உள்ளடக்கத்துக்குச் செல்

நா டி'சோசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நா டி சோசா
Na D'Souza
பிறப்புநோர்பர்ட் டி'சோசா
(1937-06-06)6 சூன் 1937
சாகரா, மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியா (தற்போதைய அமைவிடம்: சிவமோகா மாவட்டம், கருநாடகம், இந்தியா)
இறப்பு5 சனவரி 2025(2025-01-05) (அகவை 87)
மங்களூரு, கருநாடகம், இந்தியா
தொழில்எழுத்தாளர்
தேசியம்இந்தியன்
வகைபுனைவு, வரலாறு

நா டி'சோசா (Na D'Souza) கன்னட மொழியில் எழுதும் ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். இவர் நோர்பர்ட் டி'சோசா என்ற பெயராலும் அறியப்படுகிறார்.[1] மடிக்கேரியில் நடைபெற்ற 80-ஆவது கன்னட சாகித்ய சம்மேளனத்தின் தலைவராக இவர் இருந்தார்.[2]

வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

நா டி'சோசா கர்நாடக மாநிலம் சாகரா நகரத்தில் 1937 ஆம் ஆண்டு சூன் மாதம் 6 ஆம் தேதியன்று பிறந்தார். தனது தொடக்கக் கல்வியை புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியிலும், சிமோகாவின் சக்யாத்ரி கல்லூரியிலும் முடித்தார். கர்நாடக பொதுப்பணித் துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றினார். பிலோமினா டி'சோசாவை மணந்த இவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர்.[3]

நா டி'சோசா நாற்பதற்கும் மேற்பட்ட நாவல்கள், பல சிறுகதைகள், நாடகங்கள் மற்றும் குழந்தைகளுக்கான இலக்கியங்களை எழுதியுள்ளார்[4] மேலும் இவர் வெளியிட்ட மொத்த புத்தகங்களின் எண்ணிக்கை 94 என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது.[5] தனது குழந்தைகள் நாவலான முலுகடய ஊரிகே பந்தவரு நூலுக்காக மத்திய சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரசுகார் விருதைப் பெற்றார்.[4] இவர் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கன்னடத்தில் எழுதினார், மேலும் இவரது நாவல்களான திவீபா மற்றும் கதினா பென்கி ஆகியவை திரைப்படங்களாக எடுக்கப்பட்டு தேசிய விருதுகளை வென்றன.[2] இவர் பொது நலன் சார்ந்த போராட்டங்களிலும் பங்கேற்றார்.[2] திவீபா போன்ற அவரது சில படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[6]

டி'சோசா 2025 ஆம் ஆண்டு சனவரி 5 ஆம் தேதியன்று தனது 87 வயதில் இறந்தார்.[7]

பாராட்டுகள்

[தொகு]
  • கர்நாடக சாகித்ய அகாடமி விருது – 1993 [8]
  • கர்நாடக ராஜ்யோத்சவா விருது – 1998 [9]
  • அல்வாசு நுதிசிறி விருது – 2006 [10]
  • குவேம்பு பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டம் (D.Lit)[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Raghuram, M. (6 January 2025). "Kannada Writer and Thinker Dr Na. D'Souza Passes Away at 87". www.thehansindia.com (in ஆங்கிலம்). Retrieved 6 January 2025.
  2. 1 2 3 "Na D'Souza to chair Kannada literary fest". 4 December 2013 இம் மூலத்தில் இருந்து 7 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131207064328/http://www.deccanherald.com/content/372837/na-d039souza-chair-kannada-literary.html. பார்த்த நாள்: 4 December 2013.
  3. "Mr Na D'Souza Chosen as the President of the 80th Kannada Sahitya Sammelana". 5 December 2013 இம் மூலத்தில் இருந்து 24 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170624083057/http://www.shimogadiocese.org/news/mr-na-dsouza.html. பார்த்த நாள்: 2 February 2016.
  4. 1 2 "Na. D'Souza to chair 80th Kannada literary meet". The Hindu. 5 December 2013. http://www.thehindu.com/news/national/karnataka/na-dsouza-to-chair-80th-kannada-literary-meet/article5422400.ece. பார்த்த நாள்: 4 December 2013.
  5. Mulugade, page 186
  6. Dweepa - Island. Oxford University Press. 2013. ISBN 978-0-19-809744-0. Retrieved 6 December 2013.
  7. Well-known writer Na. D’Souza passes away
  8. Mulugade.P 187
  9. Mulugade.P 188
  10. 1 2 Mulugade.P 189

நூற்பட்டியல்

[தொகு]
  • D'Souza, Na (2011). Mulugade (Kannada Novel) (2nd ed.). Ravindra Pustakalaya Chamarajpet Sagar-577 401, India.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நா_டி%27சோசா&oldid=4561648" இலிருந்து மீள்விக்கப்பட்டது