நாவேந்தன் (முருகேசன்)
Appearance
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
நாவேந்தன் (பிறப்பு : 30. நவம்பர் 1945) என்பவர் ஒரு தமிழ் கவிஞர், மொழிபெயர்பாளர் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவரது பக்தி பாடல்கள் குறுந்தகடுகளாக வெளிவந்துள்ளன.
வாழ்கைக் குறிப்பு
[தொகு]நாவேந்தன் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், இராதாபுரம் என்னும் ஊரில் நாராயணசாமி, இணையருக்கு மகனாகப் தையல்நாயகி 30 நவம்பர் 1945 அன்று பிறந்தார். காஞ்சுபுரம் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். கல்லூரியில் பயிலும்போதே கவிதைகள் எழுதியதால் கல்லூரி கவிஞர் என்றழைக்கப்பட்டார்.
நூல்கள்
[தொகு]படைப்புகள்
[தொகு]- வீணை மலர்கள் (கவிதைத் தொகுப்பு)
- இன்று வந்த இறந்த காலம் (காதலர்களின் பிரிவை அடிப்படையாகக் கொண்ட கவிதைத் தொகுப்பு)
- மலர்களின் மாநாடு (கவிதைத் தொகுப்பு) 2011 ஆண்டு தமிழக அரசின் பெற்றது.[1]
- அன்னை எங்கே (கவிதை நாடகம்)
- ஆரோக்கியமே ஆனந்தம் (நல்வாழ்வு விழிப்புணர்வு கையேடு)
மொழிபெயர்புகள்
[தொகு]- உலகக் கவிதை மேடை அமைப்போம் (50 சோவியத் கவிதைகளை ஆங்கிலத்தில் இருந்து செய்த தமிழாக்கம்)
- கலீல் ஜிப்ரானின் தத்துவக் கதைகளும் கவிதைகளும் (கலீல் ஜிப்ரானின் கவிதைகளின் தமிழாக்கம்)
- இந்துக்களின் வாழ்க்கை நெறி, (முனைவர் சி கே கரியாலியின் Hindu way of Life, நூலின் தமிழாக்கம்)
- பெண்களுக்கே சொந்தம் (முனைவர் சி கே கரியாலியின் Womens Own நூலின் தமிழாக்கம்)
- தமிழ் நாட்டின் முதன்மைக்கு அம்மா மாடல் (முனைவர் சி கே கரியாலியின் Amma Model of Development iñ TN நூலின் தமிழாக்கம்)
- நான் பெறாத இரு புதல்வியர் (ஆளுநர் எஸ் எஸ். பர்னாலாவின் My Other Two Daughters என்ற நூலின் தமிழாக்கம்)
- உலகம் பேசும் காதல் மொழி (ஆங்கிலக் காதல் கவிதைகளின் தமிழாக்கம்)
இசைப் பாடல் குறுந்தகடுகள்
[தொகு]- ஜய ஜய சாயி
- ஆனைமுகமும் ஆறுமுகமும்
- அருட்பெருஞ்ஜோதி
- சிவாலயம் (இசையமைத்தவர் திருச்சி லோகநாதன)
பாடல் எழுதிய திரைப்படங்கள்
[தொகு]- கல்யாண வைபோகம்[2]
- வாணி மஹால்
- சங்கராபரணம் (தமிழ்)
- கேட்டவரெல்லாம் பாடலாம்
உசாத்துணை நூல்
[தொகு]- தமிழ் இலக்கிய வரலாறு, மது. ச. விமலானந்தம்
- ↑ தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2011[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-04-04. பார்க்கப்பட்ட நாள் 2020-04-13.