswari, Nandini and boxer Nikhat presented scooters" (in en). timesofindia. 29 September 2020. https://m.timesofindia.com/sports/more-sports/athletics/athletes-deepthi-maheswari-nandini-presented-scooters/articleshow/78384648.cms. 
  4. "SATS presents scootys to eminent sportspersons" (in en). telanganatoday. 15 October 2020. https://telanganatoday.com/sats-presents-scootys-to-eminent-sportspersons. 
  5. https://sportstar.thehindu.com/boxing/womens-day-special-boxer-nikhat-zareen-mary-kom-olympic-qualifiers-trials/article31014865.ece
  6. "Indian Boxing Federation Boxer Details". www.indiaboxing.in. பார்க்கப்பட்ட நாள் 13 October 2019.
  7. Firstpost. "India's Nikhat Zareen wins silver at Youth World Boxing". Archived from the original on 29 September 2013. பார்க்கப்பட்ட நாள் 31 May 2014.
  8. "Nikhat Zareen wins silver". The Hindu. 30 September 2013. http://www.thehindu.com/todays-paper/tp-sports/nikhat-zareen-wins-silver/article5183816.ece. பார்த்த நாள்: 31 May 2014. 
  9. 9.0 9.1 "Nikhat Zareen wins over family resistance". The Times of India. Archived from the original on 2013-10-03. பார்க்கப்பட்ட நாள் 31 May 2014.
  10. "Nikhat Zareen packs a punch" (in en). The Hindu. 26 February 2015. http://www.thehindu.com/news/cities/Hyderabad/nikhat-zareen-packs-a-punch/article6935340.ece. 
  11. "Nikhat Zareen packs a punch". The Hindu (in Indian English). 2015-02-26. பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.
  12. "India's Nikhat Zareen wins silver at Youth World Boxing". web.archive.org. 2013-09-29. Archived from the original on 2013-09-29. பார்க்கப்பட்ட நாள் 2021-02-19.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  13. Subrahmanyam, V. V. (4 October 2013). "Boxer awaits reward amid political turmoil". The Hindu. http://www.thehindu.com/news/cities/boxer-awaits-reward-amid-political-turmoil/article5201810.ece. பார்த்த நாள்: 31 May 2014. 
  14. https://www.jagranjosh.com/current-affairs/nikhat-zareen-won-gold-medal-at-the-third-nations-cup-international-boxing-tournament-1389616914-1
  15. "Boxer Nikhat Zareen won Gold Medal 16th Senior Woman National Boxing Championship at Assam - indtoday.com - INDToday". indtoday.com. Archived from the original on 2018-02-04. பார்க்கப்பட்ட நாள் 2021-02-21.
  16. "Strandja Memorial Boxing Tournament 2019: Nikhat Zareen, Meena Kumari Devi strike gold; Manju Rani settles for silver - Sports News , Firstpost". Firstpost. 19 February 2019. https://www.firstpost.com/sports/strandja-memorial-boxing-tournament-2019-nikhat-zareen-meena-kumari-devi-strike-gold-manju-rani-settles-for-silver-6114381.html. பார்த்த நாள்: 27 September 2020. 
  17. Tewari, Saumya (18 September 2018). "Adidas signs brand endorsement deal with Hima Das" (in en). Mint. https://www.livemint.com/Companies/yG9Zj6DW0aGZ4iLQxYEWYM/Adidas-signs-brand-endorsement-deal-with-Hima-Das.html. பார்த்த நாள்: 15 October 2020. 
  18. "I've decided to look ahead: Boxer Nikhat Zareen starts fresh for upcoming Asian Games, CWG" (in en). newindianexpress. 22 August 2020. https://www.newindianexpress.com/sport/other/2020/aug/22/ive-decided-to-look-ahead-boxer-nikhat-zareen-starts-fresh-for-upcoming-asian-games-cwg-2186963.html. பார்த்த நாள்: 18 October 2020. 
  19. "Boxer Nikhat Zareen pleased to be back in TOPS" (in en). sportstar. 17 September 2020. https://sportstar.thehindu.com/boxing/nikhat-zareen-tops-boxing-sports-authority-of-india-union-ministry-mary-kom-sports-news/article32631422.ece. பார்த்த நாள்: 18 October 2020. 
  20. "Nikhat Zareen is brand ambassador of Nizamabad" (in en). The Hindu. 13 December 2014. http://www.thehindu.com/news/national/telangana/nikhat-zareen-is-brand-ambassador-of-nizamabad/article6686616.ece. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகத்_ஜரீன்&oldid=3702314" இலிருந்து மீள்விக்கப்பட்டது