உள்ளடக்கத்துக்குச் செல்

நாவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாவி
செட்டம்பர் 2015இல் நாவியின் திரைக்காட்சி
வலைத்தள வகைசந்திப்பிழை திருத்தி
கிடைக்கும் மொழி(கள்)தமிழ்
உருவாக்கியவர்நீச்சல்காரன்
வணிக நோக்கம்இலவசம்
பதிவு செய்தல்இல்லை
வெளியீடு2012
தற்போதைய நிலைஇயங்குகிறது
உரலிdev.neechalkaran.com/p/naavi.html


நாவி (Naavi) என்பது ஒரு தமிழ்ச் சந்திப்பிழை திருத்தி ஆகும்.[1] இது சில மரபுப்பிழைகளையும் சரிசெய்யக்கூடியது.[2] இதனை வலைத்தள இடைமுகத்தினூடாகப் பயன்படுத்தமுடியும்.[3]

வரலாறு

[தொகு]

இச்சந்திப்பிழை திருத்தியானது, நீச்சல்காரன் என்ற புனைபெயரைக் கொண்ட இராசாராமனால்[4] 2012இல் வெளியிடப்பட்டது.[3] தனது வலைப்பதிவில் சந்திப்பிழைகள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து, சந்திப்பிழைகளைச் சரிசெய்வதற்கான ஒரு தமிழ் மென்பொருளாக நாவியை உருவாக்கினார்.[3] இது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் மூலம் 70% துல்லியமாகச் சந்திப்பிழைகளைத் திருத்த முடிவதாக (2012 சூலை 22இன்படி) நீச்சல்காரன் தெரிவித்தார்.[2]

சந்திப்பிழைகளைத் திருத்தும் முறை

[தொகு]

தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளையும் ஞானச்செல்வனின் "பிழையின்றித் தமிழ் பேசுவோம் எழுதுவோம்" என்ற நூலையும் தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடங்களையும் அடிப்படையாகக் கொண்டு, இம்மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.[5] ஒரு தமிழ்ச் சொற் பட்டியலை மூலமாகக் கொண்டு இம்மென்பொருள் சந்திப்பிழைகளைத் திருத்துகின்றது.[6]

வசதிகள்

[தொகு]

நாவி வலைத்தளத்தில் ஒருங்குறியில் அமைந்த ஒரு தமிழ்க் கிளவியத்தை இட்டு, "ஆய்வு செய்" என்பதை அழுத்தியதும், தெளிவான சந்திப்பிழைகளையும் மரபுப்பிழைகளையும் வேறாகவும் மென்பொருளின் ஐயப்பாட்டுக்குரியவற்றையும் மென்பொருளால் பரிந்துரைக்கப்படுபவற்றையும் வேறாகவும் வெவ்வேறு நிறங்களில் காண்பிக்கும்.[7] பிளாகர் வலைப்பதிவுகளிலிருந்து இத்தளத்திற்கு நேரடியாக இணைப்புத் தரமுடியும்.[2] வாணி என்ற தமிழ் எழுத்துப்பிழை திருத்தியில், சந்திப்பிழைகளைக் கண்டறிவதற்காக இச்செயலி இணைக்கப்பட்டுள்ளது.[8]

இதனையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சந்திப்பிழை திருத்தி - Sandhi Checker". திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம். Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 16 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 2.2 "புதிய சந்திப்பிழை திருத்தி". எதிர்நீச்சல். பார்க்கப்பட்ட நாள் 16 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. 3.0 3.1 3.2 என். கௌரி (21 ஆகத்து 2015). "தப்பில்லாமல் தமிழ் எழுதலாம் தமிழா!". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 16 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. க. சே. ரமணி பிரபா தேவி (8 மே 2015). "நெட்டெழுத்து: இணைய ஊருக்கு உழைக்கும் நீச்சல்காரன்!". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 16 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "வல்லினம் மிகுமிட விதிகள்". எதிர்நீச்சல். பார்க்கப்பட்ட நாள் 16 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "நாவி சந்திப்பிழை திருத்தி". தமிழ்ப்புள்ளி. பார்க்கப்பட்ட நாள் 16 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "முற்றம்". உண்மை. சூலை 16-31 2012. 
  8. ஸ்ரீனி (22 நவம்பர் 2015). "இணையத்தில் தமிழ் பிழை திருத்தும் கலை 'நீச்சல்காரன் வலைப்பூ' ராஜாராம்". தினமலர். 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவி&oldid=3986464" இலிருந்து மீள்விக்கப்பட்டது