நா. சுந்தர்ராஜ்
தோற்றம்
நா. சுந்தரராஜ் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு | |
பதவியில் 1977-1984 | |
பின்னவர் | த. புஷ்பராஜூ |
தொகுதி | திருமயம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | புதுக்கோட்டை மாவட்டம், காட்டுப்பட்டி | 31 சனவரி 1944
இறப்பு | 23 செப்டம்பர் 1994 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | Retinam |
பிள்ளைகள் | இராதா, இராஜேஷ் சுந்தர்ராஜ் |
வாழிடம் | புதுக்கோட்டை மாவட்டம், இராஜகோபாலபுரம் |
சமயம் | இந்து |
நா. சுந்தரராஜ் (N. Sundarraj) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் மூன்றுமுறை புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்துள்ளார். இவர் எட்டாவது மக்களவை (1984-89), ஒன்பதாவது மக்களவை (1989 - 91), பத்தாவது மக்களவை (1991 - 94) உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் இவர் திருமயம் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறையும் இருந்துள்ளார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977 இல் திருமயம் தொகுதியில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980 இல் இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். .[1][2]