நாவாய்ப் பொறியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாகித்திய இளவரசி தோர்சாவின், பரோ தீவுகள், ஆகத்து 2009

நாவாய்க்கட்டகம் (Naval architecture), அல்லது நாவாய்ப் பொறியியல் (Naval Engineering) என்பது தானூர்திப் பொறியியல், வான்வெளிப் பொறியியல் ஆகியவற்றுடன் இணைந்துஊர்திப் பொறியியல் என்ற பொறியியல் புலக் கிளையாகும். இதில் பொரியியல் வடிவமைப்பைப் பொறுத்தவரையில், எந்திர, மின், மின்னணு, மென்பொருள், பாதுகாப்புப் பொறியியல் புலங்கள் அடங்கியுள்ளன, நாவாய்ப் பொறியியலில் கப்பல் கட்டுதல், இயக்குதல், பேணுதல் ஆகிய பொறியியல் பணிகள் அடங்கும்.[1][2] நாவாய்ப் பொறியியல் பணியில் அடிப்படை, பயன்முறை ஆராய்ச்சியும், வடிவமைப்பும் உருவாக்கமும் கடல்சார் ஊர்தியின் வாணாள் கட்டங்கள் அனைத்திலும் வடிவமைப்பு மதிப்பீடும் கணக்கீடுகளும் தேவைப்படும். இப்பணியில் கலத்தின் தொடக்கநிலை வடிவமைப்பு, அதன் விரிவான வடிவமைப்பு, கட்டுமானம், கடல் இயக்க வெள்ளோட்டங்கள், இயக்கமும் பேணுதலும், செலுத்தலும் நங்கூரப் படுத்தலும் முதன்மையான செயல்படுகளாகும். நாவாய்களை ப்ழுதுபார்க்கவும் கட்டமைப்பு மாற்றத்துக்கும் புதுப்பித்தலுக்கும் கல வடிவமைப்புக் கணக்கீடுகள் தேவைப்படுகின்றன. இதில் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளும் அழிவு அல்லது சிதைவுக் கட்டுபாட்டு விதிமுறைகளும் கலவடிவமைப்புக்கான ஒப்புதலும் சான்றிதழும் கூட சட்டவகை சட்டஞ்சாராவகை தேவைகளைச் சந்திக்க தேவைப்படும்.

பேணுதல் பணிக்காக நீரில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட பந்தயத் தோணிக் கூடு

முதன்மைக் கருப்பொருள்கள்[தொகு]

"கலம்" எனும் சொல் அனைத்து நீர்க்கலங்களையும் உள்ளடக்கும். இதில் நிலநீர்க் கலம், நீர்வான் கலம் ஆகியனவும் அடங்கும். இவை நீர்ப் போக்குவரத்துக்காகப் பயன்படலாம் அல்லது பயன்படாமலும் இருக்கலாம்.[3] முக்கியக் கூறுகள்:[4]

நீர்நிலைப்பியல்[தொகு]

கப்பலின் உடல் உருவத்தைக் காட்டும் தரைப்படம்

நீர்நிலைப்பியல் நீரில் கலம் ஓய்வில் உள்ளபோது அமையும் நிலைமைகளையும் அதன் மிதக்கும் திறமையையும் கருதுகிறது. இதில் கல மிதப்புதிறம், இடப்பெயர்ச்சி, பிர நீர்நிலைப்பியல் பண்புகளாகிய கலச்சாய்வு (கல நெடுக்குவாட்ட சாய்வு), கல் நிலைப்பு (காற்ரு வீச்சு, நீரலை, சுமை ஆகியவை செயல்படும்போது கலம் தன் இயல்பு நேர்க்குத்து இருப்புக்கு மீளுந்திறம்) ஆகியன அடங்கும்.[5]

நீரியங்கியல்[தொகு]

நீரியங்கியல் கலவுடல், கலவணரி, கலக்கம்பம், கலஓட்டியலகுகள் அல்லது சுக்கான், உந்தித்தள்ளியின் சுருங்கைகள் ஆகிவற்றின் மீதான நீர்ப்பாய்வைக் கருப்பொருளாகக் கொள்கிறது.

கலத் தடை – கலம் நீரில் இயங்குவதற்கான தடை முதன்மையாக கலவுடல் சுற்றியுள்ள நீர்ப்பாய்வால் ஏற்படுகிறது. கலம் ஓட்டுவதற்கான திறனளவு கலத்தடையைப் பொறுத்து அமைகிறது.

கலச் செலுத்தம் அல்லது கலவோட்டம் – முற்செலுத்திகளையும் (ஓட்டிகளையும்) உந்திதள்ளிகளையும் தாரை எக்கிகளையும் கலப் பாய்மரங்களையு பயன்படுத்திக் கலத்தைச் செலுத்துதல் அல்லது ஓட்டுதல். கலம் ஓட்ட உட்கனற்பொறி பயன்படுகிறது. சில கலங்கள் அணுக்கரு ஆற்றலை அல்லது சூரிய ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.

கல இயக்கங்கள் – கடல்வழியில் அலைக்கும் காற்று வீச்சுக்கும் ஈடுகொடுத்து செல்லும் கல இயக்கங்கள்.

கட்டுபடுத்துதிறம் – கலம் தன் இருப்பிலும் திசையிலும் கட்டுபடுத்தி நிலைநிறுத்துந்திறம்.

மிதப்பும் நிலைப்பும்[தொகு]

ஒரு மிதவை நீரின் மேற்பரப்பில் மிதக்கும்போது அதற்கு அறுபோக்கு கட்டற்ற இயங்குமுகங்கள் அமைகின்றன; இவை சுழற்சியாகவோ நேரிடப் பெயர்ச்சியாகவோ அமையும்.

 • முன்பின் பெயர்ச்சி அலைப்பு எனப்படும்.
 • குறுக்குவாட்டப் பெயர்ச்சி வீச்சு எனப்படும்.
 • குத்துப் பெயர்ச்சி எழுச்சி/அமிழ்வு எனப்படும்.
 • குறுக்குவாட்ட அச்சுச் சுழற்சி கிடைச் சுழல்வு அல்லது புரள்வு அல்லது புரி(pitch) அல்லது சீர் (trim) எனப்படும்.
 • முன்பின் அச்சுச் சுழற்சி குத்துச் சுழல்வு அல்லது உருள்வு (roll) எனப்படும்.
 • குத்துநிலை அச்சுச் சுழல்வு திரும்பு (yaw).

நெடுக்குவாட்டச் சாய்வுகளுக்கான நெடுக்கவாட்ட நிலைப்பு கலப் புவி ஈர்ப்பு மையத்துக்கும் நெடுக்குவாட்ட மாறுமையத்துக்கும் இடையில் அமையும் தொலைவைச் சார்ந்துள்ளது. வேறுவகையில் சொல்ல்லவேண்டுமானால், கலம் தன் ஈர்ப்புமையத்தைப் பேணுவதற்கான அடிப்படை, கலத்தின்முன்புற, பின்புற வெட்டுமுகங்களுக்குச் சமத் தொலைவுகளில் அமைந்த கலத் தொலைவு இணைகளைச் சார்ந்துள்ளது.

ஒரு பொருள் நீரில் மிதக்கும்போது அதைக் கீழே இழுக்கும் ஈர்ப்பு விசை செயல்படுகிறதுt. பொருள் உள்ளமிழாமல் மிதக்க, அதம் மீது மேல்நோகிய நீர்நிலைப்பியல் விசை ஈர்ப்பு விசைக்கு எதிராக பொருளின் மீது செயல்படுகிறது. பொருள் நிலைப்பில் இருக்க பொருள் மீது செயல்படும் இந்த இருவிசைகளும் ஒரே பருமையிலும் ஒரே இயக்கக் கோட்டிலும் அமைதல் வேண்டும். இந்த விவரிப்பு இயங்காத நீரில் கட்டற்று மிதக்கும் பொருளுக்கு மட்டுமே பொருந்தும்; மற்ற நிலைமைகளில் இந்த விசைகளின் பருமை மாறும். இந்நிலை பொருளைக் கிடைநிலை வீச்சுக்கு (குறுக்குவாட்டப் பெயர்ச்சிக்கு) ஆட்படுத்தும்.[6]

பின்னால் பார்த்தபடி அமையும் எண்ணெய்த் தகரிக்கல மேற்றளம்

கட்டமைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. RINA – Careers in Naval Architecture
 2. Biran, Adrian; (2003). Ship hydrostatics and stability (1st Ed.) – Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-4988-7
 3. Convention On The International Regulations for Preventing Collisions at Sea, 1972,As Amended; International Maritime Organization; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-801-4167-8
 4. Lewis V, Edward (Ed.); (June 1989). Principles of Naval Architecture (2nd Rev.) Vol. 1 – Society of Naval Architects and Marine Engineers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-939773-00-7
 5. "www.usna.edu". Archived from the original on 2021-04-12. பார்க்கப்பட்ட நாள் 2018-05-29.
 6. Tupper, Eric (1996). Introduction to Naval Architecture. Oxford, England: Butterworth-Heinemann.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Naval architecture
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவாய்ப்_பொறியியல்&oldid=3588719" இலிருந்து மீள்விக்கப்பட்டது